செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

கோவிந்தம் பரமானந்தம்

கோவிந்தம் பரமானந்தம்

கோவிந்தம் பரமானந்தம் 

ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


கோவிந்தம் பரமானந்தம்
கோவிந்தம் பரமானந்தம்
உன்னை நினைக்கையிலே
உள்ளத்தில் ஊற்றெடுக்குதே
சுகந்தமான வசந்தம்

இருள்  கவ்விய   என் மனம்
ஒளி வெள்ளத்தால் நிறைந்தது
மாதவா கேசவா கோபாலா
என்றழைத்தபொழுதிலே (கோவிந்தம்)

நீயின்றி இவ்வுலகில்லை
இவ்வுலக இயக்கமும் இல்லை
எம் போன்றோரின் மன  மயக்கம் தீர்க்க
உந்தன் சரணத்தை  விட்டால்
வேறு வழியில்லை  (கோவிந்தம்)

அழியும் பொருளுக்காக ஏங்கி
அலையும் திரியும் மனம்
பிறந்து மடியும் உயிர்களின் மீது
பாசம் கொண்டு தவிக்கும் மனித இனம்
பிறர் உயர்வு கண்டு பொறுக்காது
தாப தீயினால் வெந்து மாளும் குணம்
நீங்க நல்வழி காண வேண்டாமோ ?(கோவிந்தம்)

பாவம்  போக்கி ஆன்மாவை பரிசுத்தமாக்கி
பரமபதம் அளிக்கும் உன் பாவன  நாமம்
கைக்கொள்ளவேண்டும் ஜென்மம் கடைத்தேற (கோவிந்தம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக