செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

பனி படர்ந்த மலையின் உள்ளே பனி படர்ந்த மலையின் உள்ளே

பனி படர்ந்த மலையின் உள்ளே

பனி படர்ந்த மலையின் உள்ளே 

பனி படர்ந்த மலையின் உள்ளே





பாங்காய் அமர்ந்திருக்கும் பரமசிவன்




வேங்கடவன் போல் மலைமேல்  நின்று
காட்சி தரும் நாளும் வருமோ !
காட்சி தரும் நாளும் வருமோ !


அன்பெனும் பிடிக்குள்  அகப்படும் மலையே
அலைபாயும் மனதை அடக்கி உன்னை
அகத்துள் காணும் நாள்தான் வருமோ !
அகத்துள் காணும் நாள்தான் வருமோ !

பக்தரெல்லாம் வணங்கி மகிழ 
லிங்க  உருவில்  வடிவம்  கொண்டாய்
மூர்த்தி வடிவில் கோயிலில் நின்றாய்
அன்புடன் அனைத்து பூஜைகளை ஏற்றாய்
ஆன்ம ஒளியாய் உன்னை கண்டு
மகிழும் காலம் என்று வருமோ !
மகிழும் காலம் என்று வருமோ !




           தி. ரா ..பட்டாபிராமன் 

திருஆலங்காட்டில்   களி நடனம் ஆடும் தேவா
என் சிந்தையில் எப்போதும் நடனமிடும் தேவா
இதயத்தில் உள்ளே உந்தன் ஆடலைக்
கண்டு மகிழும்  நாள் என்று வருமோ !
கண்டு மகிழும்என்று வருமோ !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக