நாம சங்கீர்த்தனம் -ஏன் உயர்ந்தது?
நாம சங்கீர்த்தனம் -ஏன் உயர்ந்தது?
பகவானை அடைய ,உணர, அனுபவிக்க,தன்னை மறக்க
பக்தி உதவுகிறது
ஒன்பது விதமான பக்தி மார்க்கங்கள் இருக்கின்றன
அவரவர் வாழ்க்கை முறை, மன நிலை ஆகியவற்றைப் பொறுத்து
அது மாறிக்கொண்டே இருக்கும்.
ஆனால் எல்லோரையும் ஈர்க்கக்கூடியது நாம் சங்கீர்த்தனம் ஒன்றுதான்.
அதற்கு மட்டும் ஏன் அவ்வளவு சக்தி?
பிரமத்தை உருவமற்ற பரம்பொருளாக காணும் அத்வைத
சித்தாந்தத்தை உண்டாக்கிய ஆதி சங்கரரும் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு பாப மூட்டையை தொலைக்க முடிவாக "கோவிந்த " நாமத்தை பாட சொல்லிவிட்டதிலிருந்தே நாம சங்கீர்த்தனத்தின் மகிமையை புரிந்து கொள்ளலாம்
எல்லாம் நம்மை கடைத்தேற்ற ஸ்ரீமன் நாராயணனின் பண்ணிய கைங்கர்யம்தாம்
நாதம் எதிலிருந்து வருகிறது?
சங்கிலிருந்து நாதம் வருகிறது.
அதற்கு "சங்க நாதம் "என்று பெயர்.
சங்கு யார் கையில் உள்ளது?
சாஷாத் நாராயணின் நாராயணன் கரத்தில்உள்ளது
சங்கு எங்கு பிறந்தது ?
பரந்தாமன் பள்ளி கொண்டுள்ள பாற்கடலில் பிறந்தது
அவன்அ திருக்கரத்தில் ஏந்தியுள்ள "பாஞ்ச ஜன்யம்"என்ற பெயர் கொண்ட அந்த சங்கிலிருந்து எழுந்த நாதம் பாரத போரில் எதிரிகளை அழித்தது .
சங்கு வெண்மை நிறம்.
நம் உள்ளமும் பால் போல் வெண்மையாக இருக்க வேண்டும்.
சங்கினால்தான் பிறந்த குழந்தைக்கு அந்நாளில் தெய்வ பக்தியுடன் பால் புகட்டுவார்கள்.அவர்கள் நல்ல சம்காரங்களுடன் வளர்ந்தார்கள்.
இன்றோ எல்லாம் மாவு மயம் !
உட்கொள்ளுவதற்கும் (கொல்வதற்கும் )
வெளிப் பூச்சுகளுக்கும் பலவிதமான மாவுகள்.
பகவானுக்கு சங்காபிஷேகம் செய்வது எல்லா ஆலயங்களிலும் நடைமுறையில் உள்ளது.
பகவான் கையில் ஏந்தியுள்ள சங்கின் அம்சம்தான் நம் நெஞ்சுக் குழியில் ஓசை இழுப்பும் கருவியாக அமைந்துள்ளது.
அதைக் கொண்டு அவன் புகழை பாட வேண்டும். அதனால்தான் நாம சங்கீர்த்தனத்திற்கு இவ்வளவு ஏற்றம்.
அந்த கருவியை பயன்படுத்தி அவன் நாமத்தை திரும்ப திரும்ப நாவு தழும்பேற சொல்லி சொல்லி நான் என்னும் அகந்தையை அழிக்க பயன்படுத்தி உய்யும் வழியை தேட வேண்டும்.
மாறாக நம் அகந்தையை தூண்டி நம்மை அழிவு பாதைக்கு கொண்டு சொல்லும் மற்ற சொற்களை முற்றிலும் தவிக்கவேண்டும்.
Images courtesy-google
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக