ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

இந்திய சுதந்திர தினம் (15-8-2016)-




இந்திய சுதந்திர தினம் (15-8-2016)

சிறப்பு

இசையும் நானும் (127)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  127வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -தமிழ் 


தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார்.பாடல் 

"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே"

ஆடுவோமே பள்ளுப்  பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று (ஆடு )

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே-இதை
தரணிக்கெல்லாமெடுத்து   ஓதுவோமே (ஆடு )

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு கழித்திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர் பாய்ச்சி மாய மாட்டோம்
வெறும் வீணருக்கு உழைத்துடலம்  ஓயமாட்டோம் (ஆடு )

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்- இது
நமக்கே உரிமையாம்  என்பதறிந்தோம்
இந்த பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்வோம்
பரி பூரணனுக்கே யடிமை செய்து வாழ்வோம்
ஆடுவோம்! ஆடுவோம்! ஆடுவோமே!


இந்திய குடி மக்கள் யாவருக்கும் என் சுதந்திர தின வாழ்த்துக்கள் 

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்-
ஆனால் ஆனந்த வாழ்வை 
நாம் அனைவரும் எப்போது பெறுவோம்? 


1 கருத்து: