செவ்வாய், 11 நவம்பர், 2014

எண்ணங்களுக்கு என்றும் அழிவில்லை ;அதனால் நன்மை தரும் எண்ணங்களையே எப்போதும் எண்ணுக

எண்ணங்களுக்கு 
என்றும் அழிவில்லை ;அதனால் 
நன்மை தரும் எண்ணங்களையே எப்போதும் எண்ணுக 

நம் மனதில் எண்ணங்கள்
இடைவிடாமல்
தோன்றிக் கொண்டே இருக்கின்றன

அதை நிறுத்துவது மிக கடினம்
ஆனால் அதை ஒருவன் செய்துவிட்டால்
அவன் யோகி ஆகிவிடுகிறான்.

எண்ணங்கள் இருக்கும்வரை மனம்
இறைவனை உணரமுடியாது.

நம்முடைய முழு சக்தியும் மனம் மூலம்தான்
வெளியேறிக் கொண்டிருக்கின்றன

அதை தடுத்து நிறுத்தும் வல்லமை
நமக்கு இருந்தும் நாம் அதை
செயல்படுத்த சக்தியில்லாமல்
செயலற்றுக் கிடக்கின்றோம்.

மனதில் ஒரு எண்ணம் தோன்றிவிட்டால்
அது அதை செயல் படுத்தும்வரை அது
அழியாது .

அதனால்தான் நாம் இந்த உலகில் பிறவி
எடுத்ததிலிருந்து சில குறிப்பிட்ட செயல்களை
தினமும் செய்துகொண்டிருக்கின்றோம். அதை நம்மால்
அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது

எதைப் பற்றி நாம் அதிகமாக சிந்திக்கிறோமோ
அவ்வளவு விரைவில் நிறைவேற்ற முடியும்.
அல்லது நிறைவேறும்.

நல்ல எண்ணங்கள் நமக்கு நன்மையை செய்யும்
இந்த உலகிற்கும் நன்மையை செய்யும்.

தீய எண்ணங்கள் இரு பக்கம் தீட்டப்பட்ட கத்தி
போன்றது அது நமக்கும் தீங்கு செய்யும்
பிறருக்கும் தீங்கு செய்யும்.

ஒரு நல்ல எண்ணத்தை   நாம் தீவிரமாக
சிந்தித்து அதை நம் மனதில் காட்சிபடுத்தி
விட்டோமானால் அது நிறைவேறிவிடும்
அதுபோன்ற ஒத்த சிந்தனை உடையவர்கள்
நம்முடன் இணைந்துகொண்டு
அதை வெற்றி பெற செய்வார்கள்.
அதனால் உலகம் நன்மை பெறும்

தீய  எண்ணங்களும் ஒரு தனி மனிதனின்
உள்ளத்தில்தான் தோன்றுகிறது. அவனைப்போல்
தீய எண்ணம்  கொண்டவர்கள் அவனுடன் இணையும்போது
இந்த உலகம் அழிவை சந்திக்கிறது.

எனவே நன்மை பயக்கும் நல்ல எண்ணங்களை
எப்போதும் எண்ணுவோம்.அனைவரும்
 இந்த உலகில் இன்பமாக வாழ்வோம்.

தீய எண்ணம் எண்ணுபவர்களை விட நல்ல எண்ணம் என்னும்
மனிதர்கள் பெருகினால் தீமை இந்த உலகை விட்டு ஓடிவிடும்.

அதனால்தான் இந்து மதம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழுக எல்லா உயிர்களும் அமைதியாக வாழுக என்ற பிரார்த்தனை இந்த
உலக மக்களும் வழங்கியுள்ளதை புரிந்துகொள்ளவேண்டும்.



2 கருத்துகள்:

  1. நல்லனவற்றையே எண்ணுவோம்
    நலமுடன் வாழ்வோம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. "நல்ல எண்ணங்கள் நமக்கு நன்மையை செய்யும்
    இந்த உலகிற்கும் நன்மையை செய்யும்." என்ற
    கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
    சிறந்த உளநல வழிகாட்டல்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு