வெள்ளி, 28 நவம்பர், 2014

இசையும் நானும் (1)

இசையும் நானும் (1)

இசையும் நானும் (1)

இசை என்பதன்   பொருளே
எல்லா உயிர்களுடன்
இசைந்து இன்பமாக வாழ்வதுதான்.

அப்படி இசைந்து போகாதவர்கள்
அனைவரின் வசைக்கு
ஆளாவதைத் தவிர
வேறு வழியில்லை.

அதனால்தான் திருவள்ளுவரும்
ஈதல் இசைபட வாழ்தல் என்று
ஒரு குறளை இயற்றினாரோ
என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த உலகில் இசை பாடுபவர்களின்
கூட்டம் ஒரு பக்கம் பெருகினாலும்
வசை பாடுவவர்களின் கூட்டம்
பலமடங்கு பெருகிவிட்டதால்.
எல்லா ஊடகங்களிலும் அவர்களின்
குரலே ஓங்கி ஒலிக்கிறது.

இசையாக இறைவன் இருக்கின்றான்
அவன் மனதை இசையால் இளக
வைக்க முடியும் என்று அறிந்து கொண்ட
கணக்கற்ற மகான்கள். பாடல்களை
இயற்றி பாடி நமக்கு அளித்திருக்கிறார்கள்

நாமாக புதிதாக ஏதும் செய்யாவிட்டாலும்
அவற்றிக் கற்றும் பாடியும் ஆனந்தம்
அடையலாம் கேட்டு இன்புறலாம்.

பாடுவதைபோன்றே இசைக்கருவிகளும்
முக்கிய இடத்தை வகிக்கின்றன .கைதேர்ந்த
கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைக்கும்போது
நம் இதயத்தில் அந்த தெய்வீக இசை ஊடுருவி
நம்மை மெய் மறக்கச் செய்து இறைவனிடம்
ஒன்றச் செய்துவிடுகிறது என்பதை யாரும்
மறக்கமுடியாது.

ஆனால் எல்லோருக்கும் இசையைக் கற்கவும்
அதில் உச்ச நிலையை அடையவும் வாய்ப்பு
கிடைப்பதில்லை. இன்று லட்சக்கணக்கான
இசைக் கலைஞர்கள் இருந்தாலும்  இறைவனை
அடைய பயன்படுத்துபவர்கள் மிக சிலரே.

எனக்கும் இசை கற்க வேண்டும் என்ற ஆசை.
ஆனால் அதற்க்கு வாய்ப்பில்லை. அதனால்
இசையைக் கேட்க முயற்சி செய்தேன்.

கற்றிலனாயினும் கேட்க என்றார் திருவள்ளுவர்
நல்ல இசையை கேட்டதினால் அமைதியற்ற
என் மனம் சாந்தியடைந்தது ,மனதில் உள்ள சஞ்சலங்கள்
மறைந்துவிட்டன.

சரி ஏதாவது ஒரு இசைக்கருவியைக் கற்றுக்கொண்டு
அதில் ஏதாவது ஒன்றிரண்டு பாடல்களை இசைத்து
தீரவேண்டும் என்ற வெறி என்னுள் 10வது வயதிலேயே
ஏற்பட்டது. நிற்பதற்கு  கூட நேரமில்லாமல் 60 ஆண்டுகள்
ஓடிவிட்டது. ஆனால். எண்ணங்கள் என்றும் சாவதில்லை.
அதற்க்கு அழிவில்லை.

நான் தேர்ந்தெடுத்த இசைக்கருவி மவுத்தார்கன்
சிறு வயதில் கோயில் திருவிழா சந்தையில் சாக்லேட்
நிறம் பூசப்பட்டு 10 பைசாவிற்கு விற்கப்படும் மவுதார்கன் தான்
என்னுடைய முதல் ஈர்ப்பு . எப்போது கடைக்கு போனாலும் அதைதான் என். கண்கள் காணும் அதை வாங்கக் கூட கையில் காசு கிடையாது.அப்போது.

அதுபோல்  கொட்டாங்கச்சி .வையலின்.அது வாங்கினாலும்
விற்பவன் கையில் இசைக்கும் அற்புதமாய்
என் கையில் வந்தவுடன் கற்றாழை நாரினால் செய்யப்பட்ட
வில் அறுந்துபோய் அபஸ்வரமாய் ஒலிக்கும்,அல்லது மண்ணினால்
செய்யபட்ட அந்த வயலின் உடைந்துபோகும் அல்லது அதன்மேல் ஒட்டப்பட்ட காகிதம் கிழிந்து என் உற்சாகத்தை குழி தோண்டி புதைத்து விடும்.

அவ்வப்போது என் வசதிக்கேற்ப குறைந்த விலையில் கிடைத்த  மவுத்தார்கன்களை வாங்கி பயிற்சி செய்து வந்தேன்.
திரும்ப திரும்ப மூன்று திரைப்பட பாடல்கள்தான் நினைவுக்கு வரும்.
எவ்வளவோ பாடல்களைக் கேட்டும் மற்ற எதுவும் நினைவுக்கு வராது.
இசைக்கவும் முடியாது.

கர்னாடக இசையில் யாரும் அவ்வளவாக மவுத்தார்கனை இசைப்பது கிடையாது.ஏதோ சில திரைப்படங்களின் பத்தோடு பதினொன்றாக அது
பயன்படுத்தப்படும்.

நான் முயற்சி செய்து ஒரு பாடலை பயிற்சி செய்துள்ளேன்.
குறைகள் இருக்கும் .விரைவில் குறைகள் இல்லாமல்
நன்றாக இசைக்க முடியும் என்ற  நம்பிக்கை இருக்கிறது,
இவன் முயற்சிக்கு உங்கள் ஊக்கம் தேவை.
அந்த பாடல். (கண்ணே என் கண்மணியே கண்ணனே  கண் வளராய்.
http://youtu.be/Iqf9V9muMaY

4 கருத்துகள்:

 1. மவுத் ஆர்கன் இசையிலோ திரைப் பாடலென்றதும் என் நினைவுக்கு உடனடியாக வரும் பாடல்கள் இளையராஜாவின் 'நிலவு தூங்கும் நேரம்' ஷோலே ஹிந்தித் திரைப்படத் தீம் மியூசிக்.

  எனக்கு சிறுவயது இசைக்கருவிக் காதல் கிடாரின்மேல்! இன்றுவரை எதுவும் வாசிக்கத் தெரியாது. ரசிக்க மட்டுமே தெரியும்.

  இந்தப் பாடலும் கேட்ட நினைவில்லை. இலேசாக கிறிஸ்தவ கீதம் போல இருக்கிறது. :)))

  கஷ்டமான முயற்சி - என்னைப்பொறுத்தவரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்ணே என் கண்மணியே என்ற இந்த பாடல் பாம்பே ஜயஸ்ரீயால் பாடப்பட்டது. .நான் இசைத்தது அதைக் கேட்டுத்தான். அவர் இசையுடன் என்னை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. நான் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறேன்.This is my maiden effort. Still I have a long way to ho.

   song link. below
   https://www.youtube.com/watch?v=iA031uMKjwg

   நீக்கு
 2. என்ன ஒரு பாடல்... சொக்கிப் போனேன்.

  MP3 யில் தேடி எடுத்து செல்லில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரக்கம் வராமல் போனதென்ன காரணம் என்ற பாடலும். உள்ளத்தை உருக்கும். அந்த பாடலை விரைவில் வெளியிட இருக்கிறேன்.

   நீக்கு