ஊக்க (மது) கைவிடேல் !
ஊக்கமது கைவிடேல் என்று
அன்றே சொன்னாள் அவ்வைப்பாட்டி
எந்த செயலைச் செய்தாலும் அதை முடிக்கும் வரை
இடையே சோம்பித் திரியாமல் ஊக்கத்தைக்
கைவிடாமல் இருக்கவேண்டும் என்ற நோக்கில்
பாடி வைத்தாள் அவள்.
அதை தவறாக புரிந்துகொண்டுவிட்டன
ஆளும் அரசுகளும் அதன் குடிமக்களும்.
இன்று அவ்வைப் பாட்டி இருந்தால்
அவள் கையில் உள்ள தடியைப் பிடுங்கி எறிந்துவிட்டு
ஒரு மதுக் கோப்பையை கொடுத்து விடுவார்கள் போலும்.
திரைப்படஉலகமும் குடிப்பவர்களை
மேம்படுத்திக் காட்டியே
காசு பார்க்கிறது .விழாக் கொண்டாடி மகிழ்கிறது
நாட்டிற்குழைத்த நல்லவர்களை
நடு வீதியில் அலையவிடுகிறது
(ம) மது என்றால். முதலில் மயக்கத்தை தந்து
அதன் தொடர்ச்சியாக(து) துன்பத்தை தந்து
உடலும் உள்ளமும் கெட்டு மரணத்தை முன் தேதியிட்டே
பரிசாகத் தரும் அந்த நஞ்சைத் தான் கைவிடேல் என்று
அவ்வைப்பாட்டி சொன்னாதாக அர்த்தம்
கற்ப்பித்துக் கொண்டுவிட்டனர்.
பல ஆண்டுகள் முன்பு மறைவாக குடித்தக் கூட்டம் இன்று
குடும்ப சகிதமாக குடித்து கும்மாளம் போடுகிறது.
இந்த அழகில் குடி வீட்டிற்கு, உடலிற்கு, நாட்டிற்கு கேடு என்ற
அரசு விளம்பரம் வேறு.
என்ன செய்வது?
வேண்டுமென்றே விளக்கில் விழுந்து மாயும்
விட்டில்பூச்சிகளை யார் காப்பாற்றமுடியும்?
அதுவாவது உடனே மரணத்தைத் தழுவிவிடும்
ஆனால் குடிக்கும் மனிதர்களை மரணம் அணு அணுவாகத்தான்
அணுகும் என்பதை என்று உணரப்போகிறார்களோ?
கள்ளை ஒழித்த காந்திக்கு சிலை வைத்து விட்டனர்
வீட்டில் உலை வைக்க உழைத்து ஈட்டிய
காந்தி படம் போட்ட ரூபாய் நோட்டு
குடும்பத்திற்கு உலை வைக்கப் போகுதப்பா!
ஒவ்வொரு நாளும். .

அரசாங்கமே மது விற்கும் இந்நிலைக்கு மாற்றம் என்று வரும்?
பதிலளிநீக்குசாவோம் என்று தெரிந்தாலும் பலர் உணர்வதில்லை... இது தான் உண்மை ஐயா...
பதிலளிநீக்கு