புதன், 2 ஏப்ரல், 2014

ஆப்பிள் பழம்

ஆப்பிள் பழம்தினம் ஒரு ஆப்பிள் தின்றால்
மருத்துவரை நாட வேண்டாம் என்று
ஒரு பழமொழி.

ஆனால் தற்காலத்தில் கிடைக்கும் ஆப்பிள்கள்
எந்த நாட்டில் விளைந்தது என்றும் தெரியாது.
அவை சுவையாக இருக்குமா
என்றும் உத்தரவாதமும் கிடையாது

மேலும் அது மரத்திலிருந்து பறிக்கப்பட்டு,
மெழுகு  பூசப்பட்டு, நமக்கு பல மாதங்கள்
கழித்து  வந்து சேருகிறது.

அதை தோலுடன் உண்டால்
என்ன நோய்கள் வரும் என்றும் தெரியாது.

அதற்க்கு பயன்படுத்தப்படும் பூச்சி  கொல்லி மருந்துகளால்
நம் உடலில் எந்த உறுப்புகள் பாதிக்கப்படும் என்றும் தெரியாது.

அதை தொலை சீவி, உள்ளிருக்கும் வேண்டாத
பகுதிகளை நீக்கி உண்பதற்கும் போதும் போதும்
என்றாகிவிடுகிறது.

ஒரு பழம் 40 ருபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கிறது. 
ஆனால் அது சுவையாக  இருக்குமா மற்றும், உள்ளே கெட்டுப்  போகாமல் இருக்குமா என்பதற்கு எந்த  கடைக்காரரும் உத்தரவாதம் தரமாட்டார்கள். பிடித்தால்  வாங்கு, இல்லாவிட்டால் போ. என்ற விரட்டல் வேறே. 

எல்லாம் நம் தலைஎழுத்து. காசை தண்டம் அழுதும் நல்ல தரமுள்ள பொருட்களை விற்காத பேராசை கொண்ட வியாபாரிகள். கொடுப்பதைத்தான் நாம் வாங்கித்  தொலைக்க வேண்டும். 

அது சரி ஆப்பிள் பழத்தில் தோலை   உரிக்க ஒரு புதிய தொழில் நுட்பம் வந்துள்ளது.

அதை கீழ்கண்ட இணைப்பில் பாருங்கள்.

சற்று ஆபத்தானதுதான்.
ஆனாலும் வேலை விரைவில் முடிந்துவிடும்.

https://www.facebook.com/photo.php?v=666687930057315&set=vb.363469940379117&type=2&theater

5 கருத்துகள்:

 1. ட்ரில்லரும் பீளரும் ஒன்றாக ஆக்ஷனில்...

  பதிலளிநீக்கு
 2. ஆப்பிள் பழம்
  அதற்குள்ளே
  இத்தனை தகவலா?

  பதிலளிநீக்கு
 3. நம் நாட்டில்தான்
  ஏமாற்றுபவர்களைவிட
  ஏமாறுபவர்கள்தான் அதிகம்

  எத்தனை முறை ஏமாந்தாலும்
  மீண்டும் ஏமாற தங்களை
  தயார்ப்படுத்திக் கொள்ளும் உத்தம
  பண்பு படைத்தவர்கள் இந்தியர்கள்.

  பதிலளிநீக்கு