திங்கள், 28 ஏப்ரல், 2014

இளமையிற் கல்


இளமையிற் கல் 

குழந்தைகளுக்கு இளமையிலேயே
நல்ல பழக்க வழக்கங்களை
கற்றுத் தருவது பெற்றோர்களின் கடமை.

முக்கியமாக துன்பப்படுபவர்களின் மீது
இரக்கம் காட்டுதல் அவர்களுக்கு ஏதாவது
ஒரு வகையில் உதவும் மனப்பான்மையை
குழந்தைகளின் உள்ளத்தில் விதைக்க வேண்டும்.

அப்படிச் செய்தால்தான் அவர்கள்
எதிர்காலத்தில் மனித நேயம்
உள்ள மனிதர்களாக  மலருவார்கள்.

ஆனால் அப்படி நடப்பதில்லை.
அப்படி நடந்துகொள்ளும் குழந்தைகளையும்
 ஊக்கப்படுத்துவதில்லை
என்பதுதான் இன்றைய நிலை.

கீழ்கண்ட காணொளியைக்  காணுங்கள்.

உங்கள் உள்ளத்திலும் இரக்கம்
என்னும் விதை துளிர் விடத் தொடங்கும்.




https://www.facebook.com/photo.php?v=318749444939359&set=vb.145949978885974&type=2&theater

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

ஊக்க (மது) கைவிடேல் !

ஊக்க (மது) கைவிடேல் !

ஊக்கமது கைவிடேல் என்று
அன்றே  சொன்னாள்  அவ்வைப்பாட்டி

எந்த செயலைச் செய்தாலும் அதை முடிக்கும் வரை
இடையே சோம்பித் திரியாமல் ஊக்கத்தைக்
கைவிடாமல் இருக்கவேண்டும் என்ற நோக்கில்
பாடி வைத்தாள்  அவள்.

அதை தவறாக புரிந்துகொண்டுவிட்டன
ஆளும்  அரசுகளும் அதன் குடிமக்களும்.

இன்று அவ்வைப் பாட்டி இருந்தால்
அவள் கையில் உள்ள தடியைப் பிடுங்கி எறிந்துவிட்டு
ஒரு மதுக் கோப்பையை கொடுத்து விடுவார்கள் போலும்.



திரைப்படஉலகமும்  குடிப்பவர்களை
மேம்படுத்திக் காட்டியே
காசு பார்க்கிறது .விழாக் கொண்டாடி மகிழ்கிறது

நாட்டிற்குழைத்த நல்லவர்களை
நடு வீதியில் அலையவிடுகிறது

() மது என்றால். முதலில் மயக்கத்தை தந்து
அதன் தொடர்ச்சியாக(து) துன்பத்தை தந்து
உடலும் உள்ளமும் கெட்டு  மரணத்தை முன் தேதியிட்டே
பரிசாகத்  தரும் அந்த நஞ்சைத் தான் கைவிடேல் என்று
அவ்வைப்பாட்டி சொன்னாதாக அர்த்தம்
கற்ப்பித்துக் கொண்டுவிட்டனர்.

பல ஆண்டுகள் முன்பு  மறைவாக குடித்தக் கூட்டம்   இன்று
குடும்ப சகிதமாக குடித்து கும்மாளம் போடுகிறது.

இந்த அழகில் குடி வீட்டிற்கு, உடலிற்கு, நாட்டிற்கு கேடு என்ற
அரசு விளம்பரம் வேறு.

என்ன செய்வது?
வேண்டுமென்றே விளக்கில் விழுந்து மாயும்
விட்டில்பூச்சிகளை  யார் காப்பாற்றமுடியும்? 

அதுவாவது உடனே மரணத்தைத் தழுவிவிடும்
ஆனால் குடிக்கும் மனிதர்களை மரணம் அணு அணுவாகத்தான்
அணுகும் என்பதை என்று உணரப்போகிறார்களோ?

கள்ளை  ஒழித்த காந்திக்கு  சிலை வைத்து விட்டனர்


வீட்டில் உலை வைக்க உழைத்து ஈட்டிய
காந்தி படம் போட்ட ரூபாய் நோட்டு
குடும்பத்திற்கு உலை வைக்கப் போகுதப்பா!
ஒவ்வொரு நாளும். .


ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

பொற்காலம் (1)

பொற்காலம் (1)

கடந்த காலம் நல்ல காலம்
பழமை என்றும்பொற்காலம்
என்று இளமைக்காலத்தை கடந்தவர்கள்
அன்றும் சொல்லுவது வழக்கம்
இன்றும் சொல்லுவது வழக்கம்.

வற்றாது ஓடும்  காவேரி அன்று 



நான் சிறிய வயதில் இருக்கும்போது
பெரியவர்கள் அவர்கள் சிறியவர்களாய்
வாழ்ந்த காலம் பொற்காலம் என்று


வறண்டு போன காவேரி இன்று



இப்போதும் அவர்களின் வயதை எட்டியவர்கள்
அதே பல்லவியைத்தான் பாடுகிறார்கள்.

அப்படி என்ன அக்கால நினைவுகளை
மக்களின் மனதை பசுமையாக வைத்திருக்கும்படி
என்ன  இருந்தது என்ற கேள்வி எழலாம்.

நிச்சயமாக அதை அனைவரும் வாழ்வில்
ஒருநாள் உணருவார்கள்.

அப்போதுதான் அதில் உள்ள
உண்மைநிலை புரியவரும்.

இக்கால வாழ்க்கை வசதிகளை மட்டும்
கணக்கில் கொள்ளுபவர்களுக்கு அக்காலம்
கற்க் காலமாகத்தான்
தோற்றமளிக்கும்.



கடந்தகாலம் எப்படி பொற்காலமாகும்?
பார்க்கலாம் 

புதன், 2 ஏப்ரல், 2014

ஆப்பிள் பழம்

ஆப்பிள் பழம்



தினம் ஒரு ஆப்பிள் தின்றால்
மருத்துவரை நாட வேண்டாம் என்று
ஒரு பழமொழி.

ஆனால் தற்காலத்தில் கிடைக்கும் ஆப்பிள்கள்
எந்த நாட்டில் விளைந்தது என்றும் தெரியாது.
அவை சுவையாக இருக்குமா
என்றும் உத்தரவாதமும் கிடையாது

மேலும் அது மரத்திலிருந்து பறிக்கப்பட்டு,
மெழுகு  பூசப்பட்டு, நமக்கு பல மாதங்கள்
கழித்து  வந்து சேருகிறது.

அதை தோலுடன் உண்டால்
என்ன நோய்கள் வரும் என்றும் தெரியாது.

அதற்க்கு பயன்படுத்தப்படும் பூச்சி  கொல்லி மருந்துகளால்
நம் உடலில் எந்த உறுப்புகள் பாதிக்கப்படும் என்றும் தெரியாது.

அதை தொலை சீவி, உள்ளிருக்கும் வேண்டாத
பகுதிகளை நீக்கி உண்பதற்கும் போதும் போதும்
என்றாகிவிடுகிறது.

ஒரு பழம் 40 ருபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கிறது. 
ஆனால் அது சுவையாக  இருக்குமா மற்றும், உள்ளே கெட்டுப்  போகாமல் இருக்குமா என்பதற்கு எந்த  கடைக்காரரும் உத்தரவாதம் தரமாட்டார்கள். பிடித்தால்  வாங்கு, இல்லாவிட்டால் போ. என்ற விரட்டல் வேறே. 

எல்லாம் நம் தலைஎழுத்து. காசை தண்டம் அழுதும் நல்ல தரமுள்ள பொருட்களை விற்காத பேராசை கொண்ட வியாபாரிகள். கொடுப்பதைத்தான் நாம் வாங்கித்  தொலைக்க வேண்டும். 

அது சரி ஆப்பிள் பழத்தில் தோலை   உரிக்க ஒரு புதிய தொழில் நுட்பம் வந்துள்ளது.

அதை கீழ்கண்ட இணைப்பில் பாருங்கள்.

சற்று ஆபத்தானதுதான்.
ஆனாலும் வேலை விரைவில் முடிந்துவிடும்.

https://www.facebook.com/photo.php?v=666687930057315&set=vb.363469940379117&type=2&theater

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

விளையாட்டு வினையாகிவிடும்-ஜாக்கிரதை

விளையாட்டு வினையாகிவிடும்-ஜாக்கிரதை 

நம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு
விளையாட்டு வினையாகி விடும்
என்ற பழமொழிதான்  அது.

அழும் குழந்தைகளை  பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவதும்,
மறைந்திருந்து ஒருவர்  உள்ளே வரும் பொது
சத்தம் போட்டு பயமுறுத்துவதும் சில நேரங்களில்
விபரீதங்களை ஏற்படுத்திவிடும்.

சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

அப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.
அந்த நிகழ்ச்சியின் காணொளியைக்   காணுங்கள்.

யாரும் இதுபோன்ற விபரீதங்களை விளைவிக்கும் செயல்களில்  ஈடுபடாதீர்கள்.

அதன் இணைப்பு. கீழே

https://www.facebook.com/photo.php?v=475506109231014&set=vb.121013131346982&type=3&permPage=1

பயம் தெளிய வேண்டுமா?


பயம் தெளிய வேண்டுமா? 

ஆம் பயம் தெளிய வேண்டுமா?

கீழே கண்டுள்ள இணைப்பில் காணொளியைக்  காணுங்கள்.

https://www.facebook.com/photo.php?v=518437388271219