திங்கள், 3 மார்ச், 2014

நாளை நமதே என்பது சரியா?

நாளை நமதே  என்பது சரியா? 

நாளை நமதே என்கிறார்கள்.

அப்படி சொல்வது
எந்தவிதத்தில் சரி என்று
புரியவில்லை

அடுத்த கணம் என்ன நடக்கும்
யார் உயிருடன் இருப்பார்கள்
என்பதை அறிய இயலாத
இந்த மனிதர்கள்  நாளை நமதே
என்று நம்பி ஏமாந்துகொண்டிருக்கிரார்கள் .

நமது என்று எதைச் சொல்லவேண்டும்
என்றால் இந்த கணம்தான் நம் கையில்
உள்ளது ,

அடுத்த கணம் ஏதாவது ஒரு பூதகணமாகதான்
போக நேரிடும்.

அதனால்தான் எதை செய்ய
வேண்டுமென்றாலும்
ஒன்றே செய், நன்றே செய்
அதை இன்றே செய், இப்போதே செய்,
இந்தக் கணமே செய் என்பார்கள் அறிவுடையோர்

நல்ல  செயல்களை நாளை நாளை
என்று தள்ளிப் போடுவதால்
அந்த வேலை என்றும்
நிகழப்போவதில்லை.

நாளை நாளை என்று கடமைகளை
தட்டிக் கழிப்பவனின் வாழ்க்கை
தோல்வியைத்தான் தழுவும்

மனதில் தெளிவில்லாதவன்தான்
எல்லாவற்றையும் தள்ளிப் போடுவான்

எனவே எந்த செயலை செய்யவேண்டுமென்றாலும்
அதைப் பற்றிய முழு விவரத்தையும் அறிந்துகொண்டு
கால தாமதமில்லாமல் செய்பவனே
வாழ்வில் வெற்றி பெறுவான்.

காலம் ஓடிக்கொண்டே இருக்கும்.
அது யாருக்காககவும்  காத்து கிடக்காது

எதற்கெடுத்தாலும் இப்போது நேரம் இல்லை
என்று சோம்பி திரிபவன் வாழ்வில்
 முன்னேற்றம் அடையமுடியாது

அறிவுள்ளவன் கிடைக்கின்ற
வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுவான்.

எனவே நாளை நமதே என்று
இன்று சோம்பிக் கிடந்தால்
நாளை நம்முடையதாக  நிச்சயம் இருக்காது.
அது மற்றவ்ர்களுடையதாக்வே தான் இருக்கும்.

5 கருத்துகள்:

 1. ஒன்றே செய், நன்றே செய், அதை இன்றே செய் என்பார்கள்.

  இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்... அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான் என்ற ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் இருக்கும் வரை நினைவுகளும் இருக்கும்.
   நினைவுகள் இருக்கும் வரையிலும் இன்பமும் துன்பமும் இருக்கத்தான் செய்யும்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. சோம்பல் என்னும் ஏரியில்
   தோல்விகள், துன்பங்கள், துயரங்கள், ஏமாற்றங்கள், அவநம்பிக்கை போன்ற பல கிருமிகள், புழு பூச்சிகள்தான் நெளியும்

   நீக்கு
 3. இன்றையப் பணியைச் செவ்வனே இன்றே செய்தால்
  நாளை நமதே

  பதிலளிநீக்கு