எனக்கு நேரமில்லை?
இப்போது யாரைப் பார்த்தாலும்
எதற்கெடுத்தாலும் எனக்கு நேரமில்லை
என்று அங்கலாயிக்கிறார்கள்
அனால் சிலர் எனக்கு நேரமே
போதவில்லை என்கிறார்கள்.
ஒரு சிலரோ எனக்கு நேரமே
போகவில்லை போரடிக்கிறது என்கிறார்கள்.
இவர்களின் கூட்டம்தான் இந்த உலகில்
அதிகம் .
இவர்போன்றவர்கள் இந்த உலகின்
சுமைகள்.
இறைவன் அனைவருக்கும் சமமாக
24 மணி நேரம் அளிக்கின்றான்.
உறங்கும் நேரம் தவிர்த்து விழித்திருக்கும் நேரத்தை
சரியாக ,பயனுள்ள வகையில்
பயன் படுத்துபவர்கள் மிக சிலரே.
அப்படிபட்டவர்கள் தான் வாழ்க்கையில்
உயர்ந்த நிலையை எட்டுகிறார்கள்.
வாழ்க்கையில் குறிக்கோளே இல்லாதவர்கள்
இந்த உலகில் பலர் உள்ளனர்.
குறிக்கோள் உள்ளவன் அதை அடைய
கடுமையாக உழைக்கின்றான். பல நேரங்களில்
உறக்கத்தையும் விடுகின்றான்.
பல விருப்பங்களை தியாகம் செய்கின்றான்.
அவனுக்கு இன்னும் நேரம் கிடைத்தால்
நன்றாக இருக்குமே என்று நினைக்கிறான்.
ஆனால் சோம்பேறிகளுக்கோ
எவ்வளவு நேரம் கொடுத்தாலும்
ஒன்று தூங்கி தொலைப்பார்கள்.
அல்லது வெட்டி பேச்சில் காலம் கழித்து பிறரின் நேரத்தையும் வீணடிப்பார்கள். அல்லது
இறுதி நேரம் வரை தொலைகாட்சியில்
நம்முடைய நேரத்தை வீணடிக்கும் கயவர்களின்
பேச்சுக்களை /படங்களை பார்த்துக்கொண்டு
நேரத்தை வீணடிப்பார்கள்.
பிறகு குய்யோ முறையோ என்று அலறிக்கொண்டு ஓடுவார்கள்.
வீட்டில் உள்ளவர்களையும் குறை சொல்லிவிட்டு ,
முடிந்தால் தன்னுடைய சோம்பேறித்தனத்தை மறைக்க
ஒரு சண்டையை கிளப்பிவிட்டுப் போய்விடுவார்கள்.
இப்படிப்பட்ட கூட்டத்தை சேர்ந்த ஒருவர்
ஒவ்வொரு வீட்டிலும் உண்டு.
அதுபோல நாட்டிலும்
லட்சக்கணக்கான மக்கள் உண்டு.
இவர்களால்தான் வீடும் நாடும்
அமைதியின்றி இருக்கிறது.
நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
வீட்டையும் கெடுக்கிறார்கள்.நாட்டையும் கெடுக்கிறார்கள்.
அவர்களையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.
இவர்கள் வாழ்வில் சந்திப்பது தோல்விகளையும்
தொந்தரவுகளையும்.தான்