வியாழன், 14 நவம்பர், 2013

தோசையம்மா தோசை

தோசையம்மா தோசை
தோசை மீது என்றும்
ஆறாது ஆசை



தோசையிலே பலவகை உண்டு.
அனைவரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவது
மசால் தோசை



,ஆனியன் ரவா,



நெய் ரோஸ்ட்
ஆனியன் ஊத்தப்பம் .

ஆனால் சீனாவில் தோசை தயார் செய்யும் விதம் சற்று
வித்தியாசமாக உள்ளது. அதை பார்த்து சுவையுங்கள்.
அதன் இணைப்பு கீழே/


https://www.facebook.com/photo.php?v=564578970260297&set=vb.265507410167456&type=2&theater

ஞாயிறு, 10 நவம்பர், 2013

அழுவதும் சிரிப்பதும் அழகிய அனுபவம்

அழுவதும் சிரிப்பதும் 
அழகிய அனுபவம் 


அகந்தையில்லா குழந்தை






அழுதாலும் 









சிரித்தாலும் 




பார்க்க பார்க்க இன்பம். 





அகந்தையுடைய நாமோ 
அழுதால்




 பிறர் சிரிப்பார்




சிரித்தால் 
பிறர் எள்ளி  நகைப்பார்.  

pic-courtesy-google images. 

சனி, 9 நவம்பர், 2013

நர்மதை பெற்ற நகர் (9)(வீரமங்கை ராணி துர்காவதி)

நர்மதை பெற்ற நகர் (9)(வீரமங்கை ராணி துர்காவதி)

நர்மதை பெற்ற நகர் (9)


பெண்கள் நூல் நூற்கத் தான் தகுதியானவர்கள் 
என்று ஏளனம் செய்த அக்பருக்கு 
பஞ்சு அடிக்கும் வில்லை பரிசாக அளித்து
அவமானப் படுத்தியதால் கோபம் கொண்ட 
அக்பர் சக்ரவர்த்தி பெரும் சேனையை அனுப்பி 
அவளது ராஜ்யத்தை கைப்பற்றினர். 

ராணி துர்காவதியிடம் இருந்த 
வெள்ளை யானையை அக்பர் கேட்டதாகவும் 
அதை ராணி தர மறுத்ததால் பெரும் சேனையை
அனுப்பி ராஜ்யத்தை கைப்பற்றியதாகவும் கூறுவர் 

கி .பி 1564 ல் தளபதி அசப்கான் தலைமையில் 
வந்த அக்பர் சேனை ஜபல்பூரிலிருந்து 
49 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 
சின்கோர்கர்ஷ் என்ற இடத்தில போரிட்டபோது 
இவளது வீரம் போர்க்களத்தில் கொடி கட்டிப் பறந்தது 


தன் பாலகன் வீரநாராயணனை 


தன் முதுகில் கட்டிக்கொண்டு குதிரையின் 
மேல் அமர்ந்து பல நாள் போரிட்டாள் 


தோல்வியை தழுவும் நேரத்தில் 
எதிரியின் கையில் சிக்காமலிருக்க 
யுத்த களத்திலேயே தன் யானைப் பாகனின் 
குத்து வாளைப்  பிடுங்கி 
வயிற்றில் பாய்ச்சி நரை நாலா  
என்ற இடத்தில வீர மரணம் எய்தினாள் 


ஜான்சி ராணிக்கு லக்ஷ்மிபாய்க்கு  
முன்னோடியாக விளங்கிய 
இவ்வீராங்கனையின் சமாதி 
ஜபல்பூரிலிருந்து 23 கிலோமீட்டர் 
தொலைவில் உள்ள பர்ஹா என்ற 
கிராமத்தை அடுத்துள்ளது 


1,25,000 ரூபாய் மதிப்பில் 
தயாரான 8 மீட்டர் உயரமுள்ள 
இந்த வீ ராங்கனையின் பளிங்கு சிலை 
இந்நகரின் பவர்தால் உய்யாவனத்தில்
 கம்பீரமாக  திகழ்கிறது. 


கோண்ட்வனத்து கிராமிய பாடல்கள்
 இவளது வீர பிரதாபங்களை 
இன்னும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன 


இந்திய பெண்கள் மத்தியில் 
இதுபோன்ற வீராங்கனைகளின் 
சரிதம் பரப்பப்படவேண்டும். 



மாறாக அவர்களை இழிவுபடுத்தும் 
கட்டுக்கதைகளும், அவர்களின் மன உறுதியை 
குலைக்கும் சம்பவங்களும்தான் ஊடகங்களால் 
ஒவ்வொருநாளும் பரப்பபடுகின்றன 

இந்நிலை மாறினால்தான். 
நம் நாடு முன்னேறும். 

pic.courtesy-google images. 

வியாழன், 7 நவம்பர், 2013

வினோபா அடிகள்(பகுதி -5)

வினோபா அடிகள்(பகுதி -5)

காந்தியடிகள் விநோபாவின் 
சிறப்புகளை எடுத்துரைத்தார்,



வினோபா சிறந்த சம்ஸ்க்ருத புலவர்

ஆசிரமத்தில் சமையல் வேலையிலிருந்து
தோட்டித்  தொழில் வரையிலும்
சிறப்பாக பணி செய்தவர்

பிறவி மாணவர்
பிறவி ஆசிரியர்

தம் மனதிலிருந்து தீண்டாமையை
முழுவதுமாக ஒழித்தவர்

வகுப்பு ஒற்றுமையில்
தீவிர நம்பிக்கை உடையவர்.

 இஸ்லாமிய சமயத்தை நன்றாக
புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக
ஒருவரிடம் அரபுமொழியைக் கற்றார்

திருக்குரானை மூலத்திலேயே படித்தவர்

.வினோபாவிற்கு ஏராளமான மாணவர்களும்
 சீடர்களும் தோழர்களும்  உண்டு.

அவருக்கு இதைவிட வேறென்ன
தகுதிகள் வேண்டும் என்றார் காந்தியடிகள்

1948 ஜனவரி 30இல்
மகாத்மா காந்தி காலமானார்.



தலைவர் ராஜேந்திர பிரசாத்தும்
 நிர்மாணத் துறையை சேர்ந்த பலரும்
ஒன்றுகூடி  ஆலோசனை நடத்தினார்கள்,.

 மகாத்மா காந்திக்கு நினைவு சின்னம்
எழுப்புவதற்கு ஒவ்வொருவரும்
ஒரு ஆலோசனை கூறினார்கள்.

வினோபா ஒருவரே மகாத்மா காந்திக்கு நாம்
எழுப்ப வேண்டிய நினைவு சின்னம்
சர்வோதய சமுதாயமே என்றார்.



1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் நாள்
ஆந்திர மாநிலத்தில் போச்சம்பள்ளியில்
ஒரு அற்புதம் நிகழ்ந்தது.

அது என்ன?

 நாளை பார்ப்போம்.

(இன்னும் வரும்.)

திங்கள், 4 நவம்பர், 2013

இது தேவையா?

இது தேவையா?

இது தேவையா?
இதற்குப் போய் இவ்வளவு கோடி ரூபாய்
செலவு செய்ய வேண்டுமா?



இந்தியா வறுமை நாடு .
இங்கு உள்ளவர்களுக்கு
உணவு இல்லை, இருப்பிடம் இல்லை,
உறங்க இடமில்லை,சுகாதார வசதி இல்லை.
இப்போது இந்த திட்டத்திற்காக 450 கோடி  ருபாய்
செலவு செய்ய வேண்டுமா?

என்று புலம்பி தீர்க்கின்றன .
சில சுய மரியாதையில்லா பிண்டங்கள்.

 

எல்லாம் இந்த செவ்வாய்  கிரகத்திற்கு
 நம்முடைய விஞ்ஞானிகள் ஏவப்போகும்
ஆராய்ச்சிக்கான செயற்கைக் கோளுக்கு
ஆகும் செலவைப் பற்றிதான்
இப்படி புலம்பி தீர்க்கின்றன சில ஜன்மங்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்து
 67 ஆண்டுகள் கடந்துவிட்டது. 

ஆண்ட அரசுகள் மக்களின் 
வறுமையை போக்க 
பல லட்சம் கோடிகளை 
செலவு செய்து விட்டது. 

ஆனால் வறுமை
இன்னும் தீர்ந்த பாடில்லை.

பாடுபடுபவனின் பாடு அப்படியேதான் 
செக்கு மாடுபோல் அங்கேயே 
சுற்றிக்கொண்டிருக்கிறது. 

ஆனால் இந்தலட்சம் கோடிகள் 
 பெரும்பகுதி கேடிகளிடம் 
போய்  சேர்ந்து விட்டது 

அதை அவர்கள் பத்திரமாக ச்விச்ஸ் 
வங்கியில் வைத்து பாது காத்து வருகிறார்கள். 
அடுத்த பிறவியில் அதை எடுத்து கொள்ளலாம்  என்று. 

அது எவ்வளவு என்று கண்டறியவும், 
அதை நம் நாட்டிற்கு கொண்டுவரவும்
 யாருக்கும் நாதியில்லை. 

ஆண்டுதோறும் புதிதிதாக நோய்கள்
 உண்டாவதைபோல் புதிதாக ஊழல்கள்
புற்றீசல்போல் நிற்காது
வந்து கொண்டிருக்கின்றன.

 சில ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம்,
லட்சம் என்ற நிலை
 மாறி லட்சம் கோடி என்று
முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

இவைகளை கணக்கில் வைத்து பார்க்கும்போது
இதுபோன்ற திட்டங்களுக்கு ஆகும் செலவு கணக்கில்
கொள்ள தேவையே இல்லை

நம் நாட்டில் ஊழல்
இல்லாத துறையே கிடையாது.

ஊழல் செய்யாத
அரசியல்வாதிகளே கிடையாது.

நம் நாட்டின் மானத்தை ஒவ்வொரு நாளும் 
உலக அரங்கில் கப்பலேற்றிக்கொண்டிருக்கும்
நம் அரசியல்வாதிகளை விட கோடி மடங்கு 
நம் விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

அவர்கள்தான் நம் நாட்டின் பெருமையை 
உலகத்தை தாண்டி அண்டங்களிலும்
 பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். 

தமிழ் நாட்டில் ஒரு மாதத்திற்கு
நம்முடைய குடிமகன்கள் 2000 கோடி ரூபாய்க்கும்
அதிகமாக குடித்து ஒழிக்கிறார்கள்.

வறுமை என்று ஒரு வரையறையை 
என்றும் வகுக்க முடியாது.
அது ஒரு பேத்தல். கணக்கு

இருப்பவனும் இல்லை என்கிறான். 
இல்லாதவனும் இல்லை என்கிறான். 
வறுமையை என்றும் ஒழிக்க முடியாது.

எல்லா பணக்கார நாடுகளிலும்,பிச்சைக்காரர்களும்,
 நாடோடிகளும், ஏழைகளும், நடைபாதையில் 
வசிக்கும் மக்களும்  உண்டு. 

எனவே நம்முடைய விஞ்ஞானிகளின்
முயற்சியை மனம் திறந்து பாராட்டுவோம்.
வெற்றி பெற வாழ்த்துவோம்.