புதன், 24 அக்டோபர், 2018

இசையும் நானும் (331)-திரைப்படம்-கலைக்கோயில் (1964) பாடல்-நான் உன்னை சேர்ந்த செல்வம்.. நீ..

Movie: 

கலைக்கோயில் (1964)

Music: விஸ்வநாதன்-ராமமூர்த்தி 
Singer(s): ப்பி . பி .ஸ்ரீனிவாஸ் /பி.சுசீலா 
Lyricist: கண்ணதாசன்

M. நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழவேண்டும்

F. நம் காதல் உள்ளம் கலைக்கோயில்
இரு கண்கள் கோயிலுக்கு வாசல்
நமதாசை கோயில் மணி ஓசை
அதில் அன்பு வண்ண மலர் பூஜை
அதில்அன்பு வண்ண மலர் பூஜை (
நான் உன்னை)


M. ஸ்ரீராமன் நெஞ்சில் நின்ற சீதை
மலர் கண்ணன் தேடிக் கொண்ட ரா...தை
மனம் உருகி சூடிக் கொண்ட கோதை....
ஒன்று சேர்ந்து வந்ததிந்த பாவை



. உன் விரல்கள் என் அழகை மீட்டும்
உன் விழிகள் என் உயிரை வாட்டும்
உன் விரல்கள் என் அழகை மீ..ட்டும்
உன் விழிகள் என் உயிரை வா...ட்டும்
உன் குரலும் என் பெயரை கூட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும் 
(நான் உன்னை)


M. உன் அச்சம் நாணம் என்ற நாலும்
என் அருகில் வந்தவுடன் அஞ்..சும்
இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும் 
(நான் உன்னை)




3 கருத்துகள்:

  1. கேட்டேன், ரசித்தேன்.

    எனக்கு மிகமிகப் பிடித்த பாடல்.

    எங்கள் வீட்டில் முதன்முதலில் கேசெட் அறிமுகமானபோது நான் முதலில் ரெகார்ட் செய்தது இந்தப் படத்தின் மூன்று பாடல்களைத்தான். அதில் முதலிடம் இந்தப் பாடல். இரண்டாவது பாலமுரளி பாடல். மூன்றாவது 'தேவியர் இருவர் முருகனுக்கு'

    பதிலளிநீக்கு
  2. அருமையா இருக்கு சார் இந்த பாடல் ,
    மவுத் ஆர்கனிலும் இத்தினை இனிமையா வாசிக்க முடியுமா என வியப்பா இருக்கு
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏஞ்செல் அவர்களே .இது போன்ற பல இனிமையான தமிழ்,மற்றும் ஹிந்தி பாடல்களை இசைத்து 330 காணொளிகளை வெளியிட்டுள்ளேன்.கேட்டுமகிழவேண்டுகிறேன்.

      நீக்கு