சனி, 17 மார்ச், 2018

இசையும் நானும் (283)-திரைப்படம் ஆட்டோகிராஃப் (2004) பாடல்:: ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

இசையும் நானும் (283)-திரைப்படம் ஆட்டோகிராஃப் (2004)

பாடல்:: ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே






MOUTHORGAN VEDIO-283




ஒவ்வொரு பூக்களுமே

MovieAutographMusicBharathwaj
Year2004Lyrics
SingersK. S. Chithra



ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்ற எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஓரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே

வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு





செவ்வாய், 13 மார்ச், 2018

இசையும் நானும் (282)-திரைப்படம் நேற்று இன்று நாளை (1974) பாடல்:: பாடும்போது நான் தென்றல் காற்று

இசையும் நானும் (282)-திரைப்படம் நேற்று இன்று நாளை (1974)

பாடல்:: பாடும்போது நான் தென்றல் காற்று



MOUTHORGAN VEDIO-282

MovieNetru Indru NaalaiMusicM. S. Viswanathan
Year1974LyricsPulamaipithan
SingersS. P. Balasubramaniam

பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
நான் வரும்போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன?(பாடும்போ)

மெல்லிய பூங்கொடி வளைத்து -
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து (மெல்லிய)
இதழில் தேனைக் குடித்து -
ஒரு இன்ப நாடகம் நடித்து (இதழில் )


எங்கும் பாடும் தென்றல் காற்றும்
நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்றுதானே(பாடும்போ)

எல்லைகள் இல்லா உலகம் -
என் இதயமும் அதுபோல் நிலவும்(எல்லைகள்)

புதுமை உலகம் மலரும் -
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும் (புதுமை )

யாரும் வாழ பாடும் காற்றும்
நானும் ஒன்றுதானே -
இன்ப நாளும் இன்று தானே(பாடும்போ)






ஞாயிறு, 11 மார்ச், 2018

இசையும் நானும் (281)திரைப்படம் இதயம் ஒரு கோவில்(1985) பாடல்:: இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்



இசையும் நானும் (281)திரைப்படம் இதயம் ஒரு கோவில்(1985)

பாடல்:: இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்



MOUTHORGAN VEDIO-281





இதயம் ஒரு கோவில்

MovieIdaya KovilMusicIlaiyaraaja
Year1985LyricsIlaiyaraaja
SingersS. Janaki, S. P. Balasubramaniam
இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்…

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்




ஞாயிறு, 4 மார்ச், 2018

இசையும் நானும் (280)திரைப்படம் வாழ்வே மாயம்(1982) பாடல்:: நீல வான ஓடையில்


இசையும் நானும் (280)திரைப்படம் வாழ்வே மாயம்(1982)

பாடல்:: நீல வான ஓடையில் 



MOUTHORGAN VEDIO-280


MOVIE : 

வாழ்வே மாயம்(1982)

MUSIC :கங்கை அமரன் 
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியன் 
பாடல் வரிகள்: வாலி.



ஆ: நீல வான ஓடையில் 
நீந்துகின்ற வெண்ணிலா
நீல வான ஓடையில் 
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில் 
நீந்துகின்ற வெண்ணிலா

ஆ: காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
நீயில்லையேல் நானில்லையே
ஊடல் ஏன் கூடும் நேரம்(ஆ: நீல வான ஓடையில் )



ஆ: நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நான்தான்(ஆ: நீல வான ஓடையில் )







வியாழன், 1 மார்ச், 2018

இசையும் நானும் (279)திரைப்படம் -தெய்வத்தின் தெய்வம் (1962) பாடல்: நீ இல்லாத உலகத்திலே..

இசையும் நானும் (279)திரைப்படம் -தெய்வத்தின் தெய்வம் (1962)

பாடல்: நீ இல்லாத உலகத்திலே..





MOUTHORGAN VEDIO-279

MOVIE : 

தெய்வத்தின் தெய்வம் (1962)

MUSIC : ஜி .ராமநாதன் 
பாடியவர்: பி.சுசீலா 
பாடல் வரிகள்: கண்ணதாசன் 

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை 
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை 
சிந்தனையில்லை .....

காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை.
உன்னை கண்டு கொண்ட நாள் முதலால் 
பெண்ணுறங்கவில்லை....

உன் முகத்தை பார்ப்பதற்க்கே கண்கள் வந்தது 
உன் மார்பில் சாய்வதற்க்கே உடல்வளர்ந்தது 
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது 
இந்த காவல் தாண்டி ஆவல் உன்னை தேடி ஓடுது...

பொன்விலங்கை வேண்டுமென்றே பூட்டிக்கொண்டேனே 
உன்னை புரிந்து கூட சிறையில் வந்து மாட்டிக்கொண்டேனே 
இன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே 
நான் என்று உந்தன் எல்லையிலேவந்திடுவேனே ..