கழிவறையும் கல்லறையும்
கழிவறையும் கல்லறையும்
கழிவறையும் கல்லறையும்
இன்றைய செய்தி.
”அப்பா எனக்கு வெட்கமாக இருக்கிறது..”: வீட்டில் கழிவறை இல்லாததால் தற்கொலை செய்த மாணவி |
[ புதன்கிழமை, 27 சனவரி 2016, 08:01.02 AM GMT +05:30 ] |
தெலுங்கனாவில் வீட்டில் கழிவறை இல்லாததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். |
வீட்டில் கழிவறை கட்டி தர பெற்றோரால் (வறுமை மற்றும் இடமின்மை காரணமாக கூறப்படுகிறது) இயலாத காரணத்தால் ஒரு மாணவி
தற்கொலை செய்துகொண்டாள்
நம்முடைய 67 வது குடியரசு தினத்தில் நம் நாட்டின் நிலைமை
இதுதான்.
மேலை நாட்டினர் இந்திய நாடு ஒரு திறந்தவெளி கழிப்பிடம் என்று ஏளனம் செய்கின்றனர்.
சாலை ஓரங்களாகட்டும், ரயில்வே பாதைகளாகட்டும், பேருந்து, ரயில்வே மற்றும் , நீர் நிலைகளின் கரைகளாகட்டும் , பொது இடங்களாகட்டும் ஆடு மாடுகளை விட கேவலமாக காலாற நடந்து போய் கழிந்துவிட்டு அங்கு தேங்கியுள்ள அனைத்து கிருமிகளின் பிறப்பிடம் மட்டும் உறைவிடமான அழுக்கு தண்ணீரில் கழுவிக்கொண்டு ஆனந்தமாக தேநீர் கடைக்கு சென்று செய்தி தாள்களை படித்து பொது அறிவை விருத்தி செய்யும் அற்புதமான கலாசார பின்னணியை கொண்டுள்ள முன்னேறிய சமுதாய மக்கள் கொண்டது நம் பாரத நாடு.
ஏன் அரசு பொது கழிப்பிடங்களை கட்டி கொடுத்தால் ஒரே மாதத்தில் அங்குள்ள அனைத்தையும் நாசம் செய்து மூடு விழா செய்வதில் மும்முரமாக ஈடுபடும் ஒரு உன்னத கலாசாரத்தை கொண்ட இனம் தமிழ் இனம்.
உடலின் உள்ளே தள்ளும் உணவை வெளியே பாதுகாப்பாக சுகாதாரமாக வெளியேற்ற வகை செய்ய இயலாத கையாலாகாத அரசு நிர்வாகங்கள்.
நிறைந்த நம் நாடு .
என்றோ நடக்கப் போகும்/இல்லை நடக்காமலே போகலாம் /போர்களுக்கு
பல லட்சம் கோடிகளை வரி இறைக்கும் நம் அரசுகள் இந்த அடிப்படை
வசதிகளை இன்னும் வறுமை நிறைந்த லட்சக்கணக்கான கிராமங்களில்
ஏற்படுத்தி தர முடியவில்லை.
இருக்கும் உலகில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து
தராது எங்கோ கண்ணுக்கு தெரியாமல் கிடக்கும் கோள்களை ஆராய கோடிகளை வாரி இறைக்கும் வக்கற்ற அரசுகள்.
அசிங்கங்களை அகற்ற அக்கறை காட்டாது சிங்கம் 1,2,3, என்று திரைப்படங்களில் மூழ்கி கொசுக்களையும் கிருமிகளையும் உற்பத்தி செய்து அதனால் நோயுற்று நோயாளிகளை மடியும் மூட மக்கள்.
ஆனால் அரசுகள் மீதும் முழு குற்றத்தையும் சுமத்த முடியாது.
நாடு சுதந்திரம் அடைந்த பின் பல்லாயிரம் கோடிகளை இதற்காக செலவிட்டுள்ளது ஆனால் சில மாநில அரசுகள் இந்த திட்டத்தில் போதிய அக்கறை காட்டவில்லை.
பொதுமக்களும் இந்த முக்கியமான திட்டத்தில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் பொறுப்பற்ற மக்களும்தான் மூல காரணம்
இருந்தாலும் மாவட்ட நிர்வாகங்கள் இது போன்று உதவி தேவைப்படும் மக்களையாவது கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்தால் போதும் இது போன்ற இழப்புகள் தவிர்க்கப்படும்.
இதற்காக அவர்கள் ஒரு மையம் அமைத்து உதவி செய்யலாம்.
நமது மக்கள் தொகையில் சரி பாதி அளவு உள்ள பெண்ணினத்திற்கு
உரிய கவுரவம் மற்றும் பாதுகாப்பு தருவது அனைவரின் கடமையாகும்/ஆனால் அதை கவனியாது மற்ற இனங்களில் மட்டும் முனைப்பு காட்டுவது உண்மையான வளர்ச்சி ஆகாது.
பெண்களை தெய்வங்களாக மட்டும் கும்பிடுவதால் பயன் ஏதும் இல்லை. உண்மையாக நம் கண் முன்னே நடமாடும் தெய்வங்களுக்கு உரிய மரியாதை தரப்படவேண்டும் இல்லையேல் அனைத்து வழிபாடுகளும் வெறும் வெற்று சடங்காகத்தான் கருத இயலும்
பெண்களை தெய்வங்களாக மட்டும் கும்பிடுவதால் பயன் ஏதும் இல்லை. உண்மையாக நம் கண் முன்னே நடமாடும் தெய்வங்களுக்கு உரிய மரியாதை தரப்படவேண்டும் இல்லையேல் அனைத்து வழிபாடுகளும் வெறும் வெற்று சடங்காகத்தான் கருத இயலும்
Picture-courtesy-Google images. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக