வெள்ளி, 1 ஜனவரி, 2016

மனம் என்னும் மாடு

மனம் என்னும் மாடு

மனம் என்னும் மாடு 


Image result for mannargudi


மனம் என்னும் மாடு
நம் உள்ளம் என்னும் வீட்டில்
வசிக்கிறது

அவ்வப்போது புலன்கள்  என்னும்
வாயில்களின் வழியே வெளியே
மேயச் செல்கிறது.

வெளியில் மேய்ந்துவிட்டு
கொட்டடிக்கு திரும்பி வந்து
தினமும் இரவில் உறங்கி விடுகிறது

அது சில காலமாக ஊரார் நெல் வயல்களில்
போய்  மேய்ந்து வீண் வம்பை விலைக்கு வாங்கி
கொண்டு வருகிறது .

இனிமேல் அதை வீட்டில் கட்டிப்போட்டு
இருக்கும் இடத்திலேயே வைக்கோலும்
தண்ணீரும் வழங்க வேண்டிய
சூழ்நிலையை அது உருவாக்கிவிட்டது.

ஆனால்  அதை வெளியே மேய
அனுப்பாவிடில் அது சண்டித்தனம்
செய்து அதன் கோபத்தை வெளிப்படுத்துகிறது.
தாறுமாறாக கத்துகிறது. அருகில் சென்றால் முட்டுகிறது.
கட்டிய கயிறை  அறுத்துக்கொண்டு வெளிய ஓட முயற்சிக்கிறது.

ஏனென்றால் அதற்கு தினமும் வெளியே
சென்று மேய்ந்து வருவது வழக்கமாகிவிட்டது.

மாட்டைப் போன்றது போல்தான்
நம் மனமும். அது காலம் காலமாக
ஒரு குறிப்பிட்ட செயல்களையே செய்து கொண்டு வருகிறது

அது அலுத்துப்போன காரணத்தால்
பல தில்லு முல்லு  வேலைகளைச்
செய்து நம்மை சிக்கல்களிலும் துன்பத்திலும்
மாட்டி விடுவதையே வழக்கமாகி கொண்டுள்ளது

இதிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால்
அதற்கு கடிவாளம் போட்டுத்தான் ஆகவேண்டும்
அது சண்டித்தனம் செய்யும். அதை பொருட்படுத்தாது
நாம் அதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துதான் ஆகவேண்டும்.

கட்டுப்பாட்டில் வைத்தாலும் அது மிகவும் சாமர்த்தியமாக
நம்மை ஏமாற்றிவிடும்.. நாம் எப்போதும் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.

அதற்கு நாம் நம் உள்ளம் என்னும் மாட்டை
அந்த மாடு மேய்த்த கண்ணனிடம் ஒப்படைத்தால் போதும்
அவன் அதை நன்றாக பார்த்துக்கொள்வான்
பார்த்தனுக்கு தேரோட்டிய பார்த்தசாரதியைப். போல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக