மகிழ்ச்சி என்பது என்ன ? பிறரை இகழ்ச்சியாக எண்ணாமல் இருப்பதுதான் உழைத்து பிழைக்கும் மனிதரை எல்லாம் உயர்வாகஎண்ணும் போக்கு உலகத்தில் மலர்ந்தால் உண்மையிலேயே மகிழ்ச்சி மனிதனை மனிதன் ஆதிக்கம் செலுத்தி அடிமை செய்து சுரண்டும் கொடுமை இம்மண்ணிலிருந்து அகன்றால் மட்டற்ற மகிழ்ச்சி பொறாமையும் போரும் சுயநலமும் பாலியல் கொடுமைகளும் இப்பாரினில் இல்லாது போயின் இன்னும் மகிழ்ச்சி இனிய இவ்வுலகை மாசுபடுத்தி காசு பார்க்கும் கேடர்கள் திருந்தி நின்றால் இவ்வுலகத்து உயிர்கள் யாவும் இன்புற்று வாழுமே
இசையும் நானும் (151)-ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
இசையும் நானும் (151)
இசையும் நானும் (148) Mouthorgan song-தமிழ் song-
Film ஆண்டவன் கட்டளை
by TR PATTABIRAMAN
Singers:டி எம் .சௌந்தரராஜன்
Music Director:
Viswanathan Ramamoorthy
Cast:சிவாஜி கணேசன்
பாடல் வரிகள் கண்ணதாசன்
ஆறு மனமே ஆறு - அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு...
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி... சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும் இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு...
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.... நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் உண்மை என்பது அன்பாகும் - பெரும் பணிவு என்பது பண்பாகும் - இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு...
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்.. அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.. இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு....
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
(மயக்கமா) ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு https://youtu.be/_V-8JOWD9n8