2017- கனவுகள்.
மகிழ்ச்சி என்பது என்ன ?
பிறரை இகழ்ச்சியாக எண்ணாமல்
இருப்பதுதான்
உழைத்து பிழைக்கும் மனிதரை
எல்லாம் உயர்வாகஎண்ணும்
போக்கு உலகத்தில் மலர்ந்தால்
உண்மையிலேயே மகிழ்ச்சி
மனிதனை மனிதன் ஆதிக்கம் செலுத்தி
அடிமை செய்து சுரண்டும் கொடுமை
இம்மண்ணிலிருந்து அகன்றால்
மட்டற்ற மகிழ்ச்சி
பொறாமையும் போரும்
சுயநலமும் பாலியல் கொடுமைகளும்
இப்பாரினில் இல்லாது போயின்
இன்னும் மகிழ்ச்சி
இனிய இவ்வுலகை மாசுபடுத்தி
காசு பார்க்கும் கேடர்கள் திருந்தி நின்றால்
இவ்வுலகத்து உயிர்கள் யாவும்
இன்புற்று வாழுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக