செவ்வாய், 30 டிசம்பர், 2014

2015 ஆம் ஆண்டு தமிழனின் நிலைமாறுமா?

 2015 ஆம் ஆண்டு தமிழனின் நிலை மாறுமா?


தமிழன் ஒரு பயந்தான்கொள்ளி

ஆம் தமிழன் ஒரு பயந்தான்கொள்ளி
எப்படி?

அவன் வாய்ச் சொல்லில் வீரன் என்று
பல ஆண்டுகளுக்கு முன்பே மீசைக் கவிஞன்
பாரதி எழுதி வைத்தான். அது இன்றும் உண்மை என்று
நம் அரசியல் வாதிகள் நிருபித்து வருகிறார்கள்.

தமிழனுக்கு அவனே எதிரி. சுதந்திர போராட்ட வீரன் வீரபாண்டிய கட்டபொம்மனை யும்,மற்றும்மருது சகோதரர்களையும் வெள்ளையர்களிடம் காட்டிகொடுத்தது முதல் தொடங்கி தன்  உறவுகளுக்கு அவன் இழைத்த துரோக  செயல்கள் கணக்கிலடங்கா.



தமிழன் இந்தியைக் கண்டு பயப்படுகிறான், வடமொழியைக்கண்டு பயப்படுகிறான்.

ஆனால் ஊழல் செய்வதற்கு, லஞ்சம் வாங்குவதற்கு, சட்ட  விதிகளை மீறுவதற்கு,பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பதற்கு, பொய் சொல்வதற்கு, பொது சொத்துக்களை அற்ப காரணங்களுக்காக அடித்து நொறுக்குவதற்கு ,எல்லா இடங்களிலும் அசுத்தம் செய்வதற்கு பயப்படுவதில்லை. அவமானப்படுவதில்லை.

தமிழன் எப்போதும் நடந்து போனவைகளைப் பற்றி பேசியே நிகழ் காலத்தை இழக்கும் மூடனாய் வாழ்நாள் முழுவதும் இருந்து வீணே இறந்து போகிறான்.



அரசியல்வாதிகள் எந்த பிரச்சினையையும்
தீர்த்து வைப்பது கிடையாது தீர்த்து வைத்ததும் கிடையாது

மாறாக எல்லா பிரசினைகளையும் சிக்கலாக்கி
அதற்கு தீர்வு காணாமல் நிரந்தரமாக நீடிக்க வைத்து
தங்கள் அனைத்து ஆற்றல்களையும் அதற்க்கு பயன்படுத்தி
மக்களை எப்போதும் குழப்பத்திலேயே வைத்திருப்பதிலேயே
குறியாய் இருகிறார்கள்

தமிழர்கள் உழைப்புக்கு மரியாதை அளிப்பதில்லை.
சாதிக்கும், மதத்திற்கும் மக்களின்  உணர்ச்சிகளை
தூண்டும் பொறுப்பற்றவர்கள் பேசும்
பொறுப்பற்ற உளறல்களுக்கும் முக்கியத்துவம் அளித்து
தங்களின் பொன்னான நேரத்தையும், உழைப்பையும் காசையும் வீணாக்குகிறார்கள்.

பெண்களை மதிப்பது கிடையாது அவர்களை ஊடகங்களிலும் இழிவுபடுத்துவதும், கொடுமைப்படுவதும், திரைப்படங்களின் அவர்களை போகபோருளாக பார்த்து ரசிப்பதும் அவர்களின் ரத்தத்தில் ஊறிப்போய்விட்ட உணர்வு.


அரசியல்வாதிகள் தினமும் ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு ஓர் போராட்டம், கடையடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல் என மக்களின் இயல்பான வாழ்க்கைக்கு  இடையூறுகளையும் துன்பங்களையும் ஏற்படுத்துவதில் கலையாக கொண்டுள்ளனர்.

நடிப்பவன் கோடிகளை  அள்ளுகிறான். அவனுக்கு டூப் போடுபவன்
ஆபத்தில் சிக்கி மடிகிறான். நல்லவர்கள் போல் நடிக்கும் நடிப்புக்கு கொடுக்கும் மதிப்பை ஒருவர் தன் நிஜ வாழ்க்கையில் கடைபிடிப்பதுமில்லை
கடைபிடிப்பவர்களை மதிப்பதும் இல்லை.

நாட்டிற்காக உழைத்தவர்கள் நடு  ரோட்டில் நிற்கிறார்கள்.
அவர்களை மறப்பதும் அவர்களின் பெயரைசொல்லி அரசியல் செய்வதும்
இன்றைய அரசில்வாதிகளின் வாழ்க்கை முறை.

எங்கு சென்றாலும் பாமரனுக்கு நீதி கிடைப்பதில்லை அது நீதி மன்றமாகட்டும், மக்கள் மன்றமாகட்டும்.

வேலிகள்  பயிரை மேய்கின்றன .காலிகள் தங்கள் ஜோலிகளை
நிறைவேற்ற தடையேதும் இல்லை. போலிகள் எல்லா நிலையிலும்
மக்களின் அன்றாட வாழ்வில் தங்கள் நோக்கத்தை   யாராலும் தடுக்க இயலவில்லை.

எந்த அரசு வந்தாலும் மக்களின் மீது சுமத்தப்படுவது வரிசுமை  மட்டுமே.
அவர்களின் வாழ்வுக்கும், நலனுக்கும், உரிமைக்கும் உத்தரவாதம் கிடையாது இந்நாட்டிலே.

ஏழைக்கு ஒரு நீதி. பணக்காரனுக்கு ஒரு நீதி இந்நாட்டிலே. இதை
எதிர்த்து கேட்பவருக்கு கிடைப்பது அடியும் உதையும், அமர வாழ்வும்.


தனித்தனியாக பிரிந்து அரசியல் நடத்தும் தலைவர்களால் தமிழ் நாட்டிற்கும் என்றும் விடிவுகாலம் கிடையாது அவர்களின் பின்னே அணி வகுப்பவ்ர்களுக்கும் எந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அதை விடுத்துவிட்டு ஒருவர்மீது ஒருவர் வசை பாடிக்கொண்டிருந்தால் தமிழர்களின் எதிர்காலம் ஒரு கனவாகத்தான்
இருக்கும்.

2015 ஆம் ஆண்டு ஒரு நல்லதோர் தொடக்கமாக அமையவேண்டும்





  

6 கருத்துகள்:

  1. "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அதை விடுத்துவிட்டு ஒருவர் மீது ஒருவர் வசை பாடிக்கொண்டிருந்தால் தமிழரின் எதிர்காலம் ஒரு கனவாகத்தான் இருக்கும்." என்ற தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
    தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. நன்றி. தங்களுக்கும் வரும் ஆண்டு
    பல வெற்றிகளை பரிசாக அளிக்கட்டும்

    பதிலளிநீக்கு
  3. புரணி பேசாமலும் கேட்காமலும் இருந்தால் தரணி பேசும்...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி DD
      கேட்பதில் தவறில்லை.அது நம் மனதின் சம நிலையை பாதிக்க விட அனுமதிக்கக்கூடாது

      நீக்கு