புதன், 10 டிசம்பர், 2014

பாரதி கண்ட கனவு ?

பாரதி கண்ட கனவு ?
இன்று பாரதி பிறந்த தினம்

உலகம் கொண்டாடுகிறது
வழக்கம்போல் அவன் சிலைக்கு மாலை மரியாதை.

நாளை மற்றொருவரின் பிறந்த தினம்
அதே சடங்குகள் இதுதான் இன்றைய உலகம்.

அவன் பலவற்றை சொன்னான் சில நடந்தது
அவன் தமிழ் சமுதாயத்தில் வெளிச்சத்திற்கு
கொண்டு வந்த அவலங்கள்
அப்படியேதான் இருக்கின்றன.

பெண்ணடிமை கூடாதென்றான்.
வீட்டை விட்டு வெளியே வந்த பெண்களின்
நிலை என் வீட்டை விட்டு வெளியே வந்தோம் என்ற நிலைக்கு
இன்றைய நிலைமை போய்க்கொண்டிருக்கிறது.

பெண்களுக்கு குழந்தையாய்  இருக்கும் போதும்
பாதுகாப்பில்லை. கல்வி சாலைக்கு சென்றாலும்
அங்கிருக்கும் ஆ(சிறியர்கள் )சிரியர்கள் சிலர்
செய்யும் கொடூரத்திற்கு எல்லையில்லை.

படித்து வேலைக்கு சென்றாலும் அங்கும் சரி
பணி முடிந்து இல்லம் திரும்பும்போதும் சரி
என்ன நேரும் என்று யாருக்கும் தெரியாது.

ஊடகங்களில்  எப்போதும் காம களியாட்டக் காட்சிகள்தான்.
அதை சிலர் தங்கள் நிஜ வாழ்வில் அரங்கேற்றும்போதுதான்
அது கண்டிக்கப்படும் காட்சியாக மாறிவிடுகிறது.

சமூகத்தில் ஒழுக்கம் போய்விட்டது.
ஒழுங்கும் போய்விட்டது.

தனி மனிதன் திருந்தவேண்டும்.
அப்போதுதான் இந்த சமூகமும்
திருந்தும்.

உள்ளத்தில் வக்கிரங்களை சுமந்து கொண்டு உதட்டிலே
பெண்களுக்கெதிரான  வன்முறைகளை பழிக்கும் மனிதர்கள்
அந்த செயலை செய்யும்.  ஒரு சிலரை விட மிகவும் ஆபத்தானவர்கள்.

அவர்களிடம் பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வள்ளுவன் சொன்னதுபோல் ஒரு பெண் தன்னை அவள்தான்  காத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவள் இந்த உலகையும்
காக்க முடியும். ஏனெனில் அவள்தான் தாயாகிறாள்.இந்த உலகத்திற்கும் அவள்தான் பராசக்தி என்னும் தாயாவாள்.
1 கருத்து: