செவ்வாய், 25 ஜூன், 2013

இறைவன் இருக்கின்றானா?

இறைவன் 

இருக்கின்றானா?


இறைவன் இருக்கிறான் என்று நம்பும் 
மனிதர்கள்தான் இந்த உலகில் அதிகம் 

அதே நேரத்தில் வீண் பெருமைக்காக 
இறைவன் இல்லை என்று பிதற்றிக்கொண்டு
திரிபவர்களும் இந்த உலகில் எங்கும் உண்டு. 

தன்  அகங்காரம் ஒழிந்து,
தன் முயற்சிகள் அனைத்தும் 
பயனற்றுபோய்,செயலற்ற நிலையில்தான் 
பலர் இறைவனை நாடுகிறார்கள். 

இறைவன் இருக்கின்றானா ?

மனிதன் கேட்கிறான் ?

மனிதன்தான் கேட்பான்.
அவனுக்கு எப்போதும் சந்தேஹம்தான்

மிருகங்கள் கேட்காது. 
அவைகள் தன்இயல்புக்குரிய
கடமைகளை மட்டும் செய்கின்றன

மனிதன் மட்டும் தன் கடமைகளை 
சரிவர செய்வது கிடையாது.

தன இயலாமைக்கும் 
பிறர் மீதே குற்றம் கண்டு வாழ்நாளை
வீணாக்கி அழிந்துபோகும் இனம்

கடவுள் இருக்கிறானா 
என்று உடலில் உயிர் உள்ளவன் தான் 
கேட்கமுடியும்

பிணம் அந்த கேள்வியை 
கேட்கமுடியாது.

கடவுள் இருக்கிறான் என்பதற்கு
இதுவொன்றே போதும்.

தன் உடம்பிற்குள் என்ன இருக்கிறது,
என்ன நடக்கிறது என்பதை
அறிய அவன் பல கருவிகளை 
நாட வேண்டியிருக்கிறது. 
அது தரும் தகவல்களும் உண்மை
என்று கொள்ளமுடியாது.

தன முகத்தை பார்ப்பதற்கே 
அவன் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை 
நாட வேண்டியிருக்கிறது.

உலகம் முழுமைக்கும் ஒரே சூரியன் 
அதை அவன் வெறும் கண்ணால் பார்க்க 
அவனுக்கு சக்தி கிடையாது.

அவன் உலகத்தோடு தொடர்பு கொள்ள 
அவன் புலன்கள் உதவி செய்கின்றன.
அவைகள் செயலிழந்துவிட்டால் 
அவன் உயிர் இருந்தும் பிணத்திற்கு சமமானவன். 

இப்படி இருந்தாலும் அவன் 
அகந்தை கொண்டு கடவுள் இல்லை 
என்று புலம்பி திரிகிறான்.

முதலில் கண்ட பாடலில் 
அந்த கவிஞன் எழுதினான்

நான் ஆத்திகனானேன் 
அவன் அகப்படவில்லை

நாத்திகனானேன் 
அவன் பயப்படவில்லை என்று.

எல்லோரும் வடிவங்களே கடவுள் 
என்று நினைத்துகொண்டு ஒருவருக்கொருவர் 
அடித்துக்கொண்டு மடிகிறார்கள்.

பலர் கடவுள் என்றால் என்ன என்று 
புரியாமலே வாழ்நாள் முழுவதும் 
வெளியே தேடிக்கொண்டு காலத்தை கழிக்கின்றார்கள். 

சிலர் கடவுளை காணாமலே கண்டதாக 
பல பேரை ஏமாற்றிக்கொண்டு திரிகிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் அகந்தையை விட்டு
 சுயநலம் நீக்கி ,எந்தவொரு எதிர்பார்ப்பின்றி 
எல்லா உயிர்களிடம் அன்பு செலுத்தி 
அனைவரையும் கடவுளின் வடிவங்களாக 
கருதி சேவை செய்து கடவுளை கண்டவர்களும் 
இவ்வுலகத்தில் எப்போதும் உண்டு. 

அவரவர் மனபக்குவத்திர்க்கேர்ப்ப முயற்சி செய்து
 கடவுளை காண,உணர முயற்சி செய்தால்
 வெற்றி கிடைக்கும்.

7 கருத்துகள்:

 1. /// மனிதன் மட்டும் தன் கடமைகளை
  சரிவர செய்வது கிடையாது... ///

  உண்மை வரிகள்...

  அருமையான விளக்கங்களுக்கு நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 2. தங்களின் கருத்துரைக்காக...

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/click-here-to-read-students-ability.html

  நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 3. கடவுள் இல்லை என்பது எல்லாம் பிறரது கவனத்தை திசை திருப்பி வேறுஒரு வியாபாரம் செய்வது போல.உதாரணமாக கீரிக்கும் பாம்புக்கும் சண்டைவிட போகிறேன் என்று கூட்டம் சேர்த்து,கூட்டம் சேர்ந்ததும் உடல் வலிமைதரும் லேகியம்,வசியமருந்து லேகியம் விற்பது போல்.கடைசிவரை கீரி பாம்பு சண்டை நடக்காது..நடந்தால் ஏதாவது ஒன்று செத்து போனால் மறுநாள் எதைவைத்து கூட்டம் சேர்ப்பது....கடவுள் இல்லை என்று சொன்னவர்கள்,சொல்பவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நம்மைவிட அதிக கோவில்களும்,பரிகார ஸ்தலங்களும் தெரியும்...போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றாக சொன்னீர்கள்
   இந்த இரண்டு கோஷ்டிகளுக்கும்
   கடவுள் வியாபார பொருளாக இருக்கிறார்
   என்பதுதான் யதார்த்தம்

   நீக்கு
 4. நன்று சொன்னீர் அய்யா

  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்
  என்றார் வள்ளலார்.
  அது போல்

  சுய நலம் துறந்து
  பொது நலம் நாடி

  கடமையினைச் செய்து
  பலனை எதிர்பார்க்காத

  அன்பு நெஞ்சங்களில்
  அன்புருவாய்
  இறைவன்
  அமர்ந்திருப்பான்.

  நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு