புதன், 10 ஏப்ரல், 2019

மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(2)

மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(2)

மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(2)

பல ஆண்டுகளுக்கு முன்பு உணவு பொருட்கள் 
மந்தார இலை அல்லது வாழை இலைகளில் தான் 
வைத்து பொட்டலமாக கட்டி பயன்படுத்தப்பட்டது.அந்த உணவு அதை இலையின் நறுமணத்துடன் அமிர்தமாக இருந்தது. 

பிளாஸ்டிக் கலாச்சாரம் வந்தபிறகு டீ ,காப்பி முதற்கொண்டு 
பிளாட்டிக் பைகளில் வழங்கப்பட்டு மக்களுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்று தெருக்கொரு புற்றுநோய் /நீரிழிவு/சிறுநீரக நோயாளிகள் /வயிறு உபாதைகள் நோயாளிகள் உருவாகிவிட்டனர் 
தற்போது பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு விட்டதால் எல்லா உணவுகளும் அலுமினிய தாள்கள் ஒட்டப்பட்ட காகிதங்களில், அலுமினிய டப்பாக்களில் வைத்து வழங்கப்படுகிறது. அலுமினியம் கூட உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் என்ன நோய்  வரும் என்று தெரியவில்லை. 

இதனால் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான அலுமினியம் உலோகம் வீணாக குப்பை  தொட்டியில் போடப்படுகிறது .அதை பார்த்து வயிறு எரிகிறது. அதை என்ன செய்யப்போகிறார்களோ  தெரிய போவதில்லை அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். நம் தலையெழுத்து முட்டாள்களைநாம் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நாசமாய் போய்க்கொண்டிருக்கிறோம். 

நான் 40 ஆண்டுகளாக டின்/அலுமினிய மெல்லிய தகடுகளைக் கொண்டு 
புடைப்பு சிற்பங்களை செய்து வருவதை என்னுடைய பொழுது போக்காக கொண்டுள்ளேன்.

மருத்துவ மனைகளில் கிடைத்த சிலதகடுகளை வைத்து சில உருவங்களை உருவாக்கினேன். அவற்றில் ஒன்று இதோ. வெள்ளை நிற தகடு கணினி உதவியுடன் தங்க நிறமாக மாற்றப்பட்டது. 


6 கருத்துகள்:

  1. இங்கே பல பொருட்களை இப்படித்தான் துர்ப்ரயோகம் செய்கிறார்கள். வரும் காலம் பற்றிய கவலை இல்லாமல்.

    பிள்ளையார் உருவம் அழகு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.
      மேலை நாடுகளில் கைபேசி மற்றும் கணிணி ஆகியவற்றை மறு சுழற்சி செய்து அதில் உள்ள தங்கத்தை பிரித்தெடுத்து நல்ல லாபம் பார்க்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்களைமறு சுழற்சி செய்து பயனுள்ள பொருட்களாக மாற்றுகின்றனர். நம் நாட்டு மக்களை போல் ரப்பர் டயர்களை எரித்து சுற்று சூழலை மாசுபடுத்தாது அதை மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துகின்றனர். இன்றும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். நமக்கும் சுற்று சூழலை பாதுகாக்கும் அறிவும் இல்லை நம்மை ஆளும் அரசு இயந்திரங்களுக்கு அது தொடர்பான கொள்கையே இல்லை. பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய பாதரச குழல் விளக்குகள் அப்படியே குப்பையில் வீசப்படுகின்றன. அதை பாதுகாப்பாக கையாள கூடிய தொழில் நுட்பங்களும் இன்னும் நம் நாட்டில் வளரவில்லை.

      நீக்கு
  2. குப்பை சேருவது வேதனைதான்
    பிள்ளையார் அழகு

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. நன்றி.DD
      ஸ்ரீராம் அவர்களை பற்றி ஒரு தகவலும் இல்லையே?

      நீக்கு