புதன், 24 அக்டோபர், 2018

இசையும் நானும் (331)-திரைப்படம்-கலைக்கோயில் (1964) பாடல்-நான் உன்னை சேர்ந்த செல்வம்.. நீ..

Movie: 

கலைக்கோயில் (1964)

Music: விஸ்வநாதன்-ராமமூர்த்தி 
Singer(s): ப்பி . பி .ஸ்ரீனிவாஸ் /பி.சுசீலா 
Lyricist: கண்ணதாசன்

M. நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழவேண்டும்

F. நம் காதல் உள்ளம் கலைக்கோயில்
இரு கண்கள் கோயிலுக்கு வாசல்
நமதாசை கோயில் மணி ஓசை
அதில் அன்பு வண்ண மலர் பூஜை
அதில்அன்பு வண்ண மலர் பூஜை (
நான் உன்னை)


M. ஸ்ரீராமன் நெஞ்சில் நின்ற சீதை
மலர் கண்ணன் தேடிக் கொண்ட ரா...தை
மனம் உருகி சூடிக் கொண்ட கோதை....
ஒன்று சேர்ந்து வந்ததிந்த பாவை



. உன் விரல்கள் என் அழகை மீட்டும்
உன் விழிகள் என் உயிரை வாட்டும்
உன் விரல்கள் என் அழகை மீ..ட்டும்
உன் விழிகள் என் உயிரை வா...ட்டும்
உன் குரலும் என் பெயரை கூட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும் 
(நான் உன்னை)


M. உன் அச்சம் நாணம் என்ற நாலும்
என் அருகில் வந்தவுடன் அஞ்..சும்
இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும் 
(நான் உன்னை)




புதன், 17 அக்டோபர், 2018

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.


ஆங்கிலத்திலே ஒரு பழமொழி ஒன்று உண்டு.
அது" Jack of all trades but master of none" 

அதுபோல் எனக்கும் எல்லாவற்றின் மீதும் ஒரு 
ஈர்ப்பு உண்டு. 

ஆனால் ஒன்று எனக்கு பிடித்துவிட்டால் அதை 
எத்தனை ஆண்டுகளானாலும் விடாப்பிடியாய் 
முயற்சி செய்து அதை நிறைவேற்றிக்கொண்டு விடுவேன். 

அதில் ஓவியம் வரைவது எனக்கு பிடித்த ஒன்று. 
1973 ஆம் ஆண்டு என் நண்பன் ஒருவன் பென்சிலால் 
வரையப்பட்ட நாகேஷின்  முகத்தை காண்பித்தான். 
அப்படியே அது கருப்பு வெள்ளை புகைப்படம் போல் இருந்தது. 

அதை பார்த்தவுடன் நாமும் அதை முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியது. 

அதனால் அவ்வப்போது பென்சிலால் படங்கள் வரைந்து அதை 
மெருகேற்றுவதில் தனி ஆனந்தம் .

இன்று பென்சிலால் முப்பரிமாண படங்களை வரைந்து  உலகெங்கும் ஓவியர்கள் கலக்குகிறார்கள். 

அதையும் ஒரு நாள் தொட்டுவிடுவேன். என்னுள்ளே இருக்கும் jack அதற்க்கு அனுமதிக்கவேண்டும். 

மயில்கள் எனக்கு மிகவும் பிடித்த பறவைகள். அதுவும் அது கூவும் அழகே அழகு. அதை அடிக்கடி கேட்டு பார்த்து ரசிப்பேன். அதன் அசைவுகள். ஆட்டம் பார்வை எல்லாமே அழகோ அழகு. 

அந்த பென்சில் ஓவியம் இதோ. 


ஞாயிறு, 14 அக்டோபர், 2018

நானும் ஒரு ஓவியன் தான்


நானும் ஒரு ஓவியன் தான்


இந்த தலைப்பின் கீழ் 16.10 2015 ல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை வரைந்து வெளியிட்டிருந்தேன். அதற்கு  திரு ஸ்ரீராம் மட்டும் கருத்து  தெரிவித்திருந்தார். 

அதற்குப் பிறகு உடல்நிலை சரியில்லாமையால் படம் வரைவதை நிறுத்திவிட்டேன். (இப்போது மட்டும் யார் கேட்டார்கள்? என்ற கேள்வி காதில் விழுகிறது). 

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு பென்சில் ஓவியம் வரைந்ததை அவருக்காக வெளியிடுகிறேன். 





சனி, 13 அக்டோபர், 2018

இசையும் நானும் (330)-திரைப்படம்-கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன் பாடல்::கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்

Movie: Kandukondain Kandukondain
Music: A. R. Rahman
Singer(s): Hariharan, Mahalakshmi Iyer
Lyricist: Vairamuthu

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

காதல் முகம்  -கண்டு கொண்டேன்   

விரல் தொடும் தூரத்திலே 

வெண்ணிலவு கண்டுகொண்டேன் 
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து 
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி 
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் 
உயிரை உடைப்பாள் ஒருத்தி 


என் கண் பார்த்தது என் கை சேருமோ 
கை  சேராமலே கண்ணீர் சேருமோ 

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

காதல் முகம்  -கண்டு கொண்டேன்   


மலர்மஞ்சம் விழி கெஞ்சும் 
மனம் அஞ்சுமல்லவா 
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் 
உன் தஞ்சமல்லவா 
உன் தனிமைக்  கதவின் தாள் நீக்கவா 

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

காதல் முகம்  -கண்டு கொண்டேன்   


மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன் பூக்கள்  திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன் 

கண்களைத் திறந்துன் கனவுகள் வளர்க்கும் 
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும் 

உன்னைத் தேடியே இனி எனது பயணமோ 
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ 
ஏ  கனவு மங்கையே உனது மனது 
எனது மனதில் இணையுமோ 

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

காதல் முகம்  -கண்டு கொண்டேன்   

விரல் தொடும் தூரத்திலே 

வெண்ணிலவு கண்டுகொண்டேன்

நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது 
கடல் கொண்ட நதியோ முகம் தனை  இழக்கும் 
நான் உன்னில் கலந்தால் புது முகம்கிடைக்கும் 
நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன் 
எந்த நேரமும் உன் கதவைத் தட்டுவேன் 
ஏ காதல் தேவனே எனது இமையை 
உனது விழிகள் மூடுமே

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

காதல் முகம்  -கண்டு கொண்டேன்   

விரல் தொடும் தூரத்திலே 

வெண்ணிலவு கண்டுகொண்டேன் 



சனி, 6 அக்டோபர், 2018

பெட்ரோல் /டீசல் விலையேற்றத்தை சமாளிக்க .....

பெட்ரோல் /டீசல் விலையேற்றத்தை சமாளிக்க .....

கீழ்கண்ட  வாகன வசதியை பயன்படுத்தலாம்


புதன், 3 அக்டோபர், 2018

மனிதா நீ எதற்கு கோயிலுக்கு செல்கிறாய்?

மனிதா  நீ எதற்கு கோயிலுக்கு செல்கிறாய்?

எனக்கு இன்று உண்மை  தெரிஞ்சாகணும்.

கோயிலுக்கு இறைவனை வணங்க செல்கின்றேன்.

ஏன் அங்கு மட்டும்தான் இறைவன் உள்ளானோ ?

பலருக்கு அப்படிதான் தோன்றுகிறது. அதனால்தான் அவனை
அங்கு காண  செல்வதாக கூறுகிறார்கள்.

இறைவன் உன்னுள்ளும் உள்ளான். உன்னை சுற்றியுள்ள
அனைத்திலும் உள்ளான் என்பது தெரியுமா .

சிலருக்கு தெரியும். பலருக்கு தெரியாது.

மனிதன் ஐம்புலன்களால்தான் இந்த உலகோடு தொடர்பு  கொள்ளுகிறான்.

அவனை உணரும் வரை மனதை நாம் ஒதுக்கி  தள்ள முடியாது.

கோயிலில் சிலர் அங்கு  கிடைக்கும் பிரசாதங்களை சுவைக்க செல்வதில் தவறேதும் இல்லை.

ஆனால் அந்த ஐம்புலன்களும் தங்கள் தனிப்பட்ட சக்திகளையும் செயல்பாடுகளையும் மறந்து ஒருங்கிணைந்தால்தான் ஒன்றேயான பரம்பொருளை உணர முடியும்.

அதற்கான வழி வகைகளை ஏற்படுத்தி தரும் இடம்தான் ஆலயம் என்பதை உணர வேண்டும்.

அதை உணராது தினமும் கோயிலுக்கு சென்று வருவது. மனம் என்னும் மாடு வெறுமனே  வெளியில் சென்று புல்  மேய்ந்து வருவதற்கு (கோயில் பிரசாதம் சாப்பிட்டு வருவதற்கு) மட்டுமே சமம்.

கோயிலின் வாசலில் நாம் போட்டுக்கொண்டிருக்கும் காலணிகளை வெளியிலேயே விடுவது (நாம் உடல் மீது கொண்டுள்ள அபிமானத்தை விடுவது)நம்முடைய உயிர் அணிந்துகொண்டிருக்கும் தோலால் மூடப்பட்ட நம் உடம்பைக் குறிக்கும்.

கோயிலின் உள்ளே பலி பீடத்தின் முன்பு வணங்குவது நம்  மனதில் உள்ள   நான் மற்றும் எனது எண்ணங்களையும் மற்றும் அனைத்து  தீய எண்ணங்களையும் விட்டு விட்டு தூய தெளிவான மனதுடன்
கருவறையில் நுழைவதைக் குறிக்கும்

கருவறையில் இருளில் உள்ள இறை வடிவம் மனிதர்களின் இதயத்தில்
உள்ளே உள்ள இருளில் உள்ள இறை வடிவம் போன்றது.

தீபத்தின் ஒளியில் வடிவம் தோன்றுவதைபோல் நம் உள்ளத்திலும்
தீபத்தின் ஒளி தோன்ற வேண்டும்.

தீப  ஆரத்தி காட்டப்படும்போது அனைத்தும் மறந்து(வடிவம் மறைகிறது-நாமும் நம்மை மறக்கின்றோம்) வெறும் ஒளி மட்டுமே நம் மனதில் நிறைகிறது. அனைத்தையும் மறந்து விளக்கின் ஒளியிலே விளக்க வொணா அமைதியை அடைகின்றோம்.

இந்த நிகழ்வு நம் மனதில் நிகழும் வரை கோயிலுக்கு செல்லவேண்டும்.

நினைத்தவுடன் அந்த நிலையை நாம் அடையும் நிலை வந்துவிட்டால்  அந்த நிலையிலேயே  நாம் இருந்து நிலையான இன்பத்தை அடையலாம்.

அதை விடுத்து மற்றவைகளில் கவனம் செலுத்துவதால் பயன் ஏதும்  இல்லை.

வழிபாட்டின் தத்துவம் அறிந்து வழிபாடு செய்யாவிடில் கோயில் சிலைகளின் மேல் ஓடும் பல்லிகளுக்கும் , எலிகள் போன்ற சிறு பிராணிகளுக்கும்  ,கரப்பான் பூச்சிகளுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லை.

திங்கள், 1 அக்டோபர், 2018

காந்தி மகானின் பிறந்த தினம்.

காந்தி மகானின்  பிறந்த தினம். 


150 ஆவது பிறந்த தினம் இவ்வுலக
மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு
திதி கொடுப்பது போல் ஒரு சடங்கு.

கைராட்டை நோற்பது போல் ஒரு
போஸ்.
அவர் சிலைகளுக்கு மாலை போட்டு
மலர் தூவுவதுபோல் ஒரு போஸ்
அவர் சமாதியில் மலர் வளையம்
வைத்து வணங்குவதுபோல் ஒரு போஸ்.
வைஷ்ணவ ஜனதோ ..ரகுபதி ராகவா ராஜாராம்...
இத்துடன் ஒரு நாள் கூத்து. சடங்கு முடியும்.
ஒவ்வொரு ஆண்டும்

படித்த மேல் தட்டு மக்கள் ஓட்டன்பரோவின்
காந்தி படம் பார்த்து விட்டு ஒரு சொட்டு கண்ணீர் விட்டு.
"oh. he is great" என்று சொல்லிவிட்டு புதிய திரைப்படத்திற்கு
ஆன்லைனில் டிக்கெட் புக் பாணனை செல்வது.

பாமர மக்களை அனைத்து  உருப்படாத சானல்களை சினிமாக்காரர்களை வைத்து கூத்தடித்து. பார்க்கவைத்து  இன்றய பொழுதை ஓட்டுவது.

அவர் பிறந்த நாளை அவர் வாழ்நாள் முழுவதும் நேசித்த கொள்கைகளுக்கு
சமாதி கட்டிய தினமாகவும் கொண்டாடினால் பொருத்தமாக இருக்கும்.
1.கள்ளை ஒழித்தது
2. அந்நிய பொருட்களை நிராகரித்தது
3.வாழ்வை  திறந்த புத்தகமாக வைத்துக்கொண்டது.
4. உண்மையை கடைப்பிடித்தது
5.நாணயத்தை ,நேரம் தவறாமையை, நேர்மையை, பிரார்த்தனையை. எளிமையை கடைப்பிடித்தது.
6.ஒழுக்கம்,பெண்கள் பாதுகாப்பு ,மத நல்லிணக்கம் இயற்கை வைத்தியம், சுதேசி தொழில்களை  பாதுகாப்பது..இவற்றை நம் நாட்டில் நிலைநாட்ட சாகும்வரை முயற்சிகள் செய்தது.

அவர் செய்த பல  நல்லவற்றை நிறைவேற்ற முயற்சி செய்யாமல் அவர் மீது எப்போது பார்த்தாலும் எதிரிடையான விமரிசனங்களையே மீண்டும் மீண்டும் மக்களிடையே பரப்பி மிகைப்படுத்துவது.

துறந்தார் பெருமை

திருக்குறள் விளக்கம்-என் பார்வையில் 



துறந்தார் பெருமை

குறள் 22: 

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

மு.வ உரை:

பற்றுக்களைத் துறந்தவர்களின் 
பெருமையை அளந்து கூறுதல், 
உலகத்தில் இதுவரை பிறந்து 
இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

என் பார்வையில்:

மேலே கண்ட குறளுக்கு 
தரப்பட்டுள்ள விளக்கம் சரியல்ல 
என தோன்றுகிறது . 

ஏனென்றால் துறந்தவர்களின் 
பெருமை தனை என்று கூறியிருந்தால்
மேற்கண்ட பொருள் சரியாக இருக்கும்.
ஆனால் துணை என்று கூறப்பட்டிருப்பதால் 
அந்த விளக்கம் சரியல்ல.

துறந்தவர்களின் பெருமைகளை பற்றி 
வீணாக பேசிக்கொண்டிருப்பது எப்படி
என்றால் இந்த உலகத்தில் வாழ்ந்து 
மடிந்து போனவர்களை பற்றி 
கணக்கெடுத்துக்கொண்டு 
ஆராய்ச்சி செய்வதால் என்ன பயன்?

அது வீண் வேலை என்று 
திருவள்ளுவர் சொல்ல விழைகிறார். 

கடந்த அதாவது இறந்த காலத்தில் 
வாழ்க்கையை வீணடிக்காதே,
நிகழ் காலத்தில் வாழ தொடங்கு என்கிறார். 

அவ்வாறு செய்யாமல் இருப்பது 
அரிதாய் கிடைத்த மனித பிறவியை
வீணடிப்பது ஆகும் என்று பொருள்.

கிடைத்தற்க்கரிய 
இந்த மனித பிறவியை
இறைவனை அறிந்துகொண்டு 
அவனை அடைவதற்கு 
பயன்படுத்தவேண்டுமே அல்லாது 
இதை போன்ற வீண் செயல்களில் 
ஈடுபடக்கூடாது என்பதே
இந்த குறளின் 
பொருளாக இருக்க முடியும்.

JamesAlen-என்ற அறிஞன் சொன்னான் 
It is a new life everyday 

அதைதான் பாரதி சொன்னான்
இன்று புதிதாய் பிறந்தோம் 
என்று அழகு தமிழில்.

Pl. remember. 
yesterday is a dead-Horse -you can't ride on it.