சனி, 28 அக்டோபர், 2017

இசையும் நானும் (242) -திரைப்படம் -கார்த்திகை தீபம் பாடல்:எண்ணப்பறவை சிறகடித்து


இசையும் நானும் (242)

திரைப்படம் -கார்த்திகை தீபம்  பாடல்:எண்ணப்பறவை சிறகடித்து 


MOUTHORGAN

கார்த்திகை தீபம்(1965)

HeroS.A.Asokan
Music DirectorR.Sudharsanam
LyricistKannadasan
SingersTMS
Year1965


எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா (எண்ணப்பறவை)
தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா
இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா
உன் துயர் கண்டால் என்னுயிர் இங்கே
துடிப்பது தெரியல்லையா
உண்மையறிந்தும் உள்ளம் வருந்த
நடப்பது தவறில்லையா (எண்ணப்பறவை)
ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி
அருகில் நெருங்கிடவா
உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே
அள்ளி அணைத்திடவா
அன்னையைப்போலே உன்னுடல் தன்னை
வருடி கொடுத்திடவா
நீ அமைதியுடன் துயில் கொள்ளும்
அழகை ரசித்திடவா (எண்ணப்பறவை)

6 கருத்துகள்:

 1. ’எண்ணப்பறவை’யை வெகுநாட்களுக்குப்பின் மனதில் சிறகடிக்கவைத்தீர்கள்; ந்ன்றி. எத்தனை வருடங்களாய் இந்த மௌத்ஆர்கன் வாசிப்பு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே. முதன் முதலாய் என் இசைக்கு கருத்து
   தெரிவித்துள்ளீர்கள். நான் என்னுடைய 66 வயதில் மவுத்தார்கன்பயிற்சி செய்ய தொடங்கினேன். எனக்கு நானே குரு.ஒரு வெறியுடன் அசுர சாதகம் செய்தேன், என்னுடைய முதல் பாடல். 10.11.2014 ல் யு டியூபில் வெளியிட்டேன். இணைப்பு.https://youtu.be/ozR4AzmMJqY

   நேற்றுவரை 242 ஹிந்தி,தமிழ்,கன்னட, தெலுங்கு மலையாளம் ஆங்கிலம் திரைப்பட பாடல்களும், கர்நாடக இசை பாடல்களும், தமிழ் பக்தி பாடல்களும் வெளியிட்டுள்ளேன்.இதில் நானே இயற்றி பாடியுள்ள பல பாடல்களும் அடங்கும். தங்கள் வருகை எனக்கு புத்துயிர் அளித்துள்ளது. மீண்டும் நன்றி.

   நீக்கு
 2. இசையில் கிறங்கியிருக்கிறீர்கள்! இசை மனதுக்கு அமுதம். 242 பாடல்கள்- சொற்ப காலவெளியில் என்பது உங்களது தாகத்தைக்காட்டுகிறது. மேலும் மேலும் நேர்த்தியாக உங்களது இசை அமைய அந்த சரஸ்வதி தேவி அருள்புரிவாளாக.

  உங்கள் வீடியோவோடு பாடலின் வரிகளைத் தருகிறீர்கள். கவிஞர், பாடகர், இசையமைப்பாளர், படம் வந்த வருடம் என விபரங்களுடன். இது பாடல் வெளிவந்த காலகட்டத்தைக் குறிப்பிடுவதால் மனம் மேலும் அந்த ஓடிவிட்ட நாட்களுக்காக ஏங்கி மருள்கிறது. இசை மேலும் இனிக்கிறது.

  பெரும்பாலானோர் இப்படி கவனம் எடுத்துக் காரியங்கள் செய்வதில்லை. நீங்கள் வித்தியாசமானவர்.

  பதிலளிநீக்கு
 3. நீங்களும் வித்தியாசமானவர்தான்.என்னுடைய உணர்வுகளை நன்றாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.என்னுடைய உழைப்பு வீண் போகவில்லை.என்னுடைய வலைப்பதிவில் பின்னோக்கி சென்றால் என்னுடைய மற்ற பரிணாமங்களை நீங்கள் ரசிக்க இயலும். நேரம் கிடைக்கும்போது மெல்ல மெல்ல சுவையுங்கள். என்னுடைய பரிசாக நான் வரைந்த கலைமகளின் படம் ஒன்றை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.

  பதிலளிநீக்கு