சனி, 31 டிசம்பர், 2016

2017- கனவுகள்.



2017- கனவுகள்.  








மகிழ்ச்சி  என்பது என்ன ?
பிறரை இகழ்ச்சியாக எண்ணாமல் 
இருப்பதுதான்   

உழைத்து பிழைக்கும் மனிதரை 
எல்லாம் உயர்வாகஎண்ணும் 
 போக்கு உலகத்தில் மலர்ந்தால் 
உண்மையிலேயே மகிழ்ச்சி 

மனிதனை மனிதன் ஆதிக்கம் செலுத்தி 
அடிமை செய்து சுரண்டும் கொடுமை 
இம்மண்ணிலிருந்து அகன்றால் 
மட்டற்ற  மகிழ்ச்சி 

பொறாமையும் போரும் 
சுயநலமும் பாலியல் கொடுமைகளும் 
இப்பாரினில் இல்லாது போயின் 
இன்னும் மகிழ்ச்சி 

இனிய  இவ்வுலகை மாசுபடுத்தி 
காசு பார்க்கும் கேடர்கள் திருந்தி நின்றால் 
இவ்வுலகத்து உயிர்கள் யாவும் 
இன்புற்று வாழுமே 

புதன், 21 டிசம்பர், 2016

இசையும் நானும் (152)-ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் ..

இசையும் நானும் (152)-ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் ..

Image result for oruthi oruvanai song lyrics

இசையும் நானும் (152)

இசையும் நானும் (148) Mouthorgan song-தமிழ்  song-ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் ..


Film சாரதா (1962) 


by TR PATTABIRAMAN




Singers:பி.பி ஸ்ரீனிவாஸ் /சுசீலா 


Music Director:

கே.வி .மகாதேவன் 


ஞாயிறு, 11 டிசம்பர், 2016

இசையும் நானும் (151)-ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு


இசையும் நானும் (151)-ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு



இசையும் நானும் (151)

இசையும் நானும் (148) Mouthorgan song-தமிழ்  song-

Film ஆண்டவன் கட்டளை 

by TR PATTABIRAMAN




Singers:டி எம் .சௌந்தரராஜன் 


Music Director:

Viswanathan Ramamoorthy 


Cast:சிவாஜி கணேசன் 




பாடல் வரிகள் கண்ணதாசன் 



 
ஆறு மனமே ஆறு - அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...

சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு.... 
https://youtu.be/Yn9_VmnevSA

சனி, 10 டிசம்பர், 2016

பாரதி பிறந்த தினம்

பாரதி பிறந்த தினம் 




பாரதி பிறந்தான்.
பார் அதிர தமிழ் கவிதைகளை
காற்றில் உலவ விட்டான்

சுதந்திரம் வேண்டி நின்றான்
நாட்டிற்கும் தனி மனிதனுக்கும்

ஓட ஓட விரட்டியடித்தது
ஆளும் வர்க்கம்
அதற்கு  பயந்து ஆதரவு
கரம் நீட்ட மறுத்தது
அடிமைகள்  கூட்டம்.

அதனால் அவன் அடைந்தான்
சொல்லொணா துன்பம்

துன்பத்திலும் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா "
என்று பாடினான்

வறுமையில் வாடியபோதும் 
அவன் வாடாமலர்போல் வாழ்ந்து 
நாட்டின் வண்ணமிகு  எதிர்காலத்தை 
வருமுன் உரைத்தான் 

அவனைப் போல் இனியொரு வீரம்
தீரம் மிக்க கவிஞன்  இந்த
உலகத்தில் பிறக்கப்போவதுமில்லை
அதுவரை அவன் புகழ் மறைய
போவதுமில்லை. 

மகா கவி பாரதியின்  பிறந்த தினம் 
உலக மக்களே சற்று நினைத்து 
பாருங்கள் ! அவன் முற்போக்கு சிந்தனைகளை 
எண்ணி எண்ணி வாழ்வில் மேம்பாடு 
அடைய வாருங்களே !

வியாழன், 1 டிசம்பர், 2016

இசையும் நானும் (148)-சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்


இசையும் நானும் (148)-சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் 



இசையும் நானும் (148)

இசையும் நானும் (148) Mouthorgan song-தமிழ்  song-

Film பாவமன்னிப்பு  

by TR PATTABIRAMAN




Singers:டி எம் .சௌந்தரராஜன் 


Music Director:

Viswanathan Ramamoorthy 


Cast:சிவாஜி கணேசன் 



படம்- பாவமன்னிப்பு  (1961)
பாடல் வரிகள் கண்ணதாசன் 


சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் 
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் .{சிலர்}

சிலர் அழுவார்  சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே  சிரிக்கின்றேன் 
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் 
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் .{சிலர்}

பாசம் நெஞ்சில் மோதும் 
அந்த பாதையை  பேதங்கள் மூடும் {பாசம்)
உறவை எண்ணி சிரிக்கின்றேன் 
உரிமையில்லாமல் அழுகின்றேன் 
சிலர் அழுவார்  சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே  சிரிக்கின்றேன் 

கருணை பொங்கும் உள்ளம் 
அது கடவுள் வாழும் இல்லம் 
கருணை மறந்தே வாழ்கின்றார் 
கடவுளை தேடி அலைகின்றார்
சிலர் அழுவார்  சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே  சிரிக்கின்றேன் 
காலம் ஒருநாள் மாறும் 
 நம் கவலைகள் யாவும் தீரும் 
வருவதை எண்ணி சிரிக்கின்றேன் 
வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார்  சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே  சிரிக்கின்றேன் 
https://youtu.be/bL5_Vzvw2bE