ராமா ராமா என்று நீ பாடு!
ராமா ராமா என்று நீ பாடு!
ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன்
ராமா ராமா என்று நீ பாடு
ராமா ராமா என்று நீ பாடு
மனமே நீ
ராமா ராமா என்று நீ பாடு (மனமே நீ )
உலகில் ராம பக்தியில்லாதவரை
கண்டால் விலகி ஓடு (மனமே நீ )
இகபர சுகங்கள் அளிக்கும் இனிய நாமம்
ஆசை கொண்டலையும் மனம்தனை
அசையாதிறுத்தி நம்மை திருத்தி
நல்வழிப்படுத்தும் நாமம்
வாதனைகளும் சோதனைகளும்
வாழ்வில் எத்தனை வந்தாலும்
நமக்கு உற்ற துணையாய்
வந்து காக்கும் நாமம் (மனமே நீ )
அரிதாய் கிடைத்த மானிட பிறவிதனை
அழியும் பொருட்கள் மீது மோகம் கொண்டு
அழியாது எளிதாய் ஜபித்து உயர்வடைய
உதவுவது ராம நாமம் (மனமே நீ )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக