புதன், 28 ஆகஸ்ட், 2013

வாழ வைக்கும் தமிழை போற்றுவீர்


வாழ வைக்கும் 
தமிழை போற்றுவீர்

தமிழ் மொழியில் பேசு
அது வாழ்த்தும் மொழி,
வாழ   வைக்கும் மொழி

ஆனால் இன்று தமிழை
வைத்து பலர் பிழைக்கின்றார்

சிலர் அதை வைத்து பிறரை
வசை பாடியே  காலத்தை
ஓட்டுகின்றார்

சிலர் பண்ணிசையால்
அதை இசைக்கின்றார்.

ஒரு சிலரோ மங்கலமான
இனிய தமிழ் சொற்கள்
நிறைந்திருக்க  அவைகளைவிடுத்து
அமங்கல சொற்களைக் கொண்டு
ஏதேதோ பாடல்கள் எழுதி மனிதர்களின்
மனதைகுப்பையாக்கி காசை அள்ளுகிறார்

தெளிந்த நீரோடைபோல்
பொங்கி பரந்து விரிந்து
ஓடும் காவிரிபோல  என்றும்
நிலைத்து நிற்கும் மொழி

நீ எப்படி வேண்டுமானாலும் பேசு
தமிழை. தமிழ்த்தாய் ஏற்றுக்கொள்வாள்.

தமிழனாய் பிறப்பெடுத்து
தமிழ் நாட்டில் வாழ்ந்துகொண்டு
தாய் மொழியாம் தமிழை
மேடையில் தமிழ் தமிழ்
என்று முழங்கிவிட்டு
வீட்டினில்தமிழை புறக்கணித்து
அந்நிய மொழியை அரங்கேற்றும்
பல வேடதாரிகளை  தமிழ்த் தாய்
ஏளனம் செய்கின்றாள்,
எள்ளி நகையாடுகின்றாள் .


கம்பன் வீட்டு
கட்டுத்தறியும் கவி பாடும்

ஆனால் தமிழை மறந்தோர்
தறி கெட்டுத்தான்  போவார்கள்.
தங்க இடமில்லாமல் உலகெங்கும்
நாடோடிகள்போல்  சுற்றி திரிவார்கள்.

நயவஞ்சகர்கள்
விரிக்கும் வலையில்
வலியச் சென்றுவிழுந்து
சிந்திக்கும் திறனின்றி
சிக்கிக்கொண்டு செய்வதறியாது.
வீரம் பேசி மாள்வார்கள்
என்பது காலம் புகட்டும் பாடம்

தெய்வத்  தமிழ்
இசையால் பாடி இறைவனை
வணங்குவதர்க்கே

பிறரை வசை பாடி
துன்புறுத்துவதர்க்கல்ல

தன்னை வாழ்த்துபவரை
வாழ்த்தி வாழ வைக்கும்
தமிழை போற்றுவீர்
புகழ்வீர்.புவியில்
இன்பமாய் வாழ்வீர்.  

pic-courtesy -google images

2 கருத்துகள்:

 1. அன்பின் பட்டாபி ராமன் - வாழவைக்கும் தமிழைப் போற்றுவீர் - கவிதை அருமை - கருத்துகள் பாராட்டத்தக்கவை. பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. பாராட்டும் உங்கள்
   அன்பு உள்ளத்திற்கு நன்றி.

   நீக்கு