புதன், 18 ஏப்ரல், 2012

இன்றைய வள்ளுவம்


இன்றைய  வள்ளுவம் 

வள்ளுவந்தன்னை உலகினுக்கே  தந்து 
வான்  புகழ்  கொண்ட  தமிழ்நாடு 
என்று  பாரதி  முழங்கிய  இந்நாட்டில் 
வள்ளுவன்  கொள்கைகளை  
குழி  தோண்டி  புதைத்துவிட்டு  அதன்  மீது  
வானுயர  சிலைகளை  அமைத்து  விட்டனர் 
மென்மொழி  பேசும்  வன்மனம்  கொண்ட
தமிழ் நாட்டை ஆண்ட
ஆட்சியாளர்கள் இங்கு 


கள்ளுண்ணாமையையும்  புலால்  மறுத்தலையும்
வலியுறித்திய  வள்ளுவன்  ஏனோ  திருக்குறளை 
முடிப்பதற்குள்  அது  எதிர்காலத்தில்  சாத்தியமில்லை 
என்று  எண்ணியே  சொல்லுதல்  யார்க்கும்  எளியவாம் 
அரிதாம்  சொல்லியவண்ணம்  செயல்  என்று  ஒரு  
குறளை  சேர்த்து  விட்டான்போலும் 

தற்கால  ஆட்சிகளின்  மாட்சி 

காலையில்  குடிநீருக்காய் குடங்களுடன்  
அலையும்  பெண்கள்  கூட்டம் 
மாலையில்  நாள்  முழுதும்  உழைத்து  கிடைத்த 
காசை  தன்னை  நம்பியிருக்கும்  குடும்பத்திற்கு 
கொடுக்காமல்  ஆண்கள்  அரசு  மதுக்கடைக்கு  சென்று 
தொலைத்துவிட்டு  இரவு  வீட்டிற்கு  சென்று  பெண்களை 
கண்ணீரை  வரவழைக்கும்  தினசரி  காட்சி 
இதுவே  தற்கால  தமிழக   கட்சிகளின்  ஆட்சியின்  மாட்சி 

பூவும் பொட்டும்

கணவனால்  பூவும்  பொட்டும்  நிலைக்கும்  என்று  நம்பியே 
தமிழ்  பெண்கள்  காயும்  வெய்யிலில்  பூ  கட்டி  விற்று 
கணவனுக்கும்  குழந்தைகளுக்கும்  சோறு  போடும் 
நிலைமையை  உருவாக்கி  விட்ட    ஆள  வந்த  சுரண்டல் 
பேர்வழிகள்  என்று  பெருமை   படைத்தது  கொண்டிருக்கிறது 
இன்றைய  தமிழ்நாடு 

கட்சி  அடிமைகள் 

கட்சி  தொண்டர்கள்  என்று  பெயர்  சூட்டி 
அவர்களை  நிரந்தரமாக  அடிமைகளாக்கி 
அவர்கள்  உழைப்பில்  சுகம்  காணும் 
அரசியல்  கட்சி  தலைவர்கள் 
கட்சி  தொண்டர்கள்  மூலம்  பல  கோடி  வசூலித்து 
ஏப்பம்  விடும்  அதன் தலைவர்கள்  
ஆட்சிக்கு  வந்தவுடன்  மக்கள் 
வரிபணத்தில்  சில  ஆயிரம்  பேருக்கு 
மட்டும்  இலவசமாக  சிலவற்றை  
அளித்துவிட்டு  அதிலும் கமிஷன்  பெற்றுக்கொண்டு 
மக்களை  ஏமாற்றும்  வித்தையை
மக்கள்  எப்போதுதான்  
புரிந்து  கொள்ளபோகிறார்களோ 


தமிழனின்  தலைஎழுத்து 

தமிழனின்  தலைஎழுத்து  
ஏதாவதொரு  அரசியல்  கட்சிக்கு 
தன்னை  ஆயுள்  முழுவதும் 
தன்னை  அடிமையாக  வைத்திருப்பதே 
உணர்ச்சிக்கு  அடிமையாகி  
உண்மையை  உணரும் 
சிந்திக்கும்  சக்தியை  அறவே 
இழந்து  விட்டதே இதற்க்கு காரணம் 
இந்நிலை  மாறினால்தான்  
தமிழனும்   தமிழ்நாடும்   முன்னேறும்  

2 கருத்துகள்:

  1. அன்பின் பட்டாபி ராமன்

    இன்றைய வள்ளுவம் அருமை - இன்றைய சூழ்நிலைக்கு அன்றைக்கு எழுதப்பட்ட வள்ளூவம் பெரும்பாலும் சரியாக இருப்பினும் - இன்றைய நடைமுறைக்கு அறிவுரை சொல்லும் குறள்கள் இல்லை. நாமே எழுத வேண்டியது தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. குறளின் குரல்
    எக்காலத்திற்கும் ஏற்றது

    அதில் மாற்றுக்
    கருத்து கூடாது.

    ஆனால் அதை வாழ்க்கை
    வழி காட்டி நெறி நூலாக கொண்டு
    கற்போரும் இல்லை

    அதன் உண்மைப் பொருளை
    உணர்ந்து கடை பிடிப்போரும் இல்லை

    அதை கற்பதும், ஒப்பித்தலும் கண்டமேனிக்கு
    பொருள் கூறுதலும் காலத்தின் கோலம்

    உண்மைப் பொருளை
    உணர நினைப்பவர்க்கு
    வள்ளுவம் காட்டும்
    வழியே போதுமானது.

    ஊரை ஏமாற்றும்
    பேர்வழிகளுக்கும் அது
    இடம் கொடுக்கிறது. தற்காலத்தில்.

    அதுதான் அதன்
    நடுநிலைத்தன்மை

    எப்படி இருந்தாலும்
    அது அதன் சக்தியை என்றும் இழக்காது
    இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள்
    நிலைத்து வாழும் இவ்வுலகில்.

    பதிலளிநீக்கு