செவ்வாய், 17 ஏப்ரல், 2012

தமிழே நீ என்றும் இருப்பாய்


தமிழன்னையே 
உன்னுடைய   கோடானகோடி  
பிள்ளைகளில் நானும்  ஒருவன்
  ;
நான்  தமிழறிந்தவனே  தவிர  தமிழை முழுமையாக கற்றவனல்லன் ;
தன  குழந்தையின்  மழலை  தாய்க்கு  இனிப்பது  போல் 
நான் எழுதும்  தமிழும்  உனக்கு  நிச்சயம்  இனிக்கும் 

தாய்  தமிழே  உனக்காக  இங்கு  வாழ்நாள்  
முழுவதும்  உழைத்தவர்கள்  உண்டு  .

ஆனால்  உன்னை  வைத்து  பிழைப்பவர்கள்தான்  
அதிகம்  இன்று  உனக்கும்  தெரியும்
கரை காண  இயலா  கடலின்  கரையில் 
நின்றுகொண்டு   கடல்முழுவதையும்  
கரைத்து   குடித்து  விட்டதாக  மார்  தட்டும்
இறுமாப்பு  பிடித்தவர்களும்  உன்  படைப்புக்கள் 
என்பதை  நான் அறிவேன் 


என்  செய்வது ?
அவர்களும்  உன் குழந்தைகள்தானே !


கருவியாக  இருப்பவன்  கர்வியாகவும்  இருக்கிறான் 
தன்னை  வரகவி  என்று  வர்ணித்துக்கொள்ளுகிறான்  
வரலாற்றில்  காணாமல்  போகபோகும்  அவர்கள் 
சுவரில்லா  சித்திரங்கள் ;

உள்ளிருந்து  நீ  எழுதுவதை  உணராமல்  தானே  எழுதியதை 
தாந்தோன்றிதனமாய்  தம்பட்டம்  அடித்துக்கொள்ளுகிரார்கள்  
;
தமிழுக்கு  இழுக்கென்றால்  தலையை  கொடுப்பேன்  என்கிறார் 
தமிழே தெரியாதவன்  
 .
வாழை  பழத்தை  வாலை  பலம்  என்று உச்சரிக்கும் 
தமிழர்கள்தான்  இன்று தமிழ்  நாட்டின்  குடிமகன்களும்  முடிமகன்களும்  ;.

பிழைக்க  மட்டும் உன் தயவு  தேவை  சிலருக்கு  
உன்னை வளர்க்கும்  எண்ணம்  அவர்களுக்கு  இல்லை 

இன்னும்  சிலர்  கேட்கிறார்கள்  தமிழ் படித்தால் 
பிழைப்பு  நடக்குமா  என்று ?

தமிழே  நீ என்றும்  இருப்பாய் 
கடல்  சூழ்ந்த  இவ்வுலகம்  என்னும்  
கண்ணாடி  புட்டிக்குள்பத்திரமாய்  
ஆனால்  புட்டியின்  மேல்  உள்ள  
தகவல்  சீட்டுக்கள்  மட்டும்
மாறும்   அவ்வப்போது  .


1 கருத்து:

  1. அன்பின் பட்டாபி ராமன்

    //நான் தமிழறிந்தவனே தவிர தமிழை முழுமையாக கற்றவனல்லன் //

    அருமையான அறிமுகம் - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு