தேவர்களும் அசுரர்களும் -அப்பாவி மனிதர்களும்.

தேவர்களும் அசுரர்களும்
சாகா வரம் பெற்றவர்கள்.
தேவர்கள் மனித குலத்திற்கு
நன்மை செய்பவர்களாகவும்
அசுரர்கள் தீமை செய்பவர்களாகவும்.
பன்நெடுங்காலமாகவே
புராண புரட்டுக் கதைகள் மனிதர்களின்
ஊனிலும் உணர்விலும்
கலக்கப்பட்டு வழிவழியாக
வந்துகொண்டிருக்கிறது.
இந்த இரண்டு கூட்டத்திற்கும்
ஒரு குரு இருப்பார். அவர் இவர்களை
வழி நடத்திக்கொண்டிருப்பார்.
அவ்வப்போது கடவுள் தோன்றி
இவர்களிடையே நடை பெறும் போரில் சிக்கி தவிக்கும் மனித குலத்தில் அவர்கள் எல்லாவிதமான துன்பங்களை அனுபவித்து
அழியும் விளிம்பில் இருக்கும்போது வந்து காப்பாற்றுவார்.
இதுதான் இவர்களின் concept
இந்த புளுகுமூட்டைகளிலிருந்து மக்களை காப்பாற்ற
கடவுள் சில சமயம்
தூதர்களை அனுப்புவார். கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போகும்போது பல வடிவங்களில் தோன்றி அமைதியை நிலை நாட்டுவார்.
அப்படி அவர் தோன்றிய வடிவங்கள் ஒன்றும் ஒவொரு புதிய கடவளாக மாறிவிட்டன. அவைகளை ஒரு கோயில், ஒரு தல புராணம், வழிபடும் முறை என ஆயிரக்கணக்கில் தோன்றிவிட்டன.
இதனால் கடவுள் ஒருவரே என்ற எண்ணம் மக்களிடையே மறைந்துவிட்டது.
இந்த உண்மை புரியாமல் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டிக்கொண்டு இந்த உலகை நரகமாக்கி கொண்டு வருகின்றனர்.
மதவாதிகளும் தங்கள் சுயநலத்திற்காக மென்மேலும் இந்த மோதல்களை அணையாமல் பார்த்துக்கொண்டு வருகின்றனர்.
இந்த கான்செப்ட் மதத்திற்கு மதம் மாறும். காலத்திற்க்குக்கேற்ப அணுகுமுறைகள் மாறுபடும்.
ஆனால் இந்த மதவாதிகளும் மத தலைவர்களும். அந்த உளுத்துப்போன கொள்கைகளையே மக்கள் மீது திணித்து அவர்களை மக்குகளாகவும் மடையர்களாகவும் ஆக்கி வைத்து அவர்கள் சுக போகத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த இனத்தில் கடவுள் நம்பிக்கை உடையவர்களும் அடக்கம்,இல்லாதவர்களும் அடக்கம்.இருவருக்கும் உண்மை என்னவென்று தெரியாது என்பதே உண்மை.
அவரவர்கள் தாங்கள் சொல்வதுதான் உண்மை என்றும் மற்றவர்கள் கூறுவது அபத்தம் என்று மோதிக் கொள்வார்கள்.
ஒவ்வொருவர் பின்னும் ஒரு கூட்டம். போலி சமதர்மம் பேசும் நடிகர் நடிகைகள் மற்றும் பல தலைவர்கள் நடிப்பதை உண்மை என்று நம்பி அவர்கள் பின்னால் செல்லும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் போல் இருக்கும்
உண்மை புரியாமல் அந்த கூட்டம் அவர்களுக்காக தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழந்து பரிதவிக்கும்.
ஆனால் இவர்கள் நன்மை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மனித குலத்தை தங்கள் அடிமைகளாக வைத்துக்கொண்டு திரிகிறார்கள்.
மக்களை மொழியின் பெயரால்,மதங்களின் பாரம்பரியத்தின் பெயரால் அரசியல் கட்சிகளின் பெயரால் ,எண்ணற்ற பிரிவுகளாக ஆதிக்க சக்திகளின் துணையைக் கொண்டு பிரித்து வைத்து அவர்களை சிந்திக்க விடாமல் செய்து உண்மை பொருளை அறியவிடாமல் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் செய்துகொண்டு மக்களை அறியாமைக் குருடுகளாக ஆக்கி , விலங்குகள் போல் வாழ பழக்கி வைத்து விட்டார்கள்.
எவராவது இவர்களை தூக்கிவிட முயற்சி செய்தால் போதும் மத சக்திகளும் ஆதிக்க சக்திகளும் அந்த மனிதரை பூண்டோடு அழித்துவிடும்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. என்ற வள்ளுவரும் அறிவுரையைக் கேட்டு. தாங்களும் தம்மை சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களும் நலமாக வாழ வழிவகைகளை நாட வேண்டும் என்று எவரும் சிந்திப்பதே கிடையாது.
தன்னுடைய அழிவிற்கும் தன்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் சுற்றுப்புற உலகத்திற்கும் கொடிய தவறுகளை இழைத்து விட்டு வருந்துவதும், வாடுவதும், துன்புற்று மாய்வதும் வாடிக்கையாக போய்விட்டது.
தான் செய்யும் தவறுகளுக்கு பரிகாரம் தேடாமல் அவர்களை சுரண்டி , பிழைக்கும் மனிதர்களிடம் சென்று அடைக்கலம் தேடுவதும் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி ஸ்வர்க பூமியாகிய இந்த உலகத்தை கண் முன்னே காணுகின்ற நரக பூமியாக மாற்றிவிட்டனர்.
இந்த மனித குலம் திருந்துமா?
எல்லாம் பேச்சோடு சரி!.

சிந்தனைக்கு விருந்தான
பதிலளிநீக்குசிறந்த பதிவு