இசையும் நானும் (349)-திரைப்படம்- ஆனந்த ஜோதி (1963) பாடல்- ஒரு தாய் மக்கள் நாமென்போம்-ஒன்றே எங்கள் குலமென்போம்
MOUTHORGAN VEDIO-349
இசை -விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்: டி .எம்.சவுந்தர்ராஜன்
பாடல் வரிகள்-கண்ணதாசன்
ஆ: ஒரு தாய் மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள் குலமென்போம்
தலைவன் ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாமென்போம்..
வாழ்க…வாழ்க…வாழ்க…
ஆ: பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம் (ஒரு தாய்)
ஆ: உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவில் நண்பர்கள் பலர் கொண்டோம்
மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம் (ஒரு தாய்)
ஆ: தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம் (ஒரு தாய்)
கேட்டேன், ரசித்தேன்.
பதிலளிநீக்கு