வெள்ளி, 11 ஜனவரி, 2019

எதற்காக பிறக்கிறோம்?

எதற்காக பிறக்கிறோம்?

இந்த உலகில் பிறக்கிறோம்.?

இந்த கேள்வியை ஒவ்வொருவரும்
தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். 

ஆனால் யாரும் அதைசெய்வதில்லை.

மாறாக எல்லோரையும் நாம்தான்  கேள்விகளைக் கேட்டு
பதில்களை வாங்கி நம் மண்டையில் திணித்துக் கொள்கிறோம்.

எதற்காக?

பிறர் யாராவது நம்மை அந்த கேள்வியைக் கேட்டால்
அவர்களுக்கு பதில் சொல்வதற்காக.

மனிதர்களைத் தவிர புத்தகங்களிலிருந்து வேறு
நம் கேள்விகளுக்கு பல விளக்கங்களை பெற்றுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு விளக்கமும் அவரவர்
பார்வையைப் பொறுத்து வேறுபடுகிறது.

இதனால் குழப்பம் ஏற்படுகிறது.

அதற்கு பிறகுதான் நாம் சுயமாக சிந்திக்க தொடங்குகிறோம்.
நாம் கேட்ட விளக்கங்களில் எது உண்மையானது என்பதை
முயற்சி செய்கிறோம்.

அதை செயலில் கொண்டு வரும்போதுதான்
அனுபவம் பெறுகின்றோம்.

இது இருக்கட்டும்
.
நாம் ஏன்  பிறக்கிறோம் என்றால்.நம் மனதில் உள்ள
நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிகொள்வதற்கு

நாம் நினைப்பதை செயல்படுத்தி இன்பம் அடைவதற்கு.

இன்பத்தை தேடும் முயற்சியில் இடைஇடையே
துன்பம் வந்தால் அதை அனுபவிப்பதற்கு.

ஆனால் அதை மட்டும் நாம் செய்வதில்லை.
நம் ஆசைகளை செயல்படுத்தினால்
மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து
மனதிற்குள்ளே மூடி வைத்து மன  நோய்க்கு ஆளாகி
பெரும்பாலானோர் வீணே மடிகின்றனர்.

ஒன்று ஆசைப்படாமல் இருக்க வேண்டும்.
அப்படி ஆசைப்பட்டுவிட்டால் அதை எப்படியாவது நிறைவேற்றிவிடவேண்டும்.

இப்படி செய்பவன்தான்
உலகில் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.

நம்முடைய ஆசைகள் பிறருக்கு துன்பம் வரவழைக்கும் எனில்
அதை முளையிலேயே கிள்ளிவிடவேண்டும்.

நாம் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு ஆசைப்படுவதில் தவறில்லை.
ஆனால் அதற்காக முயற்சிகள் மேற்கொள்ளாமல் பொறாமைக் குணத்தை மட்டும் வளர்த்துக்கொண்டால் தோல்வியும் அவமானமே  மிஞ்சும்.

ஆசைகள் இருக்கும்வரை பிறவிகள் தொடரும்.

பிறவிகள் என்றால் இன்பமும் துன்பம்
இருந்துகொண்டுதான் இருக்கும்.

இனி பிறவி வேண்டாம் என்றால்
எல்லா ஆசைகளையும் விட்டுவிடுங்கள்

வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவியுங்கள். 

8 கருத்துகள்:

  1. வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவியுங்கள்....

    நல்ல விஷயம். வருவதும் போவதும் நம் கையில் இல்லை எனும்போது எதற்குச் சிந்திக்க வேண்டும்.

    சிறப்பான சிந்தனைகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதாவது ஒரு இலக்கை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்காக மட்டும் உழைத்தால் அதற்க்கே பல ஆண்டுகள் ஆயுளில் .அந்தந்த வயதில் அனுபவிக்கவேண்டிய பல ரசமான . அனுபவங்களை நாம் இழக்கின்றோம். என்பதை யாரும் உணருவதில்லை.

      நீக்கு
  2. வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிப்பதுதான் வழக்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் உண்மை. நாம் விதியை வென்றுவிட்டோம் என்று கர்வமுற்று திரிவது நம்மை காலை வாரி விடும் செயல். குதிரைகள் வாங்கப் போன வாதவூரார் சிவபெருமானின் உபதேசம் கேட்ட பின்பு கொண்டு சென்ற பணத்தை சிவபெருமானுக்கு கோயில் கட்ட செலவு செய்து விட்டார். எல்லாம் இறைவனின் திருவுள்ளம். அதுதான் நடக்கும். நாம் நினைப்பது ஒன்று நடப்பது வேறு.

      நீக்கு
  3. /வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவியுங்கள். //
    அப்படிதான் சார் இருக்க முயல்கிறேன் .ஆனாலும் எதாவது சிறு தடை வந்தா மனம் சுணங்குகிறது .ஆனாலும் வீழ்வது எழும்பவேனு மீண்டும் உற்சாகப்படுத்திக்குவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் நமக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் நாம் அனுபவிக்கிறோம்.ஆனால் நம்முடைய அகந்தையினால் நம்மால்தான் அனைத்தும் நடைபெறுகிறது என்று தவறாக எண்ணுகிறோம். பலர் தந் முயற்சியால் இந்த உலகில் பல ஆண்டுகள் பாடுபட்டு ஒரு துறையில் உழைத்து கற்ற பின் அதை விட்டுவிட்டு அவர்கள் கற்ற துறைக்கு சம்பந்தமில்லாத துறை யை தேர்ந்தெடுத்து செயல்படுத்த தொடங்குகிறார்கள். விதியை மீறுவதற்கு சாதாரண மனிதர்களுக்கு சக்தியில்லை .விதியை தெரிந்துகொண்டாலும் அது செயல்படுவதை தடுக்க முடியாது.கணக்கிலடங்கா கோள்களை படைத்த இறைவன் அவைகள் ஒன்றுக்கொன்று மோதாமல் அவைகளுக்கு விதிக்கப்பட்ட சுற்றுப் பாதைகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக சுற்றி வருகின்றன. அதுபோல்தான் நம்மையும் படைத்த இறைவன் அவன் நமக்கு விதிக்கப்பட்ட நிகழ்வுகளை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு மனம் சுணங்காமல் செய்து வந்தால் போதும் இவ்வுலக வாழ்க்கை இனிதே செல்லும்.

      நீக்கு
    2. தடைகளை கண்டு அஞ்ச வேண்டியதில்லை.இறைவன் நமக்கு தடைகளை நம்முடைய நலனுக்காக ஏற்படுத்துகின்றன. அது வேகமாக ஓடும் வண்டிக்கு பிரேக்காக செயல்படுகிறது. அது நம்மை விபத்திலிருந்து காப்பாற்றுகிறது. மின்சார பல்பில் உள்ள பிலமென்டில் மின் தடை ஏற்படுத்துவதால்தான் அது ஒளிர்கிறது. இஸ்திரி பெட்டியில் தடை ஏற்படுவதால்தான் துணிகளை மடிப்பாக செய்ய முடிகிறது. இதுபோல் நமக்குஎராளமானஉதவிகளையும் நன்மைகளையும் தடைகள் செய்கின்றன. அதனால் அதை வரவேற்கவேண்டும்.அதை வெறுப்பதோ, மனம் வருந்துவதோ கூடாது.

      நீக்கு