சனி, 12 ஜனவரி, 2019

அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே சொந்தம்.


அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே சொந்தம். 



ஒருவன் மற்றவரிடமிருந்து  ஒரு பொருளை திருடினால்
தண்டனை நிச்சயம் கிடைக்கும். இருந்தும் திருடுகிறான்.சிறைப்படுகிறான்
சிறையிலிருந்து வெளியே வந்ததும் இன்னும் பெரிய அளவில் திருடுகிறான். பிறகு இதுவே அவனுக்கு வாடிக்கையாகி விடுகிறது.

ஆனால் அவனுக்கு நல்ல நேரம் வந்தால்
நல்ல ஞானியை சந்திக்க நேர்ந்தால்
அவன் பல ஆண்டுகளாக செய்து வந்த தீய செயல்களை விட்டுவிட்டு நல்லதொரு பாதையை அமைத்துக்கொண்டு நல்ல நிலையை அடையலாம்
.
இராமாயண காவியத்தை இயற்றிய வால்மீகி 
வழிப்பறி கொள்ளைக்காரனாக வாழ்க்கை நடத்தி வந்தார்.
நாரத முனிவரை சந்தித்ததும் அவர் வாழ்க்கை
இப்படித்தான் திசை மாறியது



அளவுக்கு அதிகமாக பொருளை சேர்ப்பவன் அதை அனுபவிக்க முடிவதில்லை.மாறாக அதை தம்மிடமிருந்து யாராவது பறித்து சென்று விடுவார்களோ அல்லது அவைகளை அனுபவிக்காமல் இந்த உலகை விட்டு சென்றுவிடுமோ என்று வாழ்நாள் முழுவதும் பயந்து சாகிறான்.
அதை பாதுகாக்கும் பொருட்டு சில நேரங்களில் போராடி திருடர்களால் கொல்லப்படுகிறான்.

வாழ்நாளில் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி சேர்த்த  சொத்துக்கள் அவனுக்கு பலவித காரணங்களினால் பயன்படாமல் போய்விடுகிறது.

அவர்கள் தானும் அனுபவிப்பதில்லை
பிறருக்கும் அதை கொடுப்பதில்லை.

ஆனால் அவர்களுக்கு இறைவனின் கருணை இருந்தால் அவர்களை தடுத்தாட்கொள்ள தகுந்த ஒரு பெரியவரை அவர்களிடம் இறைவன் கண்டிப்பாக அனுப்பிவைப்பான்.

புரந்தரதாசர், பட்டினத்தார், பத்திரகிரியார் 
கூரத்தாழ்வான் போன்ற போல எண்ணற்ற மனிதர்களுக்கு இறைவன் தடுத்தாட்கொண்ட நிகழ்வுகள் அனைவரும் அறிவர்.

அவர்கள் ஒரே கணத்தில் அத்தனை சொத்துக்களையும் தானம் செய்துவிட்டு துறவு பூண்டு இறைவனை  சரணடைந்து  விடுதலை பெற்றனர்.

இவ்வுலகில் உள்ள அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே சொந்தம். 
அவைகளுக்கு நாம் சொந்தம் கொண்டாடுவது அறிவீனம்.

இந்த உலகில் இறைவன் நமக்கு அளித்திருப்பதை அனுபவித்து மகிழ்வோம். அதே நேரத்தில் அவை நம்மை விட்டு சென்றுவிட்டால்  மனம் நொந்து வருந்தாமல் அமைதியாக இருக்க பழகி கொள்வோம்.






3 கருத்துகள்:

  1. நல்ல கருத்துகள், தத்துவங்கள்.

    சிலசமயம் எனக்கு ஒன்று தோன்றும். நல்லவர்களாய் இருப்பவர்களுக்கு இறைவன் லேசில் புலப்படுவதில்லை. தீய வழியில் செல்பவர்களுக்கு, அவர்களை நல்வழிப் படுத்தவேண்டி உடனே அவர்களிடம் ஏதோ ஒரு ரூபத்தில் சென்று விடுகிறான்.!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவர்களால் உலகிற்குத்தீங்கு ஏதும் இல்லை. ஆனால் தீயவர்களால் அனைவருக்கும் துன்பம் அதனால்தான் அவர்களை விரைவில் அப்புறப்படுத்தவேண்டி அவர்களுக்கு மிக குறுகிய காலத்தில் அருள் செய்கிறான். உண்மையில் அவன் பார்வையில் இருவரும் ஒன்றே.

      நீக்கு