செவ்வாய், 22 ஜனவரி, 2019

அந்த நாள் நெஞ்சிலே வந்ததே.. நண்பனே.நண்பனே

அந்த நாள் நெஞ்சிலே வந்ததே..
நண்பனே.நண்பனே 


அந்த நாள் நெஞ்சிலே வந்ததே
வந்ததே..நண்பனே நண்பனே

இந்த நாள் அன்றுபோல் இன்பமாய்
இல்லையே ..நண்பனே நண்பனே.

இரண்டு சக்கர மிதி வண்டியில்
ஆனந்தமாய் மனைவி மக்களுடன்
சவாரி செய்து மகிழ்ந்த அந்த நாட்கள்
இனி வருமோ? வராது.




                                                                          பென்சில் ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

காலம் கடந்தது ...கடந்தவைதான்.

35 ஆண்டுகள் சைக்கிள் சவாரி.
கால் முட்டி தேய்ந்துவிட்டதால் மருத்துவர் அறிவுரைப்படி
16 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டது சைக்கிள் சவாரிக்கு.
அதற்கு பிறகு முடிந்த அளவு நடைப்பயணம்தான். இப்போது அதுவும் இல்லை. எங்குசெல்லவேண்டுமென்றாலும் வாடகை வண்டிதான்.

இருந்தாலும் அந்த கால பசுமையான நினைவுகளை நெஞ்சம் என்றும் மறப்பதில்லை. ஒன்றா இரண்டா .எண்ணற்றவை. எளிதில் மறக்க முடியாதவை. 

8 கருத்துகள்:

  1. பென்சில் ஓவியம் அட்டகாசம் சார் ..நினைவுகளை அப்படியே பேப்பரில் கொண்டு வந்திருக்கீங்க

    பதிலளிநீக்கு
  2. தாயும் சேயும் மிதிவண்டி சவாரியை புன்னகையுடன் ரசிப்பதை கவனித்தீர்களா?இனி அதுபோன்ற இன்பமான காலம் வருமோ?

    பதிலளிநீக்கு
  3. அதே அதே !! தந்தை ஓட்ட அம்மா மடியில் வீற்றிருக்கும் குழந்தைக்குத்தான் எவ்ளோ மகிழ்ச்சி தாய் சேய் இருவர் முகத்திலும் ...இப்போல்லாம் நினைச்சா விமான பயணம் ஆனா இந்த ஸந்தோஷம் ஒருவர் முகத்திலும் இல்லை .எல்லாம் பரபரப்பா வேகமாத்தான் போவாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வானில் பறந்தாலும் நீரில் மிதந்தாலும் தரைக்குத்தான் வரவேண்டும் என்பது விதி. தண்ணீரில் மூழ்குபவன் தரைக்கு வரும் வரை பதட்டத்தில்தான் இருப்பான்.நான் இதுவரை விமானம், கப்பல் அருகில் கூட சென்றதில்லை. எனக்கு அந்த ஆசையும்கூட கிடையாது.

      நீக்கு
  4. ஓவியம் அருமை.

    திருமணமான புதிதில் என் சகோதரிக்கும் திருமணம் நடந்திருந்த நேரம். சென்னையில் ஓரளவு தூரத்தில் இருவரும் குடி இருந்தோம். தங்கை வீட்டுக்கு வாரம் ஒருமுறை மனைவியையும், மகனையும் சைக்கிளில் வைத்து மிதித்து அழைத்துச் சென்றது கனவு போல இருக்கிறது! மகன்களையும் பள்ளியிலிருந்து சைக்கிளில் விட்டு, அழைத்து வந்ததும் அது போலவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசக்கார பைசைக்கிளை மறக்கமுடியுமா?
      பளபளவென்று துடைத்து வைத்து எண்ணெய் கிரீஸ் இட்டு.அளவாக காற்றை நிரப்பி வைத்தால் அலுங்காமல் குலுங்காமல் பல மைல் சுமந்து செல்வான். சுற்றுப்புறத்தை மாசுபடுத்த மாட்டான்.
      காலம் செய்த கோலமடி .நடுவில் காணாமல் போய்விட்டானாடி. ஆனால் மீண்டும் மீண்டு வருவான்.

      நீக்கு
  5. அட்டகாசம்.... ரொம்பவும் அழகான ஓவியம். நெய்வேலி நகரில் இருந்த வரை சைக்கிள் பயணம் தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.வருகைக்கு. சைக்கிளில் பயணிப்பதே தனி சுகம்.

      நீக்கு