திங்கள், 21 ஜனவரி, 2019

முகத்திற்கும் அதிர்ஷ்டத்துக்கும் தொடர்பு உண்டா?

முகத்திற்கும் அதிர்ஷ்டத்துக்கும்
தொடர்பு உண்டா?

முகத்திற்கும் அதிர்ஷ்டத்துக்கும்
தொடர்பு உண்டா?

இல்லை .இல்லை அது மூட நம்பிக்கை
என்று கூறுபவர்கள் சிலர்.

ஆம் உண்மைதான்.
என்று நம்புபவர்கள் பலர்.

ஒரு வேலைக்கு போகும்போதோ,
அல்லது தொடங்கும்போதோ
சில மனிதர்கள்,விலங்குகள், பறவைகள்
முகங்களில் விழிக்கக்கூடாது என்று
பட்டியலே போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஏதாவது நடக்காமல் போனால் இன்னார் முகத்தில்
விழித்ததனால்தான் நடக்காமல் போயிற்று என்று
அவர்களை வெறுப்போடு கரித்து கொட்டுபவர்கள்  பலர்.

அதேபோல் இவர் முகத்தில் முழித்தால்
அதிருஷ்டம் என்று ஒரு பழமொழி
மக்களிடையே நிலவி வருகிறது.
அது உண்மையா? 

5 கருத்துகள்:

  1. விலங்குகள் முகத்தில் முழித்தால் சகுனமில்லை னு சொன்னா நம்மூர் விவசாயி ஆடு மாட்டு கோழி முகத்தில் தானே விழிக்கிறார் .
    காலையில் என்னை எழுப்பி விடுவதே எங்க வீட்டு பூனைதான் சார் :)
    நம்ம மனசு பாசிட்டிவ் விஷயங்களை நினைச்சு அதன் வழி நடந்தா கெட்டது நம்மை பார்த்து ஓடிடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூறுவதுபோல் எல்லாம் நம் மனம் செய்யும் மாயை .அந்த பேயை அடக்கி வைக்கவேண்டும். அல்லது சேயைப் போல் நல்ல அறிவு புகட்டி வளர்க்கவேண்டும். எல்லா விலங்குகளும் நீக்கல் பட்டியலில் இல்லை. கழுதையை பார்த்தல் நல்ல சகுனமென்று அதன் படத்தை பலர் கடையில் மாட்டி வைக்கிறார்கள். பல விலங்குகள் இறைவனின் வாகனங்களாகவும் வழிபடும் கடவுளாகவும் மாறிவிட்டன. செயல் பற்றிய தெளிவான அறிவு இருப்பவனுக்கு எந்த சகுனமும் தேவையில்லை. அரைகுறைகள்தான் சகுனங்களை கட்டிக்கொண்டு அழுகின்றன. மற்றவர்களையும் குழப்புகின்றன

      நீக்கு
  2. சிலர் இப்படி நம்பிக்கையை வைத்து இருக்கிறார்கள். எனக்கு அப்படி இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆத்திகன் நாத்திகன் ஆகிறான்.
      நாத்திகன் ஆத்திகனாகிறான்.
      நம்பிக்கை பொய்த்தால்
      அவநம்பிக்கை .அவ்வளவுதான்.
      மனிதனின் மனம் மாறிக்கொண்டே இருக்கும்

      நீக்கு