திங்கள், 7 ஜனவரி, 2019

ஊசல் அல்லது பெண்டுலம் என்னும் மாயாஜாலம்


ஊசல் அல்லது பெண்டுலம் என்னும் மாயாஜாலம் 

ஊசல் அல்லது ஊஞ்சல் அல்லது பெண்டுலம். பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.

காலம் காட்டும் கருவியில் முன்னாளில் சுவர் கடிகாரங்களில் பெண்டுலத்தை பார்த்திருப்போம். டக்  டக்  என்று ஒலித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும்.

தற்காலத்தில் எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. அசைவே இல்லாமல் எல்லாம் அசைக்கப்படுகின்றன. ஓசையே இல்லாமல் ஒலிக்கின்றன.

ஊசல் என்பது இதுவா அதுவா என்று முடிவுக்கு வரும் வரை நம் மனம் ஆடிக்கொண்டிருக்கும் நிலை.

ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவது ஒரு இன்பமான நிலை.

அந்த ஊசல் பற்றிய ஒரு புது தகவல் உங்களுக்கு. கண்டு இன்புறுங்கள்.



6 கருத்துகள்:

  1. ஆஹா பெண்டுலம் வரைந்த ஓவியம் அழகு. காணொளி கண்டு ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை படைக்கும் எல்லாமே அழகு.ஆனால் மனிதன்தான் அதை சிதைத்து சின்னா பின்ன மாக்குகின்றான்

      நீக்கு
  2. Amazing !! பெண்டுலம் வரைந்த ஜியோமெட்ரிக் ஓவியபடம் கொள்ளை அழகு .பகிர்வுக்கு நன்றி சார் .

    பதிலளிநீக்கு
  3. // காலம் காட்டும் கருவியில் முன்னாளில் சுவர் கடிகாரங்களில் பெண்டுலத்தை பார்த்திருப்போம்.//
    சென்னை ஹிக்கின்போதம்ஸ் புத்தகக்கடையில் மேல் மாடிக்கு போகும் வழியில் ஒரு பெரிய நிற்கும் கடிகாரம் இருந்தது ..இப்போ இருக்கா தெரில .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி .ஏன்ஜெல்

      இதயத் துடிப்பிடையே உயிர் ஊசலாடுகிறது. நம் வாழ்க்கை சக்கரம் ஓடுகிறது.

      காலம் காட்டும் கருவியில் பெண்டுலம் ஊசலாடுகிறது. நேரம் காட்டி நம்மை இயங்க வைக்கிறது.


      என்னுடைய தாத்தா காலத்தில் ஒரு சுவர் கடிகாரம் இருந்தது. அது ஜெர்மன் படைப்பு. அதன் விலை ஏழரை ரூபாய்தான். 60 ஆண்டுகளுக்கு மேல் ஒரு . பிரச்சினை இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. அதன் ஸ்ப்ரிங் உடைந்தபின் பலமுறை மாற்ற வேண்டியிருந்தது. சாவி கொடுக்கும்போது உடைந்து கை விரலில் பட்டு காயம் ஏற்பட்டு வலியால் துன்பப்பட்டேன். கடிகாரத்தை மூட்டை கட்டி விட்டேன்.அது மணி அடிக்கும் ஓசை இனிமையாக இருக்கும்.


      ஆனால் மனம் எண்ணங்களிடையே அதுபோல் ஊசலாடுகிறது. முடிவெடுக்கமுடியாமல் திணறுகிறோம். ஆனால் அதன் போக்கில் விட்டுவிட்டால் அது அழகிய முடிவை தரும் என்பதையே இந்த பெண்டுலம் ஓவியம் காட்டுகிறது.



      இன்னும் ஏராளமான பெண்டுலம் ஓவியங்கள் இணையத்தில் கண்டேன்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் .வியப்பாக இருக்கிறது. நம்மால் அதுபோல் வரைய இயலாது.


      நம் அன்பர்களுக்காக ஒன்றை மட்டும் பதிவிட்டேன்.

      நீக்கு