வியாழன், 10 ஜனவரி, 2019

எல்லாம் முருகனே !


Thursday, January 10, 2019

எல்லாம் முருகனே !


எல்லாம் முருகனே !


ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன். 

எல்லாம் முருகனே
எனக்கு எல்லாம் முருகனே (எல்லாம்)

தொல்லை மிகு இவ்வுலகில்
கவலை மாற்றி எல்லையில்லா
இன்பம் தருவது அவன் திருநாமமே (எல்லாம்)


அரோஹரா என்றாலும்
ஆறுமுகம் என்றாலும் அன்போடு
அழைக்கும் அடியவனுக்கு அழியா
பதம் அருள்வான் (எல்லாம்)


கந்தா என்றாலும்
கார்த்திகேயன் என்றாலும்
முத்துக்குமரா  என்றாலும்
உள்ளம் புகுந்து கள்ளம் அகற்றி
அமைதியும் ஆனந்த வாழ்வும்
அருள்வான். (எல்லாம்)

மயிலும் சேவலும் பாம்பும் அவன் திருவடியில்
பகை மறந்து பயமின்றி இருப்பதுபோல்
வணங்குவோர் வாழ்விலும் பகையில்லா
நட்பும் சுற்றமும் அருளிடுவான்


குன்றின் மீது நின்றருளும் தெய்வம் அவன்
நினைப்பவர் இதய கோயிலில் நிலைத்து நின்று
வழி நடத்தும் துணைவன் அவன்  (எல்லாம்)

6 கருத்துகள்:

  1. முருகன் ஓவியம் கண்ணையம் இதயத்தையும் கொள்ளையடிக்குது ..அத்தனை அழகு ..மயில் சேவல் பாம்பு எல்லாம் மிக அற்புதமான டீட்டெயில்ஸ் . பல ஓவியர்களுக்கு கைவிரல்கள் வரைவது எட்டாக்கனி மறைச்சாப்போல வரைவாங்க இந்த ஓவியத்தில் விரல்களின் நெளிவு சுழிவு ரேகை பாதவிரல்கள் முருகனின் கண்கள் அந்த குறுஞ்சிரிப்பு எல்லாம் எத்த்னை தடவையும் பார்க்கலாம் ..FANTABULOUS !! ஸார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏன்ஜெல். எல்லாம் இறைவன் செயல். நான் முறையாக ஓவிய பயிற்சி பெற்றவன் அல்ல. இருந்தாலும் ஒரு ஈடுபாடு. எதை செய்தாலும் அதில் ஒரு முழுமையைக் கொண்டு வர வேண்டும் என்பது என் விருப்பம்.ஓவியத்தினை வரைவது வேறு. அதை அணு அணுவாக ரசிப்பது வேறு. பொதுவாக பலரும் ஒரே வார்த்தையில்கருத்து கூறிவிடுவார்கள். அருமை அல்லது மோசம் என்று.
      உங்கள் ரசனை எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்னும்பல அழகிய படைப்புகளை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது. ஆனால் 3 ஆண்டுகளாக முயன்றும் பல காரணங்களால் ஒன்றும் முடியவில்லை.ஒரே ஒரு யானையைத் தவிர

      இந்த முருகன் சாதாரண முருகன் அல்ல. இந்த படத்தினை வரைய தொடங்கியதும் 2014 ஆம் ஆண்டுடிசம்பர் 31ஆம் நாள் காலை எனக்கு வீட்டிலேயே விபத்து ஏற்பட்டு இடது கால் நரம்பு(கணுக்கால் பின்புறம்)துண்டிக்கப்பட்டது. படம் அப்படியே நின்று போய்விட்டது.3 மாதம் நடக்க முடியாமல் படுக்கையில் கிடந்தேன். சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதும் இந்த படத்தை தொடர்ந்து வரைந்து முடித்தேன்.ஒவ்வொரு பகுதியாக ப்ரஷ் கொண்டு வண்ணம் தீட்டினேன். இனி என்னால் நடக்க முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தபோது எனக்கு உள்ளத்திலே, உடலிலே உரம் கொடுத்து என்னை நடக்க செய்தவன் இந்த முருகன்.இறைவன் ஒளி மயமானவன். அவன் மனிதர்கள் விரும்பும் வகையில் வடிவம் எடுத்து அருள் செய்கின்றான்.
      படத்தில் பாம்பும் சேவலும் சிறிது பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும்போது நாமும் அனைவரிடமும் இதுபோல் சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றும்.நம் மனம் எப்போதும் இறைவனிடம் நிலைத்து நின்றுவிட்டால். இது போன்ற நிலையை நாமும் அடையலா

      நீக்கு
    2. //எனக்கு உள்ளத்திலே, உடலிலே உரம் கொடுத்து என்னை நடக்க செய்தவன் இந்த முருகன்//

      God is great sir . அதேதான் நான் ஆச்சர்யப்பட்டது . அந்த பாம்பும் சேவலும் எத்தனை அழகா அளவளாவுகிறார்கள் ..ஒவ்வொரு சிறு விஷயத்தையும் நுணுக்கமா அழகா வரைஞ்சிருக்கீங்க .நேரம் கிடைக்கும்போதெல்லாம் வரைங்க ஸார் .

      நீக்கு
    3. ஏற்க்கெனவே ஏராளமான படங்களை வரைந்து தள்ளிவிட்டேன். இன்னும் வரைவதற்கு ஆசை இருக்கிறது.உடல் சோர்ந்துவிட்டதால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.இருந்தாலும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். திருப்பதி வெங்கடேச பெருமானை. வரைந்து 1000 பேர்களுக்கு கொடுத்திருக்கிறேன். என் வீட்டிற்கு வருபவர்களுக்கு நான் அந்த படத்தை கொடுப்பேன். எல்லாம் இந்த வலைப்பதிவில் "நானும் ஒரு ஓவியன் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன். பால் பாயிண்ட் ,பென்சில், நீர் வண்ண ஓவியம், டின் தகடுகளில் உருவங்கள், சாக்கு என பல ஓவிய வகைகளை முயற்சி செய்துள்ளேன். என்னுடைய டிஜிட்டல் கேமராவில் பல ஆயிரம் போட்டோக்கள் எடுத்து தள்ளியுள்ளேன். நானே சில பாடல்களை இயற்றி பாடி யு டியூபில் வெளியிட்டுள்ளேன். மவுத்தார்கண் இசையில் 343 பாடல்களை ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், என பல மொழி பாடல்களை இசைத்து வெளிட்டுவிட்டேன். 2 வருடம் தொடர்ந்து தினமலர் பத்திரிகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளேன். அதை நிறுத்திவிட்டு வலைப்பதிவுகள் தொடங்கி ஆயிரக்கணக்கான பதிவுகளை வெளியிட்டுள்ளேன்.
      நான் நினைத்ததை எல்லாம் செய்துவிட்டேன். இனி ஏதாவது நினைத்தால் அதையும் செய்துவிடுவேன். சுய தம்பட்டத்திற்கு மன்னிக்கவும்.எல்லாவற்றையும் நேரம் கிடைக்கும் போது ரசித்து மகிழுங்கள்.

      நீக்கு