நன்றிக் கடனாய் நாம் என்ன செய்தோம் ?
மாரியின் அருளால் மழை பொழிந்தது
கழனியெல்லாம் நெல் விளைந்தது
மக்களின் வயிறெல்லாம்
உணவால் நிறைந்தது
நன்றிக் கடனாய் நாம் என்ன செய்தோம்?
மழையை ஈர்க்கும் மரங்களை
வேரோடு சாய்க்கிறோம்
ஆறுகளில் நீரை தேக்கும் வண்டலை
எல்லாம் வாரி வாரி விற்றுக் காசாக்குகிறோம்.
நம்மை வாழ வைக்கும் விவசாயிகளை
கடனாளிகளாக்கினோம்
கடன் பட்டார் நெஞ்சம் போல
கலங்கினான் இலங்கைவேந்தன்
என்ற கவிஞரின் வரிகளுக்கேற்ப
இயற்க்கை பொய்த்த நேரத்தில்
நிலம் பொய்த்ததால் கடன் பாக்கி
என்னும் இரக்கமற்ற
பூதம் அவர்களை விழுங்கியதை
கண்டும் காணாது
இருக்கின்றன அவர்கள் உதவிக்கு வராது
கிடக்குது இதயமற்ற ஆளும் அரசுகள்.
நானும் உங்களோடு இருக்கிறேன். என்று போலி
கருணை காட்டும் வாய்ச்சொல்லில் வீரர்களான
எதிலும் ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகள்
l
எத்தர்களின் கபட நாடகத்தை எவ்வளவு
காலம்தான் இயற்கை தாங்கும். ?
மனம் பொங்கி ஓரிடத்தில்கன மழையாய் பொழிந்து
காட்டாற்று வெள்ளமாய் வந்து காணாமல் போய்விடுகிறாள்.
ஓரிடத்தில் மழையையே காணாமல் செய்துவிடுகிறாள்.
புயலாய் வந்து அனைத்தையும் ஒடித்து சாய்க்கிறாள்.
ஏரிகள் ஏராளமாய் இருந்தும் மழை நீர் தங்க இடமில்லை
தடுத்து தேக்கி வைக்க கண்மாய்கள் இல்லை.
எல்லாம் கட்டிடமாகவும் சாலைகளாகவும் மாற்றிவிட்ட
மனிதர்களுக்கு மாரி தரும் பரிசு.
இலவசமாய் கிடைக்கும் தண்ணீரை விலை கொடுத்து
வாங்கும் நிலைமைக்கு தள்ளிவிட்டாள்.
மாரியன்னை.
இன்னும் திருந்தவில்லை இந்த மதி கெட்ட
மானிட இனம்.
வாழ்த்துக்கள் கூறிக்கொள்வோம். வாழ்க வாழ்க என்று.
ஆனால் அதற்கான தகுதி நமக்கில்லை .
நிலங்களிடையே தம் வாழ்நாள் முழுவதும் கிடந்து
விதைத்தது முதல் அது கதிரவன் அருளால்
கதிராகும்வரை கண்போல் காத்து
நாமெல்லாம் உயிர் வாழ
வழி செய்யும் விவசாயியே
அந்தவடபத்ர சாயியின் அவதாரம்.
உண்மையில் அவன்தான் .
போற்றப்படவேண்டியவன்.
வருடம் முழுவதும் பிறருக்காக உழைக்கும் அவன்
மனம் வாட நேர்ந்தால். இந்த வையகம் தாங்காது.
வாழ வைக்கும் அந்த விவசாயிகள் வாழ்வில்
மகிழ்ச்சி என்று பொங்குகிறதோ
அப்போதுதான் அது உண்மையான பொங்கல்
வாழ்த்தாக இருக்க முடியும்.
முற்றிலும் உண்மை.
பதிலளிநீக்குஉண்மையின் பக்கம் நீங்களும் நானுமே. யாரும் வரமாட்டார்கள். ஏனென்றால் அது இனிக்காது.
நீக்கு