செவ்வாய், 8 ஜனவரி, 2019

இசையும் நானும் (344)-திரைப்படம்- லட்சுமி கல்யாணம்(1968)


இசையும் நானும் (344)-திரைப்படம்- 

 லட்சுமி கல்யாணம்(1968)

 பாடல்-ராமன் எத்தனை ராமனடி


இசை -எம்.எஸ்.விஸ்வநாதன்

குரல்: பி.சுசீலா

வரிகள்:  கண்ணதாசன் 


MOUTHORGAN VEDIO-344


இசையும் நானும் தொடரில்   2019 ஆம் ஆண்டின்  முதல்.பாடல், 



ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி
தேவன் ராமன் எத்தனை ராமனடி 

கல்யாண கோலம் கொண்ட கல்யாணராமன்
காதலித்த தெய்வம் அந்த  சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன் (ராமன்)

தாயே என் தெய்வம் என்ற கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்

வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீ ஜெயராமன் (ராமன்)

வம்சத்துக்கொருவன் ரகுராமன்
மனங்களை இணைப்பவன் ஸ்ரீராமன்
மூர்த்திக்கொருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன்  அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்


ராம்  ராம் ராம் ராம்.. ராம் ராம்




4 கருத்துகள்:

  1. நல்ல பாடல். எனக்கும் பிடித்த பாடல்.

    கேட்டு ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 51 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பாடல். ஒரு வாரம் முயற்சி செய்து இந்த பாடலை அரங்கேற்றினேன். இந்த ஆண்டின் முதல் பாடல். முதன் முதலாக வருகை தந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி

      நீக்கு
  2. கேட்டேன் ரசித்தேன். பி சுசீலாவின் இனிமையான பாடல்களில் ஒன்று. இதே படத்தில் வரும்' யாரடா மனிதன் இங்கே' பாடல் மிக பிடிக்கும்.​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. யாரடா மனிதன் என்ற பாடல் கருத்துள்ள பாடல்

      நீக்கு