யானைகளால் என்ன பயன்?
யானைகளால் பயன்?
அவைகள் உலகை வாழ வைக்க வந்த
ஒரு அபூர்வ இனம்.
யானைகள் இல்லையேல்
காடுகள் இல்லை.
காடுகள் இல்லையேல்
மழை இல்லை
நமக்கு உயிர் வாழ நீர் இல்லை.
இந்த அடிப்படை உண்மையை உணராமையால்தான்
மனிதர்கள் முன்னாளில் யானைகளை துன்புறுத்தி பழக்கி
போரில் ஈடுபடுத்தி அழித்தும்
அதன் தந்தங்களுக்காக அவைகளை லட்சக்கணக்கில் கொன்றும்
கோயில்களில் காட்சி பொருளாக வைத்து கொடுமைப்படுத்தியும்
அவைகளின் வாழ்வாதாரத்தை அழித்தும் இன்று சொல்லொணா
துன்பத்தில் தவிக்கின்றனர்.
அவைகளின் வாழ்விடத்தில் மனிதர்கள் ஆக்கிரமித்து விட்டதால்
அவைகள் மனிதர்களின் குடியிருப்புகளை நாடி வரவேண்டிய
சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன.
உண்மையில் இயற்கையில் உள்ள அனைத்துஉயிரினங்களும்
பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் வனத்தில் மனிதர்கள் அவைகளை
இயல்பாக சுதந்திரமாக வாழவிட வேண்டும்.
கோடை காலங்களில் ஆறுகளில், குட்டைகளில் நீர் வறண்டுபோகும்
நிலையில் யானைகள் தங்கள் தந்தங்களை
பயன்படுத்தி பள்ளங்களை உருவாக்கி அதில் வரும் நீரை
பயன்படுத்திக்கொள்ளும்.
அது வனத்தில் உள்ள மற்ற பிராணிகளுக்கும்
உதவியாக அமையும்.
யானைகள் உண்ணும் தாவரங்கள் முழுவதும்
ஜீரணமாகாமல் உள்ள விதைகள்
அவைகளின் சாணத்துடன் மண்ணில் விழுந்து
அது செல்லும் இடங்களில்
எல்லாம் முளைத்து செழிப்பாக வளரும்.
அதனால் காடுகள் அழியாமல் பாதுகாக்கப்படும்
மனித குலம் நன்றாக இருக்கவேண்டுமானால்
வெறும் யானை முகம் கொண்ட பிள்ளையாரை
மட்டும் வணங்கினால் போதாது.
12-ராசி கணபதி- ஓவியம் -தி.ரா. பட்டாபிராமன்
யானைகளையும்
.
நன்று சொன்னீர் ஐயா
பதிலளிநீக்குநாம் காட்டை அழித்து நாடாக்கிவிட்டு, யானைகள் ஊருக்குள் ஊடுருவல் என முழக்கமிடுவோம்
எல்லாவற்றிற்கும் சங்கை ஊதிவிட்டு பிறகு சங்கே முழங்கு என்று ஓலமிடுவோம்
நீக்குஓவியம் வெகு அழகு.
பதிலளிநீக்குசிறந்த முறையில் சொல்லி இருப்பதை ரசித்தேன். மனிதன் தன் பேராசையால் பலவற்றை அழிப்பது வருத்தமான விஷயம்.
நன்றி தங்கள்வருகைக்கு.
நீக்குமனிதன் தன் சுயநலத்திற்காக வனங்களில் சுதந்திரமாக வாழும் யானைகளையும்மற்ற உயிரினங்களையும் சிறைபிடித்து கொடுமைப்படுத்தும் செயல் எனக்கு உடன்பாடில்லை. அது கிடக்கட்டும் .தந்தன் இனத்தையே அடிமைகளாக்கி, போக பொருட்களாக்கி கொடுமைப்படுத்தும் இழி செயலை காலம் காலமாக செய்து வருகின்றான். அவ்வப்போது இயற்கை அவன் செயல்களுக்கு முடிவு கட்டுகிறது இருந்தும் அவன் திருந்தாமலும் தன் இழி செயலுக்கு வருந்தாத மிருகமாக கர்வத்துடன் வலம் வந்து கொண்டிருக்கின்றான்.