வியாழன், 10 ஜனவரி, 2019

எல்லாம் முருகனே !


Thursday, January 10, 2019

எல்லாம் முருகனே !


எல்லாம் முருகனே !


ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன். 

எல்லாம் முருகனே
எனக்கு எல்லாம் முருகனே (எல்லாம்)

தொல்லை மிகு இவ்வுலகில்
கவலை மாற்றி எல்லையில்லா
இன்பம் தருவது அவன் திருநாமமே (எல்லாம்)


அரோஹரா என்றாலும்
ஆறுமுகம் என்றாலும் அன்போடு
அழைக்கும் அடியவனுக்கு அழியா
பதம் அருள்வான் (எல்லாம்)


கந்தா என்றாலும்
கார்த்திகேயன் என்றாலும்
முத்துக்குமரா  என்றாலும்
உள்ளம் புகுந்து கள்ளம் அகற்றி
அமைதியும் ஆனந்த வாழ்வும்
அருள்வான். (எல்லாம்)

மயிலும் சேவலும் பாம்பும் அவன் திருவடியில்
பகை மறந்து பயமின்றி இருப்பதுபோல்
வணங்குவோர் வாழ்விலும் பகையில்லா
நட்பும் சுற்றமும் அருளிடுவான்


குன்றின் மீது நின்றருளும் தெய்வம் அவன்
நினைப்பவர் இதய கோயிலில் நிலைத்து நின்று
வழி நடத்தும் துணைவன் அவன்  (எல்லாம்)

புதன், 9 ஜனவரி, 2019

இசையும் நானும் (345)-திரைப்படம்- ராமு(1966) பாடல்-பச்சை மரம் ஒன்று.

இசையும் நானும் (345)-திரைப்படம்- 

ராமு(1966)

 பாடல்-பச்சை மரம் ஒன்று.


இசை -எம்.எஸ்.விஸ்வநாதன்

குரல்: பி.சுசீலா

வரிகள்:  கண்ணதாசன் 


MOUTHORGAN VEDIO-345



பச்சை மரம் ஒன்று.
இச்சை கிளி ரெண்டு 
பாட்டு சொல்லி தூங்க வைப்பேன் ஆரீரோ..(2)

அள்ளித் தந்த அன்னை 
சொல்லித் தந்த தந்தை 
உள்ளம் கொண்ட பிள்ளை நானல்லவோ 

கட்டித் தங்கம் என்று 
கன்னம் தொட்டுக் கொண்டு 
ஆசை முத்தம் தந்தேன் ஆரிரரோ..(2)(பச்சை)

பெட்டைக் கிளி கொஞ்சும் 
பிள்ளைக் கிளி பாடும் 
தந்தைக் கிளி அங்கே தேடி வரும் (2)

இன்பம் என்ற போதும் 
துன்பம் வந்த போதும் 
என்றும் எங்கள் சொந்தம் மாறாது.(2)(பச்சை)

பாட்டு சொல்லி தூங்க வைப்பேன் ஆரீரோ..(2)







காணாமல் போய்விட்ட நாதஸ்வரம்

காணாமல் போய்விட்ட நாதஸ்வரம்

સંબંધિત છબી


தமிழ்நாட்டின் பாரம்பரியமான நாதஸ்வரம்
இன்றுகாணாமல் போய்விட்டது.

எங்கு பார்த்தாலும் குத்து திரைப்பட பாடல்கள்தான் காதைக்
கிழிக்கிறது

முன்னொரு காலத்தில் திருவாடுதுறை.ராஜரத்தினம், வேதாரண்யம் வேதமூர்த்தி ,என்.பி.என்.பொன்னுசாமி, காருகுறிச்சி .அருணாச்சலம் ,நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் ,பொன்னுத்தாயி போன்ற பல மேதைகள் நாதஸ்வர  உலகில் கோலோச்சிய கோலோச்சிய காலம் மலையேறி போய்விட்டது.

கோயில் திருவிழாக்களிலும் திருமண மேடைகளில் தாலி  கட்டும்போது கெட்டி மேளம் அடிப்பதற்கும் நாதஸ்வரம்  பயன்படும். நிலைக்கு மட்டும் வந்துவிட்டது.

ஆனால் ஸ்ரீலங்காவில் மக்கள் மிகவும் விரும்பி ரசிக்கும்இசைக் கருவிகளில் ஒன்றாக நாதஸ்வரம் இருந்து வருகிறது.

சமீபத்தில் ஒரு காணொளியைக் கண்டேன். திரைப்பட பாடல்களை எவ்வளவு அருமையாக இசைக்கிறார்கள்! நீங்களும் அதை கேட்டு இன்புறுங்கள்.

images courtesy-google images

செவ்வாய், 8 ஜனவரி, 2019

யானைகளால் என்ன பயன்?

யானைகளால் என்ன பயன்?

யானைகளால்  பயன்?

அவைகள் உலகை வாழ வைக்க வந்த 
ஒரு அபூர்வ இனம். 
யானைகள் இல்லையேல் 
காடுகள் இல்லை. 
காடுகள் இல்லையேல்
மழை இல்லை 
நமக்கு உயிர் வாழ நீர் இல்லை. 

இந்த அடிப்படை உண்மையை உணராமையால்தான் 
மனிதர்கள் முன்னாளில்  யானைகளை துன்புறுத்தி பழக்கி 
போரில் ஈடுபடுத்தி அழித்தும்
அதன் தந்தங்களுக்காக அவைகளை லட்சக்கணக்கில் கொன்றும் 
கோயில்களில் காட்சி பொருளாக வைத்து கொடுமைப்படுத்தியும் 
அவைகளின் வாழ்வாதாரத்தை அழித்தும் இன்று சொல்லொணா 
துன்பத்தில் தவிக்கின்றனர். 

அவைகளின் வாழ்விடத்தில் மனிதர்கள் ஆக்கிரமித்து விட்டதால் 
அவைகள் மனிதர்களின் குடியிருப்புகளை நாடி வரவேண்டிய 
சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. 

உண்மையில் இயற்கையில் உள்ள அனைத்துஉயிரினங்களும்
பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் வனத்தில் மனிதர்கள் அவைகளை 
இயல்பாக சுதந்திரமாக வாழவிட வேண்டும். 

கோடை காலங்களில் ஆறுகளில், குட்டைகளில் நீர் வறண்டுபோகும் 
நிலையில்  யானைகள் தங்கள் தந்தங்களை 
பயன்படுத்தி பள்ளங்களை உருவாக்கி அதில் வரும் நீரை 
பயன்படுத்திக்கொள்ளும்.
அது வனத்தில் உள்ள மற்ற பிராணிகளுக்கும்
உதவியாக அமையும். 

யானைகள் உண்ணும் தாவரங்கள் முழுவதும் 
ஜீரணமாகாமல் உள்ள விதைகள் 
அவைகளின் சாணத்துடன் மண்ணில் விழுந்து
அது செல்லும் இடங்களில் 
எல்லாம் முளைத்து செழிப்பாக வளரும். 
அதனால் காடுகள் அழியாமல் பாதுகாக்கப்படும்

மனித குலம்  நன்றாக இருக்கவேண்டுமானால் 
வெறும் யானை முகம் கொண்ட பிள்ளையாரை 
மட்டும் வணங்கினால் போதாது.


12-ராசி கணபதி- ஓவியம் -தி.ரா. பட்டாபிராமன் 

யானைகளையும் 

வாழவிடவேண்டும் .

.

இசையும் நானும் (344)-திரைப்படம்- லட்சுமி கல்யாணம்(1968)


இசையும் நானும் (344)-திரைப்படம்- 

 லட்சுமி கல்யாணம்(1968)

 பாடல்-ராமன் எத்தனை ராமனடி


இசை -எம்.எஸ்.விஸ்வநாதன்

குரல்: பி.சுசீலா

வரிகள்:  கண்ணதாசன் 


MOUTHORGAN VEDIO-344


இசையும் நானும் தொடரில்   2019 ஆம் ஆண்டின்  முதல்.பாடல், 



ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி
தேவன் ராமன் எத்தனை ராமனடி 

கல்யாண கோலம் கொண்ட கல்யாணராமன்
காதலித்த தெய்வம் அந்த  சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன் (ராமன்)

தாயே என் தெய்வம் என்ற கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்

வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீ ஜெயராமன் (ராமன்)

வம்சத்துக்கொருவன் ரகுராமன்
மனங்களை இணைப்பவன் ஸ்ரீராமன்
மூர்த்திக்கொருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன்  அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்


ராம்  ராம் ராம் ராம்.. ராம் ராம்




பங்களா தேஷில் வன விலங்கு பூங்கா

பங்களா தேஷில் வன விலங்கு பூங்கா 

சிலநாட்களுக்கு  முன்பு பங்களா  தேஷில் வன விலங்கு பூங்காவில்
ஒரு சுற்று சுற்றி வந்தேன் .இயற்கை சூழலில் பிராணிகளை காண்பதற்கு  மிக நன்றாக   இருந்தது. எல்லாவற்றையும் மறந்து நீங்களும் சென்று கண்டு மகிழுங்கள்.  அந்த காணொளி உங்களுக்காக.

திங்கள், 7 ஜனவரி, 2019

ஊசல் அல்லது பெண்டுலம் என்னும் மாயாஜாலம்


ஊசல் அல்லது பெண்டுலம் என்னும் மாயாஜாலம் 

ஊசல் அல்லது ஊஞ்சல் அல்லது பெண்டுலம். பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.

காலம் காட்டும் கருவியில் முன்னாளில் சுவர் கடிகாரங்களில் பெண்டுலத்தை பார்த்திருப்போம். டக்  டக்  என்று ஒலித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும்.

தற்காலத்தில் எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. அசைவே இல்லாமல் எல்லாம் அசைக்கப்படுகின்றன. ஓசையே இல்லாமல் ஒலிக்கின்றன.

ஊசல் என்பது இதுவா அதுவா என்று முடிவுக்கு வரும் வரை நம் மனம் ஆடிக்கொண்டிருக்கும் நிலை.

ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவது ஒரு இன்பமான நிலை.

அந்த ஊசல் பற்றிய ஒரு புது தகவல் உங்களுக்கு. கண்டு இன்புறுங்கள்.