ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

இசையும் நானும் (351)-திரைப்படம்-நான் ஆணையிட்டால் (1966) பாடல்-பாட்டு வரும்

இசையும் நானும் (351)-திரைப்படம்-நான் ஆணையிட்டால் (1966) பாடல்-பாட்டு வரும்


MOUTHORGAN VEDIO-351


திரைப்படம்  : நான் ஆணையிட்டால்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் 
பாடியவர்கள்:டி.எம். சவுந்தர்ராஜன் /பி.சுசீலா. 
பாடல் வரிகள்" வாலி 

பாட்டு வரும்
என்ன ...
பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக்எம். சௌந்தர்ராஜன்./பி.சுசீலா ண்டிருந்தால் பாட்டு வரும்


ம்ம்ஹூம் ...
உன்னைப் பார்த்துக்
கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
Music ...


உன்னைப் பார்த்துக்
கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால்
ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்
பாட்டு வரும்.
ஆஹா ...


பாட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால்
ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்

இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்


எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும்
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும்


பாட்டு வரும் பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக்
கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால்
ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்
அதைக் கேட்டுக்​கொண்டிருந்தால்
ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்

காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
காதல் என்றொரு சிலை வடித்தேன்


அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறையெடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் பாதியும் நானே
சிறையெடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் பாதியும் நானே


பாட்டு வரும் பாட்டு வரும்
அதைக் கேட்டுக்​கொண்டிருந்தால்
ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்


மனமெனும் ஓடையில் நீந்தி வந்தேன்
அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்
மனமெனும் ஓடையில் நீந்தி வந்தேன்


அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்.
ஏந்திய கைகளில் இருப்பவள் நானே
இறைவனை நேரில் வரவழைத்தேனே .
ஏந்திய கைகளில் இருப்பவள் நானே
இறைவனை நேரில் வரவழைத்தேனே


பாட்டு வரும்... பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக்
கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டுக்​கொண்டிருந்தால்
ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்
அதைக் கேட்டுக்​கொண்டிருந்தால்
ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ




வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

இசையும் நானும் (350)-திரைப்படம்- நம் நாடு (1969) பாடல்- நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே


இசையும் நானும் (350)-திரைப்படம்- நம் நாடு    (1969) பாடல்- நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே

MOUTHORGAN VEDIO-350

பாடகிகள் :ஷோபா, எல்.ஆர். அஞ்சலி
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடல் வரிகள்-வாலி 
ஆண் : நல்ல பேரைவாங்க வேண்டும்
பிள்ளைகளே நம்நாடு என்னும்
தோட்டத்திலே நாளைமலரும் முல்லைகளே(நல்ல பேரை)

ஆண் : { பாலூட்டும்அன்னை அவள்நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தைநல் வழி காட்டும்தலைவன் } (2)
ஆண் : துணையாகக்கொண்டு நீ நடை போடுஇன்று (2)

ஆண் : உருவாகும்நல்ல எதிர்காலம்ஒன்று (உருவாகும்)
 (நல்ல பேரை)
ஆண் : கிளி போலப்பேசு இளங்குயில்போலப் பாடு 
மலர்போலச் சிரித்து நீ குறள் போல வாழு
குழு : லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா
ஆண் : மனதோடுகோபம் நீ வளர்த்தாலும்பாவம் 
மெய்யான அன்பேதெய்வீகமாகும்(2)

ஆண் : நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே
ஆண் : விழி போலஎண்ணி நம் மொழிகாக்க வேண்டும் (விழி)

ஆண் : தவறான பேர்க்குநேர் வழி காட்ட வேண்டும்(தவறான)

ஆண் : ஜன நாயகத்தில்நாம் எல்லோரும் மன்னர்(ஜன)

ஆண் : தென்னாட்டுகாந்தி அந்நாளில்சொன்னார்(தென்னாட்டு)
(நல்ல பேரை)

ஆண் & குழு : லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா

செவ்வாய், 29 ஜனவரி, 2019

இசையும் நானும் (349)-திரைப்படம்- ஆனந்த ஜோதி (1963) பாடல்- ஒரு தாய் மக்கள் நாமென்போம்

இசையும் நானும் (349)-திரைப்படம்- ஆனந்த ஜோதி   (1963) பாடல்- ஒரு தாய் மக்கள் நாமென்போம்-ஒன்றே எங்கள் குலமென்போம்


MOUTHORGAN VEDIO-349

இசை -விஸ்வநாதன் ராமமூர்த்தி

படம்: ஆனந்த ஜோதி 

பாடியவர்: டி .எம்.சவுந்தர்ராஜன் 

பாடல் வரிகள்-கண்ணதாசன் 





ஆ: ஒரு தாய் மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள் குலமென்போம்
தலைவன் ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாமென்போம்..
வாழ்க…வாழ்க…வாழ்க…

ஆ: பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம் (ஒரு தாய்)


ஆ: உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவில் நண்பர்கள் பலர் கொண்டோம்
மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம் (ஒரு தாய்)


ஆ: தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம் (ஒரு தாய்)





திங்கள், 28 ஜனவரி, 2019

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.




சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு 
நான் வரைந்த பென்சில் ஓவியம்.

நண்பர்களின் பார்வைக்கு. 

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.




இன்றய ஓவியம் 
ஆப்பிரிக்கா யானைக்குட்டி. 

ஆனை ஆனை 
அழகர் ஆனை 
அழகிய மணவாளன் ஏறும் ஆனை 
குட்டி ஆனைக்கு 
கொம்பு முளைச்சுத்தான் 
பட்டணமெலாம் பறந்தோடி போச்சாம். 

இந்த பாடலை 61  ஆண்டுகளுக்கு முன்பு  என் பாட்டி குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டு பாடியது  இந்த யானை ஓவியத்தை வரைந்ததும் நினைவுக்கு வந்தது



பென்சில் ஓவியம்-தி,ரா,பட்டாபிராமன் 

இசையும் நானும் (348)-திரைப்படம்- ஆயிரத்தில் ஒருவன் (1965) பாடல்-உன்னை நான் சந்தித்தேன்



இசையும் நானும் (348)-திரைப்படம்- ஆயிரத்தில் ஒருவன்  (1965) பாடல்-உன்னை நான் சந்தித்தேன்



MOUTHORGAN VEDIO-348

இசை -விஸ்வநாதன் ராமமூர்த்தி

படம்: ஆயிரத்தில் ஒருவன்

பாடியவர்: பி.சுசீலா 

பாடல் வரிகள்-வாலி 




பெண் : { உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன் } (2)
பெண் : என்னை
நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில்
இறைவன் ஆலயத்தில்
இறைவன்
பெண் : உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
ஆண் : ……………………
பெண் : { பொன்னைதான்
உடல் என்பேன் சிறு
பிள்ளை போல் மனம்
என்பேன் }(2)
பெண் : கண்களால்
உன்னை அளந்தேன்
தொட்ட கைகளால்
நான் மலர்ந்தேன்
பெண் : உள்ளத்தால்
வள்ளல் தான்
ஏழைகளின் தலைவன்
பெண் : உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
ஆண் : ……………………
பெண் : { எண்ணத்தால்
உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடிபோல்
நெஞ்சில் படர்ந்தேன் } (2)
பெண் : சொல்லத்தான்
அன்று துடித்தேன் வந்த
நாணத்தால் அதை
மறைத்தேன்
பெண் : மன்னவா
உன்னை நான்
மாலையிட்டால்
மகிழ்வேன்
பெண் : உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
பெண் : என்னை
நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில்
இறைவன் ஆலயத்தில்
இறைவன்
பெண் : உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
ஆண் : ……………………

images courtesy-google images 

வெள்ளி, 25 ஜனவரி, 2019

குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தின வாழ்த்துக்கள்




குடியரசு தின  வாழ்த்துக்கள் 

கொண்டாடுவோம் முடியரசை
வீழ்த்தி குடியரசை அமைக்க
அடித்தளம் அமைத்த  அந்த முகம் தெரியா
கோடானுகோடி விடுதலை வீரர்களுக்கும்
அதை செயலில் கொண்டு வர வழி வகுத்த
உத்தம தலைவர்களை நினைவில் கொண்டு
குடியரசு தின  விழாவினை கொண்டாடி
மகிழ்வோம்.

குடி மக்களை தன் மக்கள் போல் கருதி
அரசர்கள் ஆட்சி செய்த நம் திருநாட்டில் குடிக்க
கற்றுக்கொடுத்து ,அவர்களுக்கு அரசு
செலவில் மதுவை விற்று அவர்களை
மதி மயங்க செய்து மூடர்களாக்கி
ஆள்பவர்கள் மன்னர்கள் போல்
வளம் பெற்று பவனி வருவதை
கண்டு மனம் வெதும்பாமல் "குடியரசு தின  விழா"
கொண்டாடுவோம்.

ஆராயாது தவறான நீதி வழங்கியமைக்காக
தன்னையே தண்டித்துக் கொண்ட மதிப்புமிகு
மன்னர்களாண்ட  மண்ணில் நீதிமன்றம்
தண்டித்தாலும் கண்டித்தாலும் கண்டு கொள்ளாது
ஆட்சியில் நீடிக்கும் நம் நாட்டு ஆளும் வர்க்கம்
வாழ்க வாழ்க என்று குடியரசு தினம் கொண்டாடுவோம்.

உழைப்பவர்கள் வாழ்வையும் உழைப்பையும்
சூறையாடி உண்டு கொழுக்கும் அனைத்து  தீய சக்திகளும்
புற்றீசல்போல் பெருகி வளர  உதவி செய்யும்
சிந்தனை திறன் இல்லாத மக்கள் சமூகத்தை
உருவாக்கி அதிர் குளிர் காயும் வாய்ச் சொல் வீரர்கள்
வாழ்க வாழ்க என்று குடியரசு தினம் கொண்டாடுவோம்.

நாட்டை சுற்றிலும் பாதுகாப்பின்மை ஒருபுறமிருக்க
நாட்டின் உள்ளே நம் ஜனநாயகத்தை சீர்குலைக்கும்
பல தீய சக்திகள் சுதந்திரமாய் நடமாடிட
சுயநல சுரண்டல் பெருச்சாளிகள் கர்வத்தோடு செயல்பட
தம்மையே அழிக்கும் புரையோடிய ஊழலையும்
சுற்றுப்புற சூழல் மாசுகளையும் கண்டும்
காணாதும் இருந்துகொண்டு ஒருநாள் கூத்து போல்
குடியரசு தினம் கொண்டாடுவோம்.

பல துறையில் முன்னேற்றம் கண்டோம் -எனினும்
பிறரோடு பழகுவதில் குறையையே காண்கின்றோம்.
இருப்பதை பிறரோடு பகிர்வதில் இணக்கமில்லை
அன்போடு அனைவரோடும் அனுசரித்து வாழ
மனமில்லை.

இங்கு ஒரு பேச்சு .அங்கு ஒரு பேச்சு
இன்று ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சு.
பொய்யுரைப்பதிலோ வாள்போல் வீச்சு
மூச்சு நின்றால்   அனைத்தும் போச்சு.