ஞாயிறு, 14 அக்டோபர், 2018

நானும் ஒரு ஓவியன் தான்


நானும் ஒரு ஓவியன் தான்


இந்த தலைப்பின் கீழ் 16.10 2015 ல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை வரைந்து வெளியிட்டிருந்தேன். அதற்கு  திரு ஸ்ரீராம் மட்டும் கருத்து  தெரிவித்திருந்தார். 

அதற்குப் பிறகு உடல்நிலை சரியில்லாமையால் படம் வரைவதை நிறுத்திவிட்டேன். (இப்போது மட்டும் யார் கேட்டார்கள்? என்ற கேள்வி காதில் விழுகிறது). 

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு பென்சில் ஓவியம் வரைந்ததை அவருக்காக வெளியிடுகிறேன். 





5 கருத்துகள்:

  1. படம் நன்றாய் இருக்கிறது.

    ஒரு பார்வையில் கோப யானை போல இருக்கிறது. இன்னொரு பார்வையில் எதோ ஒன்றைக் கண்டு நின்று குழப்பத்துடன் கேள்விக்குறியுடன் பார்ப்பது போலவும் இருக்கிறது. வலது காதில் ஏதோ காயம் போல இருக்கிறதே...

    நன்றாய் வரைந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த படத்தை வரைந்த எனக்கு எதுவும் தோன்றவில்லை. ஆனால் உங்கள் பார்வையில் இவ்வளவு தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இதுதான் படைப்பாளிக்கும் விமர்சனம் செய்பவர்களுக்கும் உள்ள வேறுபாடு. பாராட்டுக்கள். நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். இந்த யானை மனிதர்களால் துன்புறுத்தப்பட்டு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட யானை. பாவம் பல மனிதர்களை போல தங்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளை எதிர்த்து போராட முடியாத நிலையில் உள்ள ஒரு வாயில்லா பிராணி.

      நீக்கு
  2. நன்றி ஸ்ரீராம் .
    யானைக்கு மதம் பிடிக்கும் வரை சாதுவான பிராணி.

    மதம் பிடித்தால் அது எல்லாவற்றையும் ஹதம் (அழித்து)செய்து விடும்.

    அதுபோல்தான் மனிதர்களும் மதத்தை பிடித்துக்கொண்டால் மதம் கொண்ட யானையாக மாறி ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள்

    ஆனால் மதத்தை பின்பற்றினால் மட்டுமே மத நல்லிணக்கம் அங்கு நிலவும்.

    பதிலளிநீக்கு
  3. நேத்தே எங்கள் பிளாக் பதிவில் முதலில் பட்டதே யானையும் அதன் இயலாமை வெளிப்படுத்தும் பார்வையும்தான் .மிக தத்ரூபமா இருக்கு ..அதன் மடங்கின காதுகள் யாருக்கோ கோபத்தை அடக்கி வைத்ததுபோல இருக்கு , நம்மை நம் இருப்பிடத்தை விட்டு பிரித்து தனியே நமக்கு தொடர்பற்ற இடத்தில விட்டா எப்படி இருக்கும் அதுபோலத்தான் யானையும் .

    பதிலளிநீக்கு
  4. ஒரு யானையை காட்டில் பிடித்து அதை பழக்கும் வரை அது அனுபவிக்கும் கொடுமைகளை 55 ஆண்டுகளுக்கு முன்பே நேரில் கண்டவன் நான்.என்ன செய்வது இதே துன்பத்தைத்தான் ஆப்ரிக்க பழங்குடியினர் அமெரிக்கர்களிடம் பல்லாண்டுகாலம் அனுபவித்தார்கள்.தங்கள் சுயநலத்திற்காக கொடிய விலங்குகளை விட கேவலமான மனித மிருகங்கள் சக மனிதர்களை கொடுமைப்படுத்துவதும் சிறுமைப்படுத்துவதும் ஆண்டாண்டு காலமாக தொடரும் அவலம். இதற்க்கு முடிவேயில்லை.

    பதிலளிநீக்கு