சனி, 13 அக்டோபர், 2018

இசையும் நானும் (330)-திரைப்படம்-கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன் பாடல்::கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்

Movie: Kandukondain Kandukondain
Music: A. R. Rahman
Singer(s): Hariharan, Mahalakshmi Iyer
Lyricist: Vairamuthu

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

காதல் முகம்  -கண்டு கொண்டேன்   

விரல் தொடும் தூரத்திலே 

வெண்ணிலவு கண்டுகொண்டேன் 
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து 
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி 
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் 
உயிரை உடைப்பாள் ஒருத்தி 


என் கண் பார்த்தது என் கை சேருமோ 
கை  சேராமலே கண்ணீர் சேருமோ 

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

காதல் முகம்  -கண்டு கொண்டேன்   


மலர்மஞ்சம் விழி கெஞ்சும் 
மனம் அஞ்சுமல்லவா 
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் 
உன் தஞ்சமல்லவா 
உன் தனிமைக்  கதவின் தாள் நீக்கவா 

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

காதல் முகம்  -கண்டு கொண்டேன்   


மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன் பூக்கள்  திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன் 

கண்களைத் திறந்துன் கனவுகள் வளர்க்கும் 
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும் 

உன்னைத் தேடியே இனி எனது பயணமோ 
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ 
ஏ  கனவு மங்கையே உனது மனது 
எனது மனதில் இணையுமோ 

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

காதல் முகம்  -கண்டு கொண்டேன்   

விரல் தொடும் தூரத்திலே 

வெண்ணிலவு கண்டுகொண்டேன்

நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது 
கடல் கொண்ட நதியோ முகம் தனை  இழக்கும் 
நான் உன்னில் கலந்தால் புது முகம்கிடைக்கும் 
நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன் 
எந்த நேரமும் உன் கதவைத் தட்டுவேன் 
ஏ காதல் தேவனே எனது இமையை 
உனது விழிகள் மூடுமே

கண்டுகொண்டேன் -கண்டு கொண்டேன்   

காதல் முகம்  -கண்டு கொண்டேன்   

விரல் தொடும் தூரத்திலே 

வெண்ணிலவு கண்டுகொண்டேன் 



2 கருத்துகள்:

  1. என்ன இவ்ளாம் பெரிய வீடியோ?!!

    சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் இசைப்பயணம்.

    கேட்டேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.ஆனால் மிக பெரிய பாடல். ஆண் குரலும் பெண் குரலும் மாற்றி மாற்றி ஒலிக்கும். அதை மிகவும் முயற்சி செய்து பாடலில் கொண்டு வந்திருக்கிறேன்.



      ஊக்கமும் இல்லை . உற்சாகமும் இல்லை.

      எப்படியோ 4 ஆண்டுகள் இசையும் நானும் பகுதியை ஒட்டி விட்டேன். 330 பதிவுகள் வெளியிட்டுவிட்டேன்.



      ஒவ்வொரு மாதமும் 10 பாடல்கள் வரை வெளியிட்டு வந்த நான் கடந்த ஒரு மாதமாக ஒரு பாடலை கூட வெளியிட முடியவில்லை.


      நடுவில் மீண்டும் ஓவியம் வரைய முயற்சி செய்து ஒரு யானை படத்தை வரைந்தேன். அதை அடுத்து வெளியிடுகிறேன்.


      மூட்டை கட்டிவிடலாம் என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் முடியவில்லை.



      கடந்த ஒரு மாதமாக இந்த ஒரே பாடலை பயிற்சி செய்து கொண்டு இருந்தேன். நெடுநாட்களாகிவிட்ட நிலையில் இந்த பாடலை நேற்று அரங்கேற்றி இன்று வெளியிட்டேன்.

      பாவக்காய் பச்சடி செய்வது எப்படி என்று பதிவு போட்டால். 1000 கருத்து வரும்.



      பாவனா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ஏதாவது புளுகினால் 100000 கருத்துவரும்.



      புதுமையானமுயற்சிகளுக்கு இந்த உலகம் என்றுமே ஆதரவு கரம் நீட்டியது கிடையாது.



      இருந்தாலும் நான் முயன்று கொண்டே இருப்பேன் உயிருள்ள வரை.

      ஏதாவது செய்துகொண்டே இருப்பேன்.

      நீக்கு