நானும் ஒரு ஓவியன் தான்.
ஆங்கிலத்திலே ஒரு பழமொழி ஒன்று உண்டு.
அது" Jack of all trades but master of none"
அதுபோல் எனக்கும் எல்லாவற்றின் மீதும் ஒரு
ஈர்ப்பு உண்டு.
ஆனால் ஒன்று எனக்கு பிடித்துவிட்டால் அதை
எத்தனை ஆண்டுகளானாலும் விடாப்பிடியாய்
முயற்சி செய்து அதை நிறைவேற்றிக்கொண்டு விடுவேன்.
அதில் ஓவியம் வரைவது எனக்கு பிடித்த ஒன்று.
1973 ஆம் ஆண்டு என் நண்பன் ஒருவன் பென்சிலால்
வரையப்பட்ட நாகேஷின் முகத்தை காண்பித்தான்.
அப்படியே அது கருப்பு வெள்ளை புகைப்படம் போல் இருந்தது.
அதை பார்த்தவுடன் நாமும் அதை முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியது.
அதனால் அவ்வப்போது பென்சிலால் படங்கள் வரைந்து அதை
மெருகேற்றுவதில் தனி ஆனந்தம் .
இன்று பென்சிலால் முப்பரிமாண படங்களை வரைந்து உலகெங்கும் ஓவியர்கள் கலக்குகிறார்கள்.
அதையும் ஒரு நாள் தொட்டுவிடுவேன். என்னுள்ளே இருக்கும் jack அதற்க்கு அனுமதிக்கவேண்டும்.
மயில்கள் எனக்கு மிகவும் பிடித்த பறவைகள். அதுவும் அது கூவும் அழகே அழகு. அதை அடிக்கடி கேட்டு பார்த்து ரசிப்பேன். அதன் அசைவுகள். ஆட்டம் பார்வை எல்லாமே அழகோ அழகு.
அந்த பென்சில் ஓவியம் இதோ.
பென்சிலால் முப்பரிமாண உருவமா? சீக்கிரமே அதையும் வரைந்து விடுவீர்கள்.
பதிலளிநீக்குஎண்ணிய எண்ணியாங்கெய்துப ..
மயிலின் படத்தையும் ரசித்தேன்.
உதடுகள் வறண்டுவிட்டன முன்புபோல் மவுத்தார்கன் வாசிக்க முடியவில்லை.முயற்சி செய்தால் .உதடுகள் ரணமாகி விடுகிறது என்னுடைய 1000 பதிவு கனவு நிறைவேறுமா .என்பது கேள்விக்குறி. இடைஇடையே படம் வரைவதில் கவனம் செலுத்தலாம் என்று நினைக்கிறேன்.
நீக்குஅழகான முயற்சி. அதை விடவும் தங்களுடைய தன்னம்பிக்க்கை வியக்க வைக்கிறது.‘முயற்சித் திருவினை யாக்கும்’. மவுத் ஆர்கனுக்கு சற்று ஓய்வு கொடுத்து இதைத் தொடருங்கள்.
பதிலளிநீக்குநன்றி அன்பன் கபீர் அவர்களே .இருந்தாலும் மவுத்தார்கனை விட முடியவில்லை 2 பாடல்களை வெளியிட்டுவிட்டேன்.கேட்டு ரசியுங்கள்.
நீக்கு