திருக்குறள் விளக்கம்-என் பார்வையில்
துறந்தார் பெருமை
குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
மு.வ உரை:
பற்றுக்களைத் துறந்தவர்களின்
பெருமையை அளந்து கூறுதல்,
உலகத்தில் இதுவரை பிறந்து
இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.
என் பார்வையில்:
மேலே கண்ட குறளுக்கு
தரப்பட்டுள்ள விளக்கம் சரியல்ல
என தோன்றுகிறது .
ஏனென்றால் துறந்தவர்களின்
பெருமை தனை என்று கூறியிருந்தால்
மேற்கண்ட பொருள் சரியாக இருக்கும்.
ஆனால் துணை என்று கூறப்பட்டிருப்பதால்
அந்த விளக்கம் சரியல்ல.
துறந்தவர்களின் பெருமைகளை பற்றி
வீணாக பேசிக்கொண்டிருப்பது எப்படி
என்றால் இந்த உலகத்தில் வாழ்ந்து
மடிந்து போனவர்களை பற்றி
கணக்கெடுத்துக்கொண்டு
ஆராய்ச்சி செய்வதால் என்ன பயன்?
அது வீண் வேலை என்று
திருவள்ளுவர் சொல்ல விழைகிறார்.
கடந்த அதாவது இறந்த காலத்தில்
வாழ்க்கையை வீணடிக்காதே,
நிகழ் காலத்தில் வாழ தொடங்கு என்கிறார்.
அவ்வாறு செய்யாமல் இருப்பது
அரிதாய் கிடைத்த மனித பிறவியை
வீணடிப்பது ஆகும் என்று பொருள்.
கிடைத்தற்க்கரிய
இந்த மனித பிறவியை
இறைவனை அறிந்துகொண்டு
அவனை அடைவதற்கு
பயன்படுத்தவேண்டுமே அல்லாது
இதை போன்ற வீண் செயல்களில்
ஈடுபடக்கூடாது என்பதே
இந்த குறளின்
பொருளாக இருக்க முடியும்.
JamesAlen-என்ற அறிஞன் சொன்னான்
It is a new life everyday
அதைதான் பாரதி சொன்னான்
இன்று புதிதாய் பிறந்தோம்
என்று அழகு தமிழில்.
Pl. remember.
yesterday is a dead-Horse -you can't ride on it.
துறந்தார் பெருமை கூறின் - அவர்களது பெருமையைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால் என்ற பொருள். துணைக் கூறின் - என்பது அளவிட்டுக் கூறின் என்றுதானே அர்த்தம் வரும். அவர்களது பெருமையை அளவிடமுடியாது. அதனால் அந்த வீண் வேலையைப் பார்க்காமல், நீயும் எப்படி 'பற்றைத் துறப்பது' என்பதை உன் வாழ்கையின் நோக்கமாகக் கொள் என்று புரிந்துகொள்ளலாமா?
பதிலளிநீக்கு'அளவிட முடியாது' என்பதைச் சொல்லத்தான் 'பிறந்தவர், இறந்தவர்' என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்று என் மனதுக்குப் படுகிறது.
'பிறவியை இறைவனை அறிந்துகொண்டு..... 'என்பதெல்லாம் அவரவர் மனநிலைக்கு ஏற்பப் பொருள் கொள்கிற மாதிரிதான் தோணுது. 'இதைப் போன்ற வீண் செயல்களில் ஈடுபடாமல், முடிந்தால் ஆசைகளைத் துறக்கப்பார், இல்லைனா அதை அனுபவித்துக்கொள்' தேவையில்லாமல் துறந்தவரின் பெருமையை அளக்க முற்படாதே என்றும் நீட்டிப் பொருள் கொள்ளலாம், அது தவறு என்ற போதிலும்.
இருந்தாலும் வித்தியாசமான சிந்தனை, இந்த இடுகை, எனக்கு குறளின் பொருளை அறிந்துகொள்வதில் நேரம் செலவழிக்க வைத்தது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குபாராட்டிற்காக திருக்குறளை பற்றி நான் எழுதவில்லை. எனக்கு அதன்மேல் ஓரு ஈர்ப்பு. அவ்வளவுதான்.
நீக்குஇன்று தமிழ்நாட்டில் தமிழுக்காக போராடும் பல தமிழ் போராளிகளுக்கு தமிழ் நூல்களை பற்றி /தமிழ்/தமிழர் வரலாறுகள் பற்றி /என் தமிழையே முறையாக தெரியாத /ஒன்றும் தெரியாது என்று அனைவருக்கும் தெரியும்.
எப்பொழுது திருவள்ளுவர் தான் எழுதிய குறளுக்கு
விளக்கம் தரவில்லையோ அது எடுப்பார் கைப் பிள்ளையாய்தான் இருக்கும்.
சிலர் கொஞ்சுவார்கள். சிலர் கிள்ளி அழ வைப்பார்கள். சிலர் அதை தொடவே மாட்டார்கள். ( தமிழ்நாட்டில் 6 கோடி தமிழர்கள் மற்றும் உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களில் எத்தனை பேருக்கு திருக்குறளை பற்றி தெரியும்.,அப்படி தெரிந்தவர்களில் எவ்வளவு குறட்பாக்கள் தெரியும்.பொருள் தெரியும் என்பதெல்லாம் கேள்விக்குறியே).சில நேரங்களில் யதார்த்தமான பொருள்தான் நமக்கு வாழ்விற்கு உதவியாக இருக்கும்.