இசையும் நானும் (352)-திரைப்படம்- பணத்தோட்டம் – 1963
பாடல்-என்னதான் நடக்கும்
MOUTHORGAN VEDIO-352
Movie Name : பணத்தோட்டம் – 1963
Song Name :என்னதான் நடக்கும்
Music : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
Singer: டி எம் .சவுந்தர்ராஜன்
Lyricist : கண்ணதாசன்
Song Name :என்னதான் நடக்கும்
Music : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
Singer: டி எம் .சவுந்தர்ராஜன்
Lyricist : கண்ணதாசன்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு - ஹாஹ
(என்னதான் நடக்கும்)
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே - ஹாஹ
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு - ஹாஹ
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
சரணங்கள் ஓகே. பல்லவி ஆரம்ப இரண்டு வரிகள் சற்றே டியூன் மாறுகிறது! மன்னிக்கவும், உங்களைக் குறை கூறவில்லை. உணர்ந்ததைக் கூறுகிறேன்.
பதிலளிநீக்குகேட்டேன், ரசித்தேன்.
நீங்கள் கூறுவது சரி. உடல் நிலை சரியில்லை.மூச்சடைக்கிறது. சளி ஓயாது இருமல் தொல்லை. வீட்டில் உடல்நிலை சரியில்லை. ஓய்வு இல்லை.உறக்கம் இல்லை விரைவில் 500 பாடல்களை தொட்டுவிட வேண்டும் என்ற வெறியில் பாடல்களை தேடி பிடித்து குறுகிய காலத்தில் பயிற்சி செய்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். யு டியூபில் இதுவரை 130 பேர் செய்துள்ளார்கள் என்பது எனக்கு ஒரு மகிழ்ச்சி. நான் அதிகத்திற்கு ஆசைப்படவில்லை. இப்படியே போய்க்கொண்டிருந்தால் போதும்.
நீக்குஉடல்நிலையை கவனித்துக்கொள்ளுங்கள் ஸார். அதுதான் முதல்பட்சம்.
நீக்குஎன் உடல் வலிகளின் கூடாரம். அதை துரத்த முடியாது.அதோடு தான் வாழ்ந்தாக வேண்டும்.அதற்க்கு எந்த மாத்திரைகளையும் நன் எடுத்துக்கொள்வது கிடையாது. டயபடிக் மாத்திரைகள் மட்டும் விதிவிலக்கு. இருக்கும் வரை ஏதாவது ஒன்று செய்து கொண்டிருக்கவேண்டும். தற்போது இசை ஒன்றுதான். .
நீக்கு