இசையும் நானும் (339)-திரைப்படம்- அவன்தான் மனிதன் (1975) பாடல்- ஆட்டுவித்தால் யாரொருவர்....
பாடல்- ஆட்டுவித்தால் யாரொருவர்.
இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
MOUTHORGAN VEDIO-339
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா (ஆட்டுவித்தால் )
நீ நடத்தும் நாடகத்தில் நானும் ஒன்று
என் நிழலில் கூட அனுபவத்தின் சோகமுண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே (நண்பனிடம்) (ஆட்டுவித்தால்)
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் (நன்மை)(ஆட்டுவித்தால்)
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
அதை உணர்ந்துகொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா (உணர்ந்துகொண்டேன்) (ஆட்டுவித்தால்)
images courtesy-google images
கேட்டேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி
நீக்குரொம்ப அருமையா இருக்கு சார் ..
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குஇசை கேட்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி .அவ்வப்போது வருகை தந்து ஊக்கப்படுத்துங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்
நீக்கு