ஞாயிறு, 2 டிசம்பர், 2018

இசையும் நானும் (337)-திரைப்படம்- பாவ மன்னிப்பு (1961) பாடல்- வந்த நாள் முதல் இந்த நாள் வரை

இசையும் நானும் (337)-திரைப்படம்-

பாவ மன்னிப்பு (1961)


பாடல்- வந்த நாள் முதல் இந்த நாள் வரை

இசை :விஸ்வனாதன்-ராமமூர்த்தி
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

MOUTHORGAN VEDIO-337



57 ஆண்டுகளாகியும் என் நினைவில் நீங்காது நிற்கும் பாடல். 
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
 நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2)

நிலை மாறினால் குணம் மாறுவான்  - பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான்  - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான்  - அது
வேதன் விதியென்றோதுவான் 
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2)
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2)
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே 
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

ம் ஹ்ம் ம் ஹ்ம்

(வந்த நாள்) . 



4 கருத்துகள்:

  1. ஆரம்ப இசையைக் கூட விசிலில் கொண்டு வந்து விட்டீர்கள் போல... அருமை.

    கேட்டேன், ரசித்தேன். நன்றாய் வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி .இந்த பாடலை நான் 10 வயதாக இருக்கும்போது வானொலியில் கேட்டேன். அப்போது படம் பார்ப்பதற்கு வசதியும் கிடையாது அனுமதியும் கிடையாது. தின தந்தி நாளிதழில் விளம்பரம் மட்டும் பார்த்தேன். 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை பார்த்தேன். இந்த பாடல்வரிகள் முழுவதும் எனக்கு மனப்பாடம். . இந்த பாடலில் . இந்த விசிலை இசைப்பதற்கு ரொம்பவும் பாடுபட்டேன். 2 நாட்கள் போராடினேன். ஏனென்றால் முதல் இரண்டு வரிகள் இசைப்பது மட்டும் முடிந்தது. மூன்றாவது வரியை இசைக்கும்போது மூச்சே இல்லை. நாக்கு வேறு ஒத்துழைக்க மறுத்தது. இருந்தாலும் ஒருவழியாக இசைத்துவிட்டேன்.."பறவையைக் கண்டான்" வரிகளுக்கு முன் வயலின் இசையைக் கூட இசைத்துள்ளேன். நீங்கள் கவனிக்கவில்லையா? விசிலை தொடர்ந்து வரும் ஹம்மிங்கையும் மவுத்தார்கனில் கொண்டு வந்துள்ளேன். நான் ஏற்கெனவே இசைத்த (ஹிந்து பனேகா யா முஸல்மான் பனேகா" ஹிந்தி பாடலில்-பாடலில் உள்ள கருத்துக்களும் இந்த பாடலில் உள்ள கருத்துகளுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதை கவனித்தீர்களா?

      நீக்கு
    2. //."பறவையைக் கண்டான்" வரிகளுக்கு முன் வயலின் இசையைக் கூட இசைத்துள்ளேன். நீங்கள் கவனிக்கவில்லையா? //

      கவனித்தேன். சொல்ல விட்டுவிட்டேன். அந்த ஹிந்திப் பாடலை நீங்கள் வெளியிட்டபோது எனக்கும் இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது. அப்புறம் ஆடுபுலி ஆட்டம் படப்பாடலான "வானுக்கு தந்தை எவனோ" பாடலும் நினைவுக்கு வந்தது.

      நீக்கு
    3. நன்றி. நீங்கள் குறிப்பிட்ட பாடலை நான் கேட்டதில்லை. கேட்டு பார்க்கிறேன்.

      நீக்கு