படைத்தவனை சரணடைவோம்
வானில் உயரே
பறக்க வழியிருந்தும் நல்ல உணவை
உண்ணாது பூமியில்
அழுகிய பிணத்தை தேடி வயிறு
வளர்க்கும் கழுகு ,பருந்து போன்ற பறவைகள்
அதுபோல் இவ்வுலகில் மனிதர்கள் பலர்
வாழ்வில் நல்ல உயர்ந்த
நிலையை அடைந்த பின்னும்
அழியும் அற்ப பொருட்களையே நாடி தேடி ஓடி
அழிந்து போகின்றனர்
பூலோகனாதனை நினைந்து ,பணிந்து
உய்யும் வழியை நாடாது
தீயில் உருகி
காணாமல் போகும் உலோகங்களை
உடலில் அணிந்து உலா வருகின்றனர்.
நம் கண் முன்னே தோன்றி நாம் போடும்
உணவை உண்டு கொழுத்து நோயுற்று
நம் கண்முன்னே மண்ணுக்கு போகும்
உடலை நம்பி மோசம் போகின்றனர்
நம்மைப் படைத்தது மட்டுமல்லாமல்
நம் உடலுக்குள்ளே கோயில் கொண்டு
நம்மை இயக்கும் உத்தமனை அறிய
முயலாது ஏதேதோ பிதற்றி திரிகின்றனர்
இவ்வுலக மாந்தர்.
ஓராயிரம் நாமங்கள் கொண்ட அவன்தான்
இறைவன் என்று உண்மையை
அவனை உணர்ந்தோர் உரக்கக் கூறிடினும்
தான் வணங்கும் வடிவமே உண்மையான
தெய்வம் என்று உரிமை கொண்டாடி
உலகத்தில் குழப்பம் விளைவிக்கிறது
உண்மையை உணராக் கூட்டம்
படித்தவருக்கும் பாமரனுக்கும்
பரமனை அடையும் வழி ஒன்றே
அவன் பாதங்களைச் சரணடைந்து
அவன் நாமம் சொல்லி அனைத்து
உயிர்களுடன் அன்போடு இணைந்து
வாழ்வதே அவனை அடையும்
எளிதான வழி என்பதை அவனைக்
கண்டவர்கள் காட்டிய வழி.
படங்கள்-நன்றி-கூகுள்
//நம் கண்முன்னே மண்ணுக்கு போகும்
பதிலளிநீக்குஉடலை நம்பி மோசம் போகின்றனர்//
இந்நிலை என்று மாறுமோ
மனிதர்கள் மாற வேண்டும், திருந்த வேண்டும் ஐயா
திருந்துபவர்கள் திருந்துகிறார்கள். இல்லாவிடில் தொடர்ந்து வருந்துகிறார்கள்.
நீக்குஉயர்ந்த விஷயங்களை நாடாது அல்ப ஆசைகளில் மனம் உழலுகிறது என்பது உண்மை. பின்னர் வரும் கருத்துக்களை மனம் ஏற்றுக் கொண்டாலும் உதாரணமாகச் சொல்லப் பட்டிருக்கும் கழுகு பற்றிப் படித்தபோது மனதில் தோன்றியது : கழுகுகள் செய்வது உலக சுழற்சியில் ஒரு அற்புதமான சேவை அன்றோ? அழுகும் பொருட்கள் உலகுக்குக் கேடு செய்யாமல் அவற்றைக் காலி செய்து உலகுக்கு நன்மை செய்கின்றனவே...
பதிலளிநீக்குகழுகை உதாரணம் காட்டியது அதை இழிவுபடுத்தும் நோக்கம் அன்று. அது அதன் கடமையைச் செய்கிறது
நீக்குபல மனிதர்களைப்போல் தங்கள் கடமையையும் செய்யாமல் பிறரையும் அவர்களின் கடமையை செய்யவிடாமல் தடுப்பது இல்லை.
ஒரு மனிதன் தன் கீழான இயல்புகளிலிருந்து விடுபட்டு மேலான இயல்புகளை அடைய முயற்சி செய்து உயர்ந்த நிலையை அடைந்த பின்னும் மீண்டும் கீழ்த்தரமான எண்ணங்களை மனதிலிருந்து அப்புறப்படுத்தாமல் இருப்பதைத்தான் சுட்டி காட்டினேன்.
சிறந்த பதிவு
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
நன்றி யாழ்பாவாணர் அவர்களே
நீக்கு